நான் எப்போதும் விக்கெட்டிற்கு நேராகவே பந்துவீசுவேன் – வனிந்து ஹசரங்க

99

பாகிஸ்தான் அணிக்கெதிராக தற்போது நடைபெற்று வருகின்ற போட்டித் தொடரில் சகலதுறையிலும் பிரகாசிக்க முடிந்தமை மகிழ்ச்சியளிப்பதாகத் தெரிவித்த இலங்கை கிரிக்கெட் அணி வீரர் வனிந்து ஹசரங்க, எதிர்காலத்தில் மணிக்கட்டு (Legs Spin) பந்துவீச்சாளராக தொடர்ந்து அணியில் நீடிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாகவும் தெரிவித்தார். 

பாகிஸ்தானுக்கு எதிராக தற்போது நடைபெற்று வருகின்ற ஒருநாள் மற்றும் T20i தொடர்களில் இலங்கை அணிக்காக சகலதுறையிலும் பிரகாசித்து வருகின்ற இளம் வீரரான வனிந்து ஹசரங்க, அந்த அணியுடன் நடைபெற்ற முதல் T20i போட்டியில் 2 விக்கெட்டுகளையும், இரண்டாவது T20i போட்டியில் 3 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தார்.  

அவுஸ்திரேலிய தொடரில் வய்ப்பை இழக்கும் இலங்கையின் முன்னணி வீரர்கள்!

அவுஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கான இலங்கை T20i குழாத்தில் அதிகமான மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பில்லை …….

இந்த நிலையில், பாகிஸ்தானுடனான தொடரில் வெளிப்படுத்திய தனது பந்துவீச்சு திறமை குறித்து வனிந்து ஹசரங்க ThePapapre.com இணையத்தளத்துக்கு வழங்கிய விசேட செவ்வியில் கருத்து வெளியிடுகையில்,

“உண்மையில் அணிக்குத் தேவையானதை சரியான நேரத்தில் செய்யக் கிடைத்தமை மகிழ்ச்சியளிக்கிறது. பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்று முடிந்த இரண்டு T20 போட்டிகளிலும் எனது 100 சதவீத பங்களிப்பினை இலங்கை அணிக்கு வழங்கி அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தேன். அதிலும், முதல் 5 ஓவர்களில் பந்துவீசுவதற்கான வாய்ப்பும் எனக்கு கிடைத்தது

இதன்போது பாகிஸ்தான் வீரர்களுக்கு நெருக்கடி கொடுத்து ஓட்டங்களைக் குறைவாகக் கொடுத்திருந்ததுடன், விக்கெட்டுக்களையும் கைப்பற்ற முடிந்தது.

மணிக்கட்டு சுழல் பந்துவீச்சளார்கள் எப்போதும் விக்கெட்டுக்கு நேராகப் பந்துவீசினால் நிச்சயம் எதிரணி வீரர்களுக்கு ஓட்டங்களை எடுப்பது மிகவும் கடினமாக இருக்கும். ஏனெனில் நானும் ஒரு துடுப்பாட்ட வீரர் என்பதால் இதை நன்கு அறிவேன்

அதேபோல விக்கெட்டை கைப்பற்றுவதற்கான வாய்ப்பும் கிடைக்கும். எனவே, ஒரு மணிக்கட்டு சுழல் பந்துவீச்சாளராக நானும் விக்கெட்டுக்கு நேராகப் பந்துவீசவே எப்போதும் முயற்சி செய்வேன்” என தெரிவித்தார்.

இதேநேரம், பயிற்சிகளின்போது களத்தடுப்புக்காக அதிக நேரங்கள் எடுத்துக் கொள்கின்றீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர்

“நான் பயிற்சிளை எடுக்கின்ற போது பெரும்பாலும் களத்தடுப்பில் ஈடுபடுவதற்கு தான் அதிக நேரங்களை எடுப்பேன். போட்டியின் போதும் என்னை நோக்கி தான் அனைத்து பந்துகளும் வரும் என்ற எண்ணத்துடன் இருப்பேன். இதனால் தான் களத்தடுப்பின் போது நான் எப்போதும் முன்னிலை பெற்ற வீரராக இருந்து வருகிறேன்” என தெரிவித்தார்.

இந்த நிலையில், இலங்கை அணிக்குள் மீண்டும் இடம்பெறுவதற்கு எவ்வாறான திட்டங்களை மேற்கொண்டீர்கள் என எழுப்பிய கேள்விக்கு வனிந்து ஹசரங்க பதிலளித்த போது

எனக்கு சுமார் ஒன்றை வருடங்கள் இலங்கை அணியில் இடம்பெறும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அந்தக் காலப்பகுதியில் பயிற்சிகளில் அதிக கவனம் செலுத்தியிருந்ததுடன், ப்ரீமியர் லீக், மாகாணங்களுக்கிடையிலான தொடர் மற்றும் இலங்கை வளர்ந்துவரும் அணிக்காக விளையாடி எனது திறமைகளை வெளிப்படுத்தினேன். இதனால், எனக்கு மீண்டும் தேசிய அணியில் இடம்பெறுவதற்கான வாய்ப்பு கிடைத்தது.   

இதனிடையே, தன்னுடைய துடுப்பாட்டத்தில் இன்னும் முன்னேற்றம் காண வேண்டும் என தெரிவித்த வனிந்து ஹசரங்க, அதுதொடர்பில் எதிர்வரும் காலத்தில் அதிக கவனம் செலுத்துவேன் எனவும் குறிப்பிட்டார்.

எனக்கு பொதுவாக 6ஆவது, 7ஆவது அல்லது 8ஆவது இடங்களில் தான் துடுப்பெடுத்தாடுவதற்கான வாய்ப்பு கிடைக்கும். அந்த நேரத்தில் மத்திய ஓவர்களில் எவ்வாறு துடுப்பெடுத்தாட வேண்டும் என்பது தொடர்பில் பயிற்சிகளை எடுத்து முன்னேற்றம் செய்து கொள்ள வேண்டும் எனவும் வனிந்து கூறினார்.

நாம் எல்லா துறைகளிலும் தோல்வியை எதிர்கொண்டுள்ளோம் – மிஸ்பா உல் ஹக்

இலங்கை கிரிக்கெட் அணியுடனான ஒருநாள் ……..

இதேவேளை, இளம் வீரர்களைக் கொண்ட ஒரு அணியாக T20i தொடரில் பாகிஸ்தானை வீழ்த்துவதற்கு முடிந்தமை குறித்து வனிந்து ஹசரங்க பதிலளிக்கையில்,  

“உண்மையில் இளம் வீரர்களைக் கொண்ட அணியாக நாங்கள் போட்டிக்கு முன் அதிகம் பேசிக் கொள்வோம். ஏனெனில், கழக மட்டப் போட்டிகளில் ஒன்றாக விளையாடிய வீரர்கள் தான் இந்த அணியில் இடம்பெற்றுள்ளனர். எனவே, குறை நிறைகள் இருந்தால் அவற்றை எடுத்துச் சொல்லி இலகுவாக சரிசெய்து கொள்ள முடியம்

அதேபோல, போட்டியின் போது மைதானத்தில் தவறுகளை இழைத்திருந்தால் அவற்றை சுட்டிக்காட்டி மீண்டும் அந்த தவறை செய்யாமல் இருக்க பார்த்துக் கொள்ள முடியும். எனவே, இவ்வாறான சின்னச் சின்ன விடயங்களை திட்டமிட்டு செய்ததன் காரணமாகத் தான் இந்தத் தொடரை எம்மால் வெற்றி கொள்ள முடிந்தது” என அவர் தெரிவித்தார்.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<