கிரிக்கெட் உலகில் அண்மைக்காலமாக ஏற்படும் பல மாற்றங்களால் பாரம்பரிய கிரிக்கெட்டிலிருந்து நவீன கிரிக்கெட் பல முன்னேற்றங்களையும் மாற்றங்களையும் பெற்று வருகின்றது. டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஒருநாள் போட்டிகளுக்கும், பின்னர் T-20 போட்டிகளுக்கும் மாற்றம் பெற்ற கிரிக்கெட் தற்போது அதிரடியாக T-10 போட்டிகளை நடாத்த களம் காண ஆயத்தமாகவுள்ளது.

இந்திய அணியால் ஒரு நாள் தொடரில் வைட் வொஷ் செய்யப்பட்ட இலங்கை

10 ஓவர்கள், 7 அணிகள், 90 நிமிடங்கள் என மிகக் குறுகிய நேர எல்லைக்குள் 4 நாட்கள் நடைபெறவுள்ள இத்தொடர், கிரிக்கெட் உலகின் அதிரடி நட்சத்திரங்களான சஹீட் அப்ரிடி, குமார் சங்கக்கார, கிறிஸ் கெயில், விரேந்தர் செவாக் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் ஐக்கிய அரபு இராட்சியத்தின் சார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் இவ்வருட டிசம்பர் 21ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.  

உலகின் தலை சிறந்த 50 சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பல புதிய வீரர்களின் பங்குபற்றுதலுடன் ஆரம்பமாகவுள்ள இப்போட்டித் தொடருக்கான வீரர்களை ஏலம் எடுக்கும் நிகழ்வு வெகுவிரைவில் ஆரம்பமாகவுள்ளது. உலகின் மிக முக்கியமான கிரிக்கெட் தொடர்களை நடாத்திய பெருமையயைக் கொண்ட ஐக்கிய அரபு இராச்சியத்தின் சார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் இப்போட்டிகள் இடம்பெறவுள்ளமை சிறப்பம்சமாகும்.

விறுவிறுப்பான இத்தொடரின் ஒவ்வொறு போட்டியிலும் உலகின் பல்வேறு நாடுகளின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்களின் பங்குபற்றுதலுடன் போட்டிகள் இடம்பெறவுள்ளமை சிறப்பம்சமாகும். கிரிக்கெட் போட்டிகள் மட்டுமல்லாது பிரம்மாண்டமான ஆரம்ப நிகழ்வுகள், நடன மற்றும் இசை நிகழ்ச்சிகள் என பல மாற்றங்களுடன் இப்போட்டிகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பஞ்சாபிஸ், பக்தூன்ஸ், மராத்தா, பங்லாஸ், லங்கன்ஸ், சிந்திஸ் மற்றும் கேரலைடிஸ் என ஏழு அணிகளின் பங்குபற்றுதலுடன் இப்போட்டிகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இத்தருணம் வரை பக்தூன்ஸ் அணியின் தலைவராக சஹீட் அப்ரிடி தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன், பங்லாஸ் அணித் தலைவராக சகிப் அல் ஹசன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஏனைய அணிகளுக்கான வீரர்கள் எதிர்வரும் தினங்களில் இடம்பெறவுள்ள ஏலத்தில் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

சங்காவின் அதிரடியோடு கரீபியன் பிரிமியர் லீக் தொடரின் பிளே ஒப் சுற்றில் ஜமெய்க்கா தல்லாவாஸ் அணி

T-10 கிரிக்கெட் தொடரின் தலைவரும் ஐக்கிய அரபு இராட்சிய கிரிக்கெட் சபையின் உறுப்பினருமான சஜீ உல் முல்க் இது குறித்து கருத்துத் தெரிவிக்கையில் இப்போட்டிகளை நடாத்துவது குறித்து நாம் பெருமகிழ்ச்சி அடைகின்றோம். T-10 தொடர் கிரிக்கெட்டின் அடுத்த கட்டமாகும். T-20 போட்டிகள் நமக்கு தரும் மகிழச்சியைப் போல T-10 தொடரும் இருக்கும் எனத் தெரிவித்தார்  

பாகிஸ்தான் கிரிக்கெட்டின் அணியின் முன்னாள் விக்கெட் காப்பாளர் சஹீர் அப்பாஸ் கருத்துத் தெரிவிக்கையில் இது கிரிக்கெட் உலகின் நேரத்துக்குள் 90 நிமிடங்கள் உள்வாங்கப்பட்ட தருணமாகும். இது கிரிக்கெட்டின் அடுத்த கட்ட நகர்வகும் எனத் தெரிவித்தார்.