கொழும்பு எஸ்.எஸ்.சி. சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகியுள்ள சுற்றுலா இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.
>> 18 வருடங்களின் பின் இலங்கையில் டெஸ்ட் தொடரை வென்ற இங்கிலாந்து
இரண்டு அணிகளுக்கும் இடையிலான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி தொடரை 2-0 என கைப்பற்றியுள்ள நிலையில், வைட்வொஷ் முறையிலான தோல்வியை தவிர்க்கும் நோக்கில் இலங்கை அணி இன்று (23) களமிறங்கவுள்ளது.
எஸ்.எஸ்.சி. மைதானத்தில் இரண்டு அணிகளும் இதுவரையில் 4 போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில் இலங்கை 2 வெற்றிகளை பெற்றுள்ளதுடன், இங்கிலாந்து அணி ஒரு வெற்றியை பெற்றிருக்கிறது.
இலங்கை அணியில் இன்றைய தினம் இரண்டு மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது. அணித் தலைவர் தினேஷ் சந்திமால் உபாதை காரணமாக இந்தப் போட்டியில் விளையாடவில்லை என்பதுடன், கௌஷால் சில்வா மற்றும் அகில தனன்ஜயவுக்கு பதிலாக தனுஷ்க குணதிலக மற்றும் லக்ஷான் சந்தகன் ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளனர்.
>> இலங்கை மண்ணில் உலக சாதனை படைத்த இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர்கள்
இதேவேளை இங்கிலாந்து அணி, இரண்டாவது போட்டியில் உபாதைக்குள்ளாகிய செம் கரன் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் எண்டர்சன் ஆகியோருக்கு ஓய்வு வழங்கியுள்ளதுடன், இவர்களுக்கு பதிலாக ஜோனி பெயார்ஸ்டோவ் மற்றும் ஸ்டுவர்ட் புரோட் ஆகியோர் அணியில் இணைந்துள்ளனர்.
இலங்கை அணி
திமுத் கருணாரத்ன, தனுஷ்க குணதிலக, தனன்ஜய டி சில்வா, குசால் மெண்டிஸ், அஞ்செலோ மெதிவ்ஸ், ரொஷேன் சில்வா, நிரோஷன் டிக்வெல்ல, டில்ருவான் பெரேரா, லக்ஷான் சந்தகன், சுராங்க லக்மால் (தலைவர்), மலிந்த புஸ்பகுமார
இங்கிலாந்து அணி
கீடொன் ஜென்னிங்ஸ், ரோய் பர்ன்ஸ், மொஹீன் அலி, ஜோ ரூட் (தலைவர்), பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், பென் போகஸ், ஆதில் ரஷீட், ஜொனி பெயார்ஸ்டோவ், ஜெக் லீச், ஸ்டுவர்ட் புரோட்