இலங்கை கிரிக்கெட் சபை பதினாருவர் அணிக்கு எதிராக கொழும்பு என்.சி.சி. மைதானத்தில் நடைபெற்ற முதலாவது இரண்டு நாட்கள் கொண்ட பயிற்சிப் போட்டியில் இங்கிலாந்து கிரிக்கெட் அணித் தலைவர் ஜோ ரூட் சதமடித்தும், போட்டி வெற்றி தோல்வியின்றி சமனிலையில் நிறைவுக்கு வந்ததுள்ளது.
பயிற்சிப் போட்டியில் அதிசிறந்த துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய இலங்கை அணி
இலங்கை கிரிக்கெட் சபை பதினொருவர் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான பயிற்சிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை…
போட்டியின் முதலாம் நாளான நேற்று (30) நாணய சுழற்சியில் வெற்றிபெற்று, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை கிரிக்கெட் சபை பதினொருவர் அணி ஆட்டநேர முடிவில் 392 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்த நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது.
இலங்கை அணி சார்பில் அதிகபட்சமாக கௌஷால் சில்வா 62 ஓட்டங்கள், மனோஜ் சரச்சந்திர 59 ஓட்டங்கள், சதீர சமரவிக்ரம 58 ஓட்டங்கள் மற்றும் அஷான் பிரியன்ஜன் 50 ஓட்டங்கள் என துடுப்பாட்டத்தில் அணிக்கு சிறப்பான பங்களிப்பை வழங்கியிருந்தனர். இங்கிலாந்து அணி சார்பில் மொயீன் அலி அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பின்னர், இன்றைய தினம் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய இங்கிலாந்து அணி ஜோ ரூட்டின் சதம், மொயீன் அலியின் அரைச்சதம், ஜோஸ் பட்லர் மற்றும் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் ரோரி பர்ன்ஸ் ஆகியோரின் சிறந்த துடுப்பாட்ட வெளிப்படுத்தல்கள் ஊடாக, ஆட்டநேர முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 365 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இங்கிலாந்து அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் கீடொன் ஜென்னிங்ஸ் மற்றும் இலங்கை அணிக்கு எதிரான T20I போட்டியில் சுழற்பந்து வீச்சால் மிரட்டிய ஜோ டென்லி ஆகியோர் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர். அதேநேரம், மற்றுமொரு ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான ரோரி பர்ன்ஸ் 47 ஓட்டங்களை பெற்று, ரன்–அவுட் மூலமாக துரதிஷ்டவசமாக ஆட்டமிழந்தார்.
T20I தரவரிசையில் பாபர் அசாமுக்கு முதலிடம்; திசர முன்னேற்றம்
சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ICC) நேற்று (29) வெளியிட்டுள்ள சர்வதேச T20 போட்டிகளுக்கான துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலில்…
எனினும், தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய அணித் தலைவர் ஜோ ரூட் 100 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து, ஏனைய வீரர்களுக்கு துடுப்பாட்ட வாய்ப்பை வழங்கும் வகையில் மைதானத்திலிருந்து வெளியேறினார். இதன் பின்னர் சிறந்த பந்து வீச்சுப் பிரதியை வெளிப்படுத்திய நிசான் பீரிஸ் இங்கிலாந்து வீரர்களான ஜோஸ் பட்லர், மொயீன் அலி மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஆகியோரை ஆட்டமிழக்கச் செய்ய, இங்கிலாந்து அணி ஆட்டநேர முடிவில் 365 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
வேகமாக ஓட்டங்களை குவித்த மொயீன் அலி 60 ஓட்டங்களையும், ஜோஸ் பட்லர் 44 ஓட்டங்களையும் பெற, பென் ஸ்டோக்ஸ் 31 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தனர். இலங்கை அணியின் பந்து வீச்சில் நிசான் பீரிஸ் 3 விக்கெட்டுகளையும், செஹான் மதுசங்க மற்றும் லஹிரு குமார ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதேவேளை இலங்கை கிரிக்கெட் சபை பதினொருவர் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது பயிற்சிப் போட்டி கொழும்பு கிரிக்கெட் கழக (CCC) மைதானத்தில் நாளை (01) ஆரம்பமாகவுள்ளது.
போட்டி சுருக்கம்
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<



















