அபார பந்துவீச்சால் எதிரணிக்கு சவால் விடுத்த மொஹமட் ஷிராஸ்

1104

இலங்கை கிரிக்கெட் சபை ஏற்பாட்டில் (SLC) பிரிவு A கிரிக்கெட் கழகங்களுக்கு இடையிலான மேஜர் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் இன்றைய (30) தினம் ஆரம்பமாகியுள்ளது.  மூன்று நாட்கள் கொண்டதாக இப்போட்டிகள் நடத்தப்பட்டு வரும் நிலையில், முதல் வாரத்துக்கான ஆறு போட்டிகள் இன்றைய தினம் (30) ஆரம்பமாகியிருந்தன.

பிரிவு A கழகங்கள் இடையிலான முதல்தர கிரிக்கெட் தொடர் இவ்வாரம் ஆரம்பம்

பதுரெலிய கிரிக்கெட் கழகம் எதிர் BRC

மக்கொன சர்ரே கிராம கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பதுரெலிய கிரிக்கெட் கழக அணி, சுப்ரமணியம் ஆனந்த மற்றும் நதீர நாவல ஆகியோரின் அரைச்சதங்களுடன் 9 விக்கெட்டுகளை இழந்து 244 ஓட்டங்களை பெற்றுள்ளது.

சுப்ரமணியம் ஆனந்த 65 ஓட்டங்களையும், நதீர நாவல 57 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுக்க, அபாரமாக பந்துவீசிய மொஹமட் ஷிராஸ் 32 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

போட்டியின் சுருக்கம்

பதுரெலிய கிரிக்கெட் கழகம் – 244/9 (79) – சுப்ரமணியம் ஆனந்த 65, நதீர நாவல 57, மொஹமட் ஷிராஸ் 32/4

சோனகர் கிரிக்கெட் கழகம் – எதிர் இலங்கை துறைமுக அதிகாரசபை கிரிக்கெட் கழகம்

கொழும்பு பி.சரா மைதானத்தில் நடைபெற்று வரும் சோனகர் கிரிக்கெட் கழகம் மற்றும் இலங்கை துறைமுக அதிகாரசபை கிரிக்கெட் கழகங்களுக்கு இடையிலான போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடி வரும் சோனகர் கிரிக்கெட் கழகம் 144 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்துள்ளது.

Photo Album – SLPA SC Vs. Moors SC | Major League Tier A Tournament 2017/2018

போட்டியின் இடையில் மழை குறுக்கிட்ட நிலையில், சோனகர் கிரிக்கெட் கழகம் சார்பில் இரோஷ் சமரசூரிய 51 ஓட்டங்களையும், பபசர வதுகே 42 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தனர். பந்து வீச்சில் பண்டார 33 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

போட்டியின் சுருக்கம்

சோனகர் கிரிக்கெட் கழகம் – 144/4 (51.2) – இரோஷ் சமரசூரிய 51, பபசர வாதுகே 42, சி.பண்டார 33/2

நியூசிலாந்து செல்லும் இலங்கை அணியில் முக்கிய மாற்றங்கள்

NCC எதிர் றாகம கிரிக்கெட் கழகம்

கொழும்பு NCC மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடி வரும் NCC அணி இன்றைய நாள் ஆட்டநேர முடிவில் 124 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்துள்ளது.

Photo Album – NCC v Ragama CC – Major League Tier A Tournament 2017/2018

NCC அணி சார்பில் அஞ்செலோ பெரேரா 36 ஓட்டங்களையும், சாமிக கருணாரத்ன 23 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்றுக் கொடுத்துள்ளதுடன், நிஷான் பீரிஸ் 31 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

போட்டியின் சுருக்கம்

NCC – 124/5 (36) – அஞ்செலோ பெரேரா 36*, சாமிக கருணாரத்ன 23*, நிஷான் பீரிஸ் 31/2


செரசென்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் கொழும்பு கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம்

கொழும்பு கோல்ட்ஸ் அணியை அதன் சொந்த மைதானத்தில் எதிர்கொண்டு விளையாடி வரும் செரசென்ஸ் கிரிக்கெட் கழக அணி, மிலிந்த சிறிவர்தன மற்றும் அஷேன் பண்டார ஆகியோரின் அரைச்சதங்களின் உதவியுடன் இன்றைய நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 170 ஓட்டங்களை பெற்றுள்ளது.

Photo Album – Colts CC Vs. Saracens SC | Major League Tier A Tournament 2017/2018

மிலிந்த சிறிவர்தன அபாரமாக துடுப்பாடி 70 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து ஆட்டமிழக்க, அஷேன் பண்டார 58 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். பந்து வீச்சில் கவிஷ்க அஞ்சுல 21 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

போட்டியின் சுருக்கம்

செரசென்ஸ் கிரிக்கெட் கழகம் – 170/5 (62) – மிலிந்த சிறிவர்தன 70, அஷேன் பண்டார 63*, கவிஷ்க அஞ்சுல 21/3


SSC எதிர் கொழும்பு கிரிக்கெட் கழகம்

SSC மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று துடுப்பெடுத்தாடி வரும், SSC அணி, லக்ஷான் சந்தகனின் சுழலுக்கு தாக்குபிடிக்க முடியாமல் 229 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்துள்ளது.

Photo Album – CCC v SSC | Major League Tier A Tournament 2018/19

SSC அணிசார்பில் அதிகபட்சமாக கௌஷால் சில்வா 41 ஓட்டங்களை பெற்றுக்கொள்ள, அவருக்கு அடுத்தபடியாக சந்துன் வீரக்கொடி 35 ஓட்டங்களையும், சச்சித்ர சேனாநாயக்க 32 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர். பந்துவீச்சில் லக்ஷான் சந்தகன் 50 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளையும், லஹிரு கமகே 27 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடி வரும், கொழும்பு கிரிக்கெட் கழக அணி எந்தவித விக்கெட் இழப்பும் இன்றி இன்றைய ஆட்டநேர முடிவில் 24 ஓட்டங்களை பெற்றுள்ளது.

போட்டியின் சுருக்கம்

SSC – 229 (63) – கௌஷால் சில்வா 41, சந்துன் வீரகொடி 35, சச்சித்ர சேனாநாயக்க 32, லக்ஷான் சந்தகன் 50/4, லஹிரு கமகே 27/2

கொழும்பு கிரிக்கெட் கழகம் – 24/0 (10.1)

சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் தமிழ் யூனியன் கழகம்

கட்டுநாயக்க MCG மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சிலாபம் மேரியன்ஸ் அணி, 210 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்துள்ளது.

இந்த அணிசார்பில் ஹர்ஷ குரே 68 ஓட்டங்களையும், யஷோத லங்கா 48 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுக்க, ரமித் ரம்புக்வெல்ல 54 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Photo Album – Chilaw MCC v Tamil Union C & CA – “Major League Tier A Tournament 2018/19

பின்னர், பதிலுக்கு துடுப்பெடுத்தாடி வரும் தமிழ் யூனியன் கழகம் இன்றைய ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 31 ஓட்டங்களை பெற்றுள்ளது.

போட்டியின் சுருக்கம்

சிலாபம் மேரியன்ஸ் கழகம் – 210 (56.5) – ஹர்ஷ குரே 68, யசோத லங்கா 48, ரமித் ரம்புக்வெல்ல 54/5

தமிழ் யூனியன் கழகம் – 31/2 (13)

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க