சகல துறைகளிலும் பிரகாசிக்கும் மதீஷ பெரேரா

146

இலங்கை கிரிக்கெட் சபை நடாத்தும் 2017/18ஆம் ஆண்டு உள்ளுர் பருவ காலத்திற்கான ப்ரீமியர் லீக் B பிரிவு தொடரின் போட்டிகள் யாவும் இன்று நிறைவுற்றன.

களுத்துறை நகர் கழகம் எதிர் காலி கிரிக்கெட் கழகம்

மொரட்டுவை டி சொய்சா மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவுற்றது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற களுத்துறை அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. இதன்படி களமிறங்கிய களுத்துறை நகர் அணி, ரத்னாயக ஆட்டமிழக்காது பெற்ற 133 ஓட்டங்கள் மற்றும் மதீஷ பெரேரா பெற்ற 122 ஆகிய ஓட்டங்களின் உதவியுடன் 379 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்கு தமது முதலாவது இன்னிங்சுக்காக துடுப்பெடுத்தாடிய காலி கிரிக்கெட் கழகம் 274 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. அவ்வணி சார்பாக சானக விஜேசிங்ஹ சதம் கடந்தார்.

சொஹான், பிரனீத்தின் சிறந்த பந்து வீச்சினால் விமானப்படை அணிக்கு இன்னிங்ஸ் வெற்றி

தொடர்ந்து தமது இரண்டாவது இன்னிங்சைத் தொடர்ந்த களுத்துறை நகர் அணி 191 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்திருந்த வேளை ஆட்ட நேரம் முடிவடைய, போட்டி சமநிலை அடைந்தது

போட்டியின் சுருக்கம்

களுத்துறை நகர் கழகம் (முதலாவது இன்னிங்ஸ்) – 379 (112.5) – ரத்னாயக 133*, மதீஷ பெரேரா 122, கயான் சிரிசோம 7/115, கிரிஷான் அபேசூரிய 2/70

காலி கிரிக்கெட் கழகம் (முதலாவது இன்னிங்ஸ்) – 274 (86) – சானக விஜேசிங்ஹ 106, லசித் பெர்னாண்டோ 55, மதீஷ பெரேரா 3/54, ரவீந்து திலகரத்ன 3/92

களுத்துறை நகர் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 191/4 (45) – மதீஷ பெரேரா 86, நிலுஷன் நோனிஸ் 34*, எரங்க ரத்னாயக 36*, விராஜ் பெரேரா 2/25

முடிவு – போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவுற்றது.


பொலிஸ் விளையாட்டுக் கழகம் எதிர் குருநாகலை இளையோர் விளையாட்டுக் கழகம்

குருநாகலை வெலகெதர மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடித்துக்கொள்ளப்பட்டது.

இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற குருநாகல் இளையோர் அணி முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை பொலிஸ் அணிக்கு வழங்கியது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பொலிஸ் விளையாட்டுக் கழகம் தமது முதல் இன்னிங்சுக்காக சகல விக்கெட்டுக்களையும் இழந்து 270 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்கு தமது முதல் இன்னிங்சுக்காக  துடுப்பெடுத்தாடிய குருநாகலை இளையோர் அணி 156 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. பந்துவீச்சில் பொலிஸ் விளையாட்டுக் கழகத்தின் நிமேஷ் விமுக்தி 5 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்.

தொடர்ந்து தமது இரண்டாவது இன்னிங்சுக்காக துடுப்பெடுத்தாடிய பொலிஸ் விளையாட்டுக் கழகம் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 271 ஓட்டங்களைப் பெற்று ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டது. அவ்வணி சார்பாக ஹசித டி சில்வா 99 ஓட்டங்களையும் தினுஷ பெர்னாண்டோ 97 ஓட்டங்களையும் பெற்றனர்.

பங்களாதேஷுக்கு எதிரான இலங்கை டெஸ்ட் அணி அறிவிப்பு

தொடர்ந்து தமது இரண்டாவது இன்னிங்சுக்காக துடுபெடுத்தாடிய குருநாகலை இளையோர் அணி இன்றைய மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவின் போது 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 230 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளை போட்டி சமநிலையில் முடித்துக்கொள்ளப்பட்டது.   

போட்டியின் சுருக்கம்

பொலிஸ் விளையட்டுக் கழகம் (முதலாவது இன்னிங்ஸ்) – 270 (94.1) – தினுஷ பெர்னாண்டோ 61, தரிந்து தில்ஷான் 52, சமித் துஷாந்த 37, லக்மால் டி சில்வா 38, கேஷான் விஜேரத்ன 5/37, துஷித டி சொய்சா 2/49

குருநாகலை இளையோர் விளையாட்டுக் கழகம் (முதலாவது இன்னிங்ஸ்) – 156 (52.2) – தனுஷ தர்மசிறி 67, ருவந்த ஏகநயக 25, நிமேஷ் விமுக்தி 5/60, தரிந்து சிறிவர்தன 3/32

பொலிஸ் விளையட்டுக் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 271/6d (62) – ஹசித டி சில்வா 99, தினுஷ பெர்னாண்டோ 97, மலித் குரே 1/10

குருநாகலை இளையோர் விளையாட்டுக் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 230/6 (56) தமித் பெரேரா 84, தனுஷ்க தர்மசிறி 64, நிமேஷ் விமுக்தி 3/103

முடிவு – போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவுற்றது.


கடற்படை விளையாட்டுக் கழகம் எதிர் நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம்

வெலிசறை கடற்படை விளையாட்டு மைதானத்தில் வெள்ளிக்கிழமை (12) ஆரம்பமான இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நீர்கொழும்பு அணி முதலில் துடுப்பெடுத்தாடும் சந்தர்ப்பத்தை கடற்படை அணிக்கு வழங்கியது. இதன்படி முதலில் துடுப்பாடக் களமிறங்கிய கடற்படை அணி தமது முதல் இன்னிங்சுக்காக சகல விக்கெட்டுக்களையும் இழந்து 342 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் குசல் எடுசூரிய ஆட்டமிழக்காது 121 ஓட்டங்களைப் பெற்றார்.

பதிலுக்கு தமது முதலாவது இன்னிங்சுக்காக துடுப்பெடுத்தாடிய நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 326 ஓட்டங்களைப் பெற்றது. அவ்வணி சார்பாக பிரசன்ன ஜயமான்ன 77 ஓட்டங்களைப் பெற்றார்.

தொடர்ந்து தமது இரண்டாவது இன்னிங்சைத் தொடர்ந்த கடற்படை அணி 6 விக்கெட்டுக்களை இழந்து 157 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளை போட்டி சமநிலையில் முடித்துக்கொள்ளப்பட்டது.

போட்டியின் சுருக்கம்

கடற்படை விளையாட்டுக் கழகம் (முதலாவது இன்னிங்ஸ்) – 342 (111.4) குசல் எடுசூரிய 121*, புத்திக்க ஹசரங்க 80, சுபுன் லீலரத்ன 27, உமேக சதுரங்க 4/145, ஷெஹான் வீரசிங்ஹ 2/57, ரொஷேன் பெர்னாண்டோ 3/68

நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் (முதலாவது இன்னிங்ஸ்) – 326 (128.2) – பிரசன்ன ஜயமான்ன 77, அகீல் இன்ஹாம் 66, லசித் க்ரூஸ்புள்ளே 52, இஷான் அபேசேகர 4/140, திலங்க ஒவார்ட் 3/91

கடற்படை விளையாட்டுக் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 157/6 (50) – துஷான் ஹேமந்த 45, சுபுன் லீலரத்ன 42, உமேக சதுரங்க 4/58

முடிவு – போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவுற்றது.