அவிஷ்கவின் அதிரடி வீண்; பந்துவீச்சில் பிரகாசித்த மாலிங்க, திசர

80

இலங்கை கிரிக்கெட் சபை, உள்ளூர் கிரிக்கெட் கழகங்கள் இடையே நடாத்தும் அழைப்பு T20 தொடரின் காலிறுதிப் போட்டிகள் நான்கும் இன்று (17) நிறைவுக்கு வந்தன.

இன்று நடைபெற்ற காலிறுதிப் போட்டிகளில் வெற்றிகளைப் பதிவு செய்த சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம், றாகம கிரிக்கெட் கழகம், NCC மற்றும் கொழும்பு கிரிக்கெட் கழகம் ஆகியவை அரையிறுதிப் போட்டிக்கு தெரிவாகியிருக்கின்றன.

இலங்கை கிரிக்கெட் அணிக்கு நெருக்கடி தருமா ஜிம்பாப்வே?

இலங்கை கிரிக்கெட் அணிக்கு மலர்ந்திருக்கும் இந்த ஆண்டில் ஒரு சிறந்த ஆரம்பம்…

இதேநேரம் இன்று இடம்பெற்ற காலிறுதிப் போட்டிகளில் இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் வீரர்கள் பிரகாசித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இதில் கோல்ட்ஸ் கிரிக்கெட் கழக அணிக்காக விளையாடிய இலங்கை கிரிக்கெட் அணியின் முன்வரிசை துடுப்பாட்ட வீரர் அவிஷ்க பெர்னாந்து 76 ஓட்டங்கள் குவித்திருந்தார். எனினும், கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் அழைப்பு T20 தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு தெரிவான றாகம கிரிக்கெட் கழகத்திடம் 5 விக்கெட்டுக்களால் தோல்யைத் தழுவியிருந்தது. 

அழைப்பு T20 தொடரின் அரையிறுதிக்கு தெரிவாகிய ஏனைய அணிகளில் ஒன்றான கொழும்பு கிரிக்கெட் கழகத்திற்கு வனிந்து ஹஸரங்க தனது அபார பந்துவீச்சு காரணமாக 3 விக்கெட்டுக்களை கைப்பற்றி உதவினார். 

இதேநேரம், அரையிறுதிக்கு தெரிவான மற்னுமொரு அணியான NCC இற்கு விளையாடிய இலங்கை T20 அணித்தலைவர் லசித் மாலிங்க இராணுவப்படைக்கு எதிராக காலிறுதி மோதலில் 2 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

இதேவேளை இராணுவப்படை அணிக்காக விளையாடிய திசர பெரேரா 26 ஓட்டங்களோடு 2 விக்கெட்டுக்களை கைப்பற்றி சகலதுறைகளிலும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய போதிலும் அவரது ஆட்டம் வீணாகியிருந்தது.

சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் SSC

இடம் – பி. சரவணமுத்து மைதானம், கொழும்பு

சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் – 163/8 (20) – லசித் குரூஸ்புள்ளே 60, ஷெஹான் ஜயசூரிய 33, சச்சித்ர சேனநாயக்க 4/23

SSC – 149/8 (20) – சசித்ர சேனநாயக்க 36, தனுஷ்க குணதிலக்க 27, புலின தரங்க 2/19, ஷெஹான் ஜயசூரிய 2/23

முடிவு – சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் 14 ஓட்டங்களால் வெற்றி

Photos: Chilaw Marians CC vs SSC | SLC Invitation T20 Tournament 2019/20

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் றாகம கிரிக்கெட் கழகம்

இடம் – FTZ மைதானம், கட்டுநாயக்க

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் – 162/5 (20) – அவிஷ்க பெர்னாந்து 76, சதீர சமரவிக்ரம 39, ஷெஹான் சந்தருவன் 4/29

றாகம கிரிக்கெட் கழகம் – 163/5 (19) – ஜனித் லியனகே 44, மஹீஷ் தீக்ஷன 1/22

முடிவு – றாகம கிரிக்கெட் கழகம் 5 விக்கெட்டுக்களால் வெற்றி 

இந்தியாவுடன் புதிய வீரரை களமிறக்கவுள்ள நியூசிலாந்து அணி

தற்போது அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள்…

பதுரெலிய கிரிக்கெட் கழகம் எதிர் கொழும்பு கிரிக்கெட் கழகம்

இடம் – FTZ மைதானம், கட்டுநாயக்க

பதுரெலிய கிரிக்கெட் கழகம் – 159/6 (20) –  ஷெஹான் மதுசங்க 39*, தமித் பெரேரா 39*, வனிந்து ஹஸரங்க 3/19

கொழும்பு கிரிக்கெட் கழகம் – 163/3 (19.2) – மலிந்து மதுரங்க 62, அஷான் பிரியஞ்சன் 41*, ஷெஹான் மதுசங்க 3/20

முடிவு – கொழும்பு கிரிக்கெட் கழகம் 7 விக்கெட்டுக்களால் வெற்றி 

இராணுவப்படை கிரிக்கெட் கழகம் எதிர் NCC

இடம் – P. சரவணமுத்து மைதானம், கொழும்பு

Photos: NCC vs Army SC | SLC Invitation T20 Tournament 2019/20 | QF 2

இராணுவப்படை கிரிக்கெட் கழகம் – 148/8 (20) – லக்ஷான் எதிரிசிங்க 39, திசர பெரேரா 26, சாமிக்க குணசேகர 2/20, லசித் மாலிங்க 2/31

NCC – 152/4 (19.1) – மஹேல உடவத்த 57*, சத்துரங்க டி சில்வா 49*, திசர பெரேரா 2/25

முடிவு – NCC 6 விக்கெட்டுக்களால் வெற்றி

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<