நான்கு நாடுகள் பங்கேற்கும் வலைப்பந்தாட்ட தொடர் இலங்கையில்!

Sri Lanka Netball

118

நான்கு நாடுகளைச் சேர்ந்த அணிகள் பங்கேற்கும் வலைப்பந்தாட்டப் போட்டித்தொடரை இவ்வருடம் கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நடத்த திட்டமிட்டுள்ளதாக இலங்கை வலைப்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவி விக்டோரியா லக்ஷ்மி தெரிவித்தார்.

மாலைத்தீவுகள் தேசிய அணி, கென்ய அணி, சிங்கப்பூர் முதன்மை குழாம் மற்றும் மலேசிய விளையாட்டுக் கழக அணி என்பவை இந்த தொடரில் பங்கேற்கவுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.

உலகின் அதிசிறந்த வீராங்கனை தர்ஜினியின் வாழ்க்கைப் பயணம்

குறித்த இந்த தொடரானது நடைபெறவுள்ள உலகக்கிண்ணத் தொடருக்கான ஆயத்தமாக நடைபெறவுள்ளது. நட்புரீதியான போட்டிகளாக நடைபெறவுள்ளதுடன், மே மாதம் இரண்டாவது மாதத்தில் போட்டிகள் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர் மற்றும் ஆயத்தங்கள் குறித்து  விக்டோரியா லக்ஷ்மி குறிப்பிடுகையில்,

“தென்னாபிரிக்கா செல்வதற்கு முன் போட்ஸ்வானாவில் பயிற்சி போட்டியில் விளையாட தேசிய அணி திட்டமிட்டுள்ளது. இது தென்னாப்பிரிக்கா செல்லும் வழியில் இருப்பதால் அதிக செலவு ஆகாது. அதேநேரம், நான்கு நாடுகளின் அணிகள் பங்கேற்கும் நட்புறவு தொடர் ஒன்றையும்  நடத்துகிறோம்” என்றார்.

>> மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க <<