சரஸ்வதி T10 தொடரின் காலிறுதி முடிவுகள்

76

அரியாலை சரஸ்வதி சன சமூக நிலைய நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு யாழில் முதல் முறையாக நடத்தும் T10 கிரிக்கெட் தொடரின் காலிறுதி போட்டிகள் நேற்றைய தினம் யாழ் இந்துக் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றிருந்தன.

>>Photos: Ariyalai Saraswathy Centenary Ten 10 League – Quarter Finals<<

தோல்விகள் ஏதுமின்றி காலிறுதி போட்டிக்குள் நுழைந்திருந்த சென்றலைட்ஸ் அணியின் விக்கெட்டுக்களை விங்ஸ் அணியினர் விரைவாக சாய்த்தபோதும், பிரியலக்சனின் பெறுமதியான 27 ஓட்டங்களுடன் 87 ஓட்டங்களை அவ்வணி பெற்றது. பந்து வீச்சில் சிறப்பாக செயற்பட்ட சென்றலைட்ஸ் அணி விங்சினை 72 ஓட்டங்களிற்கு ஆட்டமிழக்கச் செய்து முதலாவது அணியாக அரையிறுதிக்குள் நுழைந்தது.

c குழுவில் முதலாவது இடம்பிடித்த ஜொனியன்ஸ் அணியினரை வெறுமனே 63 ஓட்டங்களிற்குள் மட்டுப்படுத்திய கொக்குவில் மத்தி அணியினர், ஜனுதாசின் அதிரடியான 35 ஓட்டங்களின் துணையுடன் 8 பந்துகள் மீதமாகவிருக்கையில் வெற்றியிலக்கினை அடைந்து, சென்றலைட்ஸ் உடனான அரையிறுதியில் தமது இடத்தினை உறுதிசெய்தனர்.

மற்றொரு காலிறுதி போட்டியில் துடுப்பாட்டம், பந்துவீச்சு என இரு துறைகளிலும் அசத்திய ஏபி அணி, திருநெல்வேலி அணியினை இலகுவாக வெற்றி கொண்டு அரையிறுதிக்குள் நுழைந்தது.

இதற்கு அடுத்தப்படியாக ஓல்ட் கோல்ட்ஸ் அணிக்காக பிரியலக்சன் ஆட்டமிழக்காது 53 ஓட்டங்களினை பெற்றுக்கொடுக்க, ஜொலி ஸ்டார்ஸ் அணிக்கு 98 என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஜொலி ஸ்டார்ஸ் அணி 7 விக்கெட்டுகள் சைவசம் இருக்க வெற்றியிலக்கை அடைந்தது.

அரியாலை சரஸ்வதியின் T10 தொடரில் பிரகாசித்த ஜொலி ஸ்டார்ஸ், ஏபி அணிகள்

அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையம் தனது நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு யாழ்…

போட்டியின் 4 .1 நிறைவில் 32 ஓட்டங்களிற்கு 3 விக்கெட்டுக்களை ஜொலி ஸ்டார்ஸ் அணி இழந்திருந்தது. அதன் பின்னர் கலம் புகுந்த ஜனார்த்தனன் அதிரடியாக 37 ஓட்டங்களையும், இறுதியில் கிரிஷாந்த் 12 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுக்க ஒரு ஓவர் மீதமாகவிருக்கையில் ஜொலி ஸ்டார்ஸ் அணி வெற்றி பெற்றது.

சென்றலைட்ஸ் எதிர் விங்ஸ் 

  • சென்றலைட்ஸ் 87 (9.5)பிரியலக்சன் 27, எட்வின் 3/14, மைக்கேல் 3/14
  • விங்ஸ் 72/9 (10)எட்வின் 23 

போட்டி முடிவு – 15 ஓட்டங்களால் சென்றலைட்ஸ் அணி வெற்றி

ஜோனியன்ஸ் எதிர் கொக்குவில் மத்தி 

  • ஜோனியன்ஸ் 63/8 (10) – காணாமிர்தன் 22
  • கொக்குவில் மத்தி 64/4(8.4) – ஜனுதாஸ்  35

 போட்டி முடிவு – 6 விக்கெட்டுகளால் கொக்குவில் மத்தி அணி வெற்றி

>>Photos: Ariyalai Saraswathy Centenary Ten 10 League – Day 02<<

திருநெல்வேலி எதிர் ஏபி

  • ஏபி 111/4 (10) – ஆதித்தன் 22,ராகுலன் 18
  • திருநெல்வேலி 79/8 (10) – தர்சிகன் 15, உத்தமன் 4/10

 போட்டி முடிவு – 32 ஓட்டங்களால் ஏபி அணி வெற்றி

ஓல்ட் கோல்ட்ஸ் எதிர் ஜொலி ஸ்டார்ஸ் 

  • ஓல்ட் கோல்ட்ஸ் 97/7 (10) – பிரியலக்சன் 53*, வாமணன்  3/06 
  • ஜொலி ஸ்டார்ஸ் 103/4 (8.5) – ஜனார்த்தனன்  37, வாமணன் 16

போட்டி முடிவு – 7 விக்கெட்டுக்களால் ஜொலி ஸ்டார்ஸ் அணி வெற்றி

காலிறுதி போட்டிகளின் நிறைவில் சென்றலைட்ஸ், கொக்குவில் மத்தி, ஏபி மற்றும் ஜொலி ஸ்டார்ஸ் அணிகள் அரையிறுதியில் தமது இடத்தினை உறுதி செய்துள்ளன. அரையிறுதி போட்டிகள் மற்றும் இறுதி போட்டி நாளை (14 ) யாழ் இந்துக் கல்லூரி மைதானத்தில் இடம்பெறவிருக்கின்றன.

அரையிறுதி மோதல்கள் 

  • சென்றலைட்ஸ் எதிர் கொக்குவில் மத்தி 
  • ஏபி எதிர் ஜொலி ஸ்டார்ஸ்

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<