டி வில்லியர்ஸின் மீள்வருகையை மறுத்த தென்னாபிரிக்கா?

4809
AB de Villiers

தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியிலிருந்து ஓய்வுபெற்ற முன்னணி துடுப்பாட்ட வீரர் ஏபி. டி. வில்லியர்ஸ் உலகக் கிண்ணத் தொடரில் விளையாடுவதற்கு விடுத்திருந்த கோரிக்கையை, தென்னாபிரிக்க கிரிக்கட் சபை மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வினை அறிவித்த ஏபி.டி.வில்லியர்ஸ்

தென்னாபிரிக்க அணியின் அதிரடி துடுப்பாட்ட ………..

உலகக் கிண்ணத் தொடரில் விளையாடி வரும் தென்னாபிரிக்க அணி தொடர்ச்சியாக தங்களுடைய மூன்று போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளது. முதல் போட்டியில் இங்கிலாந்துடனும், இரண்டாவது போட்டியில் பங்களாதேஷ் அணியுடனும், இறுதியாக மூன்றாவது போட்டியில் நேற்றைய தினம் (05) இந்திய அணியுடனும் தோல்வியடைந்திருந்தது.

இம்முறை உலகக் கிண்ணத்தில் எதிர்பார்க்கப்படும் அணியாக களமிறங்கிய தென்னாபிரிக்காவின் இந்த தோல்விகள் இரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தோல்விகளுக்கு தென்னாபிரிக்க அணியின் துடுப்பாட்டம் முக்கிய காரணமாக அமைந்துள்ளது என விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறான நிலையில், தென்னாபிரிக்க அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரரான ஏபி டி வில்லியர்ஸ் ஓய்வில் இருந்து மீண்டும் அணிக்கு திரும்பி உலகக் கிண்ணத் தொடரில் விளையாடுவதற்கு வேண்டுகோள் விடுத்தாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

இனிவரும் அனைத்து போட்டிகளிலும் வெற்றி கட்டாயம்: கிறிஸ் மொரிஸ்

இம்முறை உலகக் கிண்ண கிரிக்கெட் …….

உலகக் கிண்ணத் தொடருக்கான 15 பேர்கொண்ட தமது குழாத்தை தென்னாபிரிக்க கிரிக்கெட் சபை மே 24ம் திகதி அறிவித்தது. குறித்த தினத்துக்கு முதல் நாள், ஏபி. டி. வில்லியர்ஸ், தென்னாபிரிக்க அணியின் தலைவர் பெப் டு ப்ளெசிஸ், தலைமை பயிற்றுவிப்பாளர் ஓட்டிஸ் கிப்சன் மற்றும் தேர்வுக்குழு ஒருங்கிணைப்பாளர் லிண்டா ஷொண்டி ஆகியோரை சந்தித்து தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார். எனினும், அதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்ற பதில் அவருக்கு வழங்கப்பட்டதுடன், அவரது முடிவு தொடர்பில் எந்த பரிசீலனையும் மேற்கொள்ளவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டி வில்லியர்ஸின் இந்த வேண்டுகோளை தென்னாபிரிக்க கிரிக்கெட் சபை இரண்டு முக்கிய காரணங்களுக்காக நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வில்லியர்ஸ் உலகக் கிண்ணத்துக்கு சரியாக ஒருவருட கால எல்லைக்கு முன்னர் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்றார். இதன் பின்னர், அவர் தென்னாபிரிக்க அணியின் தேர்வுக் குழுவினரால் உள்வாங்கப்படவில்லை என்பதுடன், அணிக்காக சர்வதேச போட்டிகளிலோ அல்லது உள்ளூர் போட்டிகளிலோ விளையாடியிருக்கவில்லை.

ரோஹித்தின் சதத்துடன் இந்தியாவுக்கு முதல் வெற்றி

உலகக் கிண்ணத்தின் தங்களுடைய முதல் …..

அத்துடன், வில்லியர்ஸின் ஓய்வுக்கு பின்னர், அவரின் இடத்தை நிரப்பும் வகையில், ரஸ்ஸி வென் டெர் டஸன் போன்ற வீரர்கள் சிறப்பாக துடுப்பெடுத்தாடியிருந்தனர். வென் டெர் டஸன் தன்னுடைய முதல் 4 ஒருநாள் போட்டிகளில் 3 அரைச்சதங்களை கடந்திருந்து அணிக்கு வலுவளித்து வந்தார்.

இவ்வாறு வில்லியர்ஸ் விலகிய காலப்பகுதியில் அவரின் இடத்தை சிறப்பாக பூர்த்தி செய்த வீரர்களின் வாய்ப்பை பறிப்பது சிறந்த விடயமாக இருக்காது என்பதற்காகவே வில்லியர்ஸிற்கு  வாய்ப்பு வழங்கப்படவில்லை என கிரிக்கெட் சபையின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தென்னாபிரிக்க அணியின் முன்னாள் தலைவரும், சிறப்பான துடுப்பாட்ட வீரராகவும் வலம் வந்த ஏபி. டி வில்லியர்ஸ், கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல். தொடரில் விளையாடிய பின்னர், திடீரென தன்னுடைய ஓய்வை அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<