Home Tamil இலங்கை வளர்ந்துவரும் அணிக்காக சதமடித்து அசத்திய பிரமோத் மதுவந்த

இலங்கை வளர்ந்துவரும் அணிக்காக சதமடித்து அசத்திய பிரமோத் மதுவந்த

549

சுற்றுலா இலங்கை வளர்ந்துவரும் கிரிக்கெட் அணி மற்றும் தென்னாபிரிக்க வளர்ந்துவரும் கிரிக்கெட் அணிகளுக்கிடையில் நடைபெற்றுவரும் உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் தொடரின் 2ஆவது போட்டியின் மூன்றாம் நாளான இன்று (27) இலங்கை வளர்ந்துவரும் கிரிக்கெட் அணிக்காக துடுப்பாட்டத்தில் பிரகாசித்த இளம் வீரரான பிரமோத் மதுவந்த சதமடித்து அசத்தினார். 

22 வயதான இடதுகை துடுப்பாட்ட வீரரான பிரமோத், செரசன்ஸ் கழகத்துக்காக விளையாடி வருவதுடன், இப்பருவகாலத்தில் இரண்டு இரட்டைச் சதங்கள் உள்ளடங்கலாக ஒரு சதத்தினையும் குவித்திருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும். 

இலங்கை வளர்ந்துவரும் அணிக்காக பந்துவீச்சில் அசத்திய லசித் அம்புல்தெனிய

தென்னாபிரிக்க வளர்ந்துவரும் கிரிக்கெட் அணிக்கும், இலங்கை வளர்ந்துவரும் கிரிக்கெட் அணிக்கும் இடையில் நடைபெற்று வருகின்ற ….

இது இவ்வாறிருக்க, தமது இரண்டாவது இன்னிங்ஸுக்காக விளையாடிவரும் தென்னாபிரிக்கா வளர்ந்துவரும் கிரிக்கெட் அணி இன்றைய ஆட்ட நேர முடிவில் 145 ஓட்டங்களினால் முன்னிலை பெற்றது. 

தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை வளர்ந்துவரும் கிரிக்கெட் அணி இரண்டு போட்டிகள் கொண்ட உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றது. 

பிரிட்டோரியாவில் நடைபெற்றுவருகின்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நேற்றைய இரண்டாம் நாள் நிறைவில், தமது முதல் இன்னிங்சுக்காக துடுப்பெடுத்தாடிய இலங்கை வளர்ந்துவரும் கிரிக்கெட் அணி 217 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்டது. களத்தில் பிரமோத் மதுவந்த 46 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். 

போட்டியின் மூன்றாம் நாளான இன்று (27) தமது முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த இலங்கை வளர்ந்துவரும் கிரிக்கெட் அணி, 112.5 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 388 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

இலங்கை வளர்ந்துவரும் கிரிக்கெட் அணியின் துடுப்பாட்டம் சார்பில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய இளம் வீரர் பிரமோத் மதுவந்த சதம் கடந்து 111 ஓட்டங்களையும், பின்வரிசையில் களமிறங்கி அதிரடி காண்பித்த சகலதுறை வீரர் சாமிக்க கருணாரத்ன அரைச் சதம் பெற்று 53 ஓட்டங்கiளையும் பெற்றுக் கொண்டனர்.

இதேநேரம் தென்னாபிரிக்க வளர்ந்துவரும் அணியின் பந்துவீச்சில் மார்கோ ஜென்சன் 69 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களையும், தன்டோ நிட்னி 76 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களையும் வீழ்த்தியிருந்தனர்.

இதனையடுத்துது 53 ஓட்டங்கள் முன்னிலையுடன் தமது இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை தொடங்கிய, தென்னாபிரிக்க வளர்ந்துவரும் கிரிக்கெட் அணி தங்களுடைய முதல் விக்கெட்டினை 46 ஓட்டங்களுக்கு இழந்தது. ஆரம்ப துடுப்பாட்ட வீரர் வெண்டில் மெக்வெட்டு (26) லசித் எம்புல்தெனியவின் பந்து வீச்சில் LBW முறையில் ஆட்டமிழந்தார். 

இதனை அடுத்து ஜேன்மன் மலானுடன் ஜோடி சேர்ந்த அணித் தலைவர்  ரெய்னார்ட் வேன் டொன்டர் 2ஆவது விக்கெட்டுக்காக 75 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பகிர்ந்து வலுச்சேர்த்தார்.

இதன்படி, போட்டியின் மூன்றாம் நாள் நிறைவுக்கு வரும் போது தென்னாபிரிக்க வளர்ந்துவரும் அணி ஒரு விக்கெட்டினை மாத்திரம் இழந்து 92 ஓட்டங்களை எடுத்து முன்னலை பெற்றுக் கொண்டது. 

இலங்கை அணி வெற்றி ஓட்டத்தினை தொடருமா?

சுற்றுலா பங்களாதேஷ் – இலங்கை அணிகள் இடையிலான ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணி, 91 ஓட்டங்களால்…

தென்னாபிரிக்க வளர்ந்துவரும் அணியின் துடுப்பாட்டத்தில் ஜன்மன் மலான் 36 ஓட்டங்களையும், ரெய்னார்ட் வேன் டொன்டர் 20 ஓட்டங்களையும் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

இதேநேரம், இலங்கை வளர்ந்துவரும் அணியின் பந்துவீச்சில் லசித் எம்புல்தெனிய 42 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டினை வீழ்த்தியிருந்தார்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<< 

ஸ்கோர் விபரம்

Result


Sri Lanka Emerging Team
388/10 (112.5)

South Africa Emerging Team
441/10 (108.1) & 260/5 (90)

Batsmen R B 4s 6s SR
Janneman Malan b Jehan Daniel 35 38 5 0 92.11
Wandile Makwetu c Minod Bhanuka b Lasith Embuldeniya 25 53 2 1 47.17
Raynard van Tonder c Charith Asalanka b Lasith Embuldeniya 137 267 14 1 51.31
Jason Smith b Lasith Embuldeniya 34 62 1 1 54.84
Matthew Breetzke c Minod Bhanuka b Lasith Embuldeniya 13 27 0 0 48.15
Sinethemba Qeshile c Charith Asalanka b Lasith Embuldeniya 87 89 9 2 97.75
Dayyaan Galiem c Minod Bhanuka b Lasith Embuldeniya 8 16 2 0 50.00
Kyle Simmonds c Hasitha Boyagoda b Lasith Embuldeniya 73 57 8 3 128.07
M Jansen c Minod Bhanuka b Lasith Embuldeniya 3 19 0 0 15.79
Thando Ntini not out 14 29 1 0 48.28
Tladi Bokako run out (Pathum Nissanka) 0 0 0 0 0.00


Extras 12 (b 3 , lb 0 , nb 8, w 1, pen 0)
Total 441/10 (108.1 Overs, RR: 4.08)
Fall of Wickets 1-50 (13.1) Janneman Malan, 2-71 (17.2) Wandile Makwetu, 3-151 (41.5) Jason Smith, 4-173 (49.2) Matthew Breetzke, 5-326 (85.2) Sinethemba Qeshile, 6-342 (89.3) Dayyaan Galiem, 7-363 (93.4) Raynard van Tonder, 8-383 (99.2) M Jansen, 9-441 (107.6) Kyle Simmonds, 10-441 (108.1) Tladi Bokako,

Bowling O M R W Econ
Mohamed Shiraz 24 3 96 0 4.00
Kalana Perera 8 2 23 0 2.88
Chamika Karunarathne 16 3 61 0 3.81
Jehan Daniel 6 1 31 1 5.17
Lasith Embuldeniya 42 5 156 8 3.71
Nishan Peiris 10.1 0 57 0 5.64
Charith Asalanka 2 0 14 0 7.00
Batsmen R B 4s 6s SR
Lahiru Udara c Sinethemba Qeshile b M Jansen 8 14 2 0 57.14
Minod Bhanuka c Sinethemba Qeshile b Thando Ntini 56 65 8 1 86.15
Pathum Nissanka lbw b Thando Ntini 32 47 5 0 68.09
Charith Asalanka c Raynard van Tonder b Thando Ntini 18 26 2 0 69.23
Promod Maduwantha c Sinethemba Qeshile b Thando Ntini 111 236 9 0 47.03
Jehan Daniel c Sinethemba Qeshile b M Jansen 36 100 5 0 36.00
Kalana Perera c Jason Smith b Dayyaan Galiem 17 42 1 1 40.48
Chamika Karunarathne c Wandile Makwetu b M Jansen 53 97 4 0 54.64
Mohamed Shiraz c Jason Smith b M Jansen 23 50 3 0 46.00
Nishan Peiris not out 4 8 1 0 50.00
Lasith Embuldeniya c Raynard van Tonder b M Jansen 0 3 0 0 0.00


Extras 30 (b 12 , lb 4 , nb 11, w 3, pen 0)
Total 388/10 (112.5 Overs, RR: 3.44)
Fall of Wickets 1-13 (3.3) Lahiru Udara, 2-88 (19.2) Pathum Nissanka, 3-118 (23.4) Minod Bhanuka, 4-128 (25.6) Charith Asalanka, 5-217 (59.4) Jehan Daniel, 6-250 (74.3) Kalana Perera, 7-333 (99.2) Promod Maduwantha, 8-379 (110.1) Chamika Karunarathne, 9-388 (112.2) Mohamed Shiraz, 10-388 (112.5) Lasith Embuldeniya,

Bowling O M R W Econ
Tladi Bokako 16 1 53 0 3.31
M Jansen 19.5 5 69 5 3.54
Dayyaan Galiem 21 2 72 1 3.43
Thando Ntini 21 5 76 4 3.62
Kyle Simmonds 29 5 82 0 2.83
Jason Smith 6 1 21 0 3.50


Batsmen R B 4s 6s SR
Janneman Malan c Jehan Daniel b Kalana Perera 84 162 6 0 51.85
Wandile Makwetu lbw b Lasith Embuldeniya 26 63 2 0 41.27
Raynard van Tonder c Lahiru Udara b Lasith Embuldeniya 31 80 3 0 38.75
Jason Smith c Lahiru Udara b Promod Maduwantha 62 130 3 3 47.69
Matthew Breetzke not out 38 89 3 0 42.70
Sinethemba Qeshile c Jehan Daniel b Promod Maduwantha 1 13 0 0 7.69
Dayyaan Galiem not out 3 17 0 0 17.65


Extras 15 (b 1 , lb 0 , nb 14, w 0, pen 0)
Total 260/5 (90 Overs, RR: 2.89)
Fall of Wickets 1-46 (15.5) Wandile Makwetu, 2-129 (41.4) Raynard van Tonder, 3-185 (59.5) Janneman Malan, 4-245 (80.5) Jason Smith, 5-251 (84.5) Sinethemba Qeshile,

Bowling O M R W Econ
Kalana Perera 15 3 43 1 2.87
Lasith Embuldeniya 34 5 99 2 2.91
Mohamed Shiraz 5 1 17 0 3.40
Chamika Karunarathne 11 3 42 0 3.82
Jehan Daniel 4 2 7 0 1.75
Nishan Peiris 14 4 31 0 2.21
Promod Maduwantha 7 0 20 2 2.86