இலங்கைக்கு கிரிகெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பங்களாதேஷ் இளையோர் அணிக்கும் இலங்கை இளையோர் அணிக்கும் இடையிலான நான்கு நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டியின் இரண்டாவது போட்டி இன்று (23) கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய மைதானத்தில் ஆரம்பமானது. இரண்டு போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியில் பங்களாதேஷ் இளையோர் அணி வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
டெஸ்ட் தொடரின் தோல்வியை தவிர்ப்பதற்கு இப்போட்டியில் வெற்றி பெற வேண்டிய நிலையில் இன்று களமிறங்கிய இலங்கை இளையோர் அணி நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடியது. அந்த வகையில் இன்றைய முதல் நாள் ஆட்ட நிறைவில் இலங்கை இளையோர் அணி 9 விக்கெட்டுகள் இழந்து 219 ஓட்டங்களை பெற்றிருந்தது.
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி கைது
இன்றைய தினம் இலங்கை இளையோர் அணி தமது முதலாவது விக்கெட்டுக்காக ஓட்டமெதுவும் பெறாத நிலையில் அணித்தலைவர் நிபுன் தனஞ்சய ஆட்டமிழந்து அரங்கு திரும்பினார். எனினும் இரண்டாவது விக்கெட்டுக்காக இணைந்த நவோத் பரணவிதான மற்றும் கமில் மிஷார ஆகிய இருவரும் 122 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டிருந்தவேளை கமில் மிஷார 52 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
அதனை தொடர்ந்து நவோத் பரணவிதான 79 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க இலங்கை இளையோர் அணி 144 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது. தொடர்ந்து களமிறங்கிய ஏனைய துடுப்பாட்ட வீரர்கள் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க இலங்கை அணி இன்றைய நாள் நிறைவில் 219 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 9 விக்கெட்டுகளை இழந்திருந்தது.
சிறப்பாக பந்து வீசிய பங்களாதேஷ் இளையோர் அணி வீரர் சஹீன் அலாம் 5 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்ததோடு மிரித்துன் ஜோய் சௌத்தரி 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருந்தார். போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நாளை (24) நடைபெறவுள்ளது.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<




















