சசெக்ஸ் அணியில் இணையும் ரஷித் கான்

26
Rashid Khan
@AFP

ஆப்கானிஸ்தான் அணியின் இளம் நட்சத்திர சுழல் வீரரான ரஷித் கான் கிரிக்கெட்டின் குறைந்த ஓவர்கள் கொண்ட T20 போட்டிகளில் சிறந்த ஆட்டத்தை காட்டுவதனால் அனைவராலும் பேசப்படும் ஒருவராக இருக்கின்றார்.

ஆப்கான் கிரிக்கெட் அணியின் அண்மைய வெற்றிகளுக்கு முக்கிய காரணமாக இருக்கின்ற 19 வயதேயான ரஷித் கான் பல்வேறு நாடுகளின் உள்ளூர் T20 போட்டிகளிலும் அசத்தலான ஆட்டத்தினை காண்பித்து உலகெங்கும் தனக்கென  இரசிகர்கள் பட்டாளத்தினையும் உருவாக்கி இருக்கின்றார்.

குளோபல் டி-20 தொடரிலிருந்து திசர, தசுன் மற்றும் இசுரு உதான விலகல்

ஐ.சி.சி இன் இணை அங்கத்துவ நாடான கனடா கிரிக்கெட்…

இப்படியாக பல்வேறு நாடுகளின் உள்ளூர் தொடர்களில் விளையாடி வரும் இவர், நாளை (04) ஆரம்பமாகவிருக்கும் இங்கிலாந்தின் T20 பிளாஸ்ட் தொடரிலும் சசெக்ஸ் அணிக்காக விளையாடவிருக்கின்றார்.

கரீபியன் பிரீமியர் லீக் T20 தொடர், பங்களாதேஷ் பிரீமியர் லீக் T20 தொடர் போன்றவற்றில் ஆடியிருக்கும் ரஷித், அவுஸ்திரேலியாவின் பிக் பாஷ் லீக் T20 தொடரில் அடிலைட் ஸ்ட்ரைக்கர்ஸ் அணிக்காவும், இந்தியன் பிரீமியர் லீக் T20 தொடரில் சன் ரைஸர்ஸ் ஹைதராபாத் அணிக்காகவும் விளையாடியிருந்தார்.

இதில், அடிலைட் ஸ்ட்ரைக்கர்ஸ் அணியின் பயிற்சியாளர் ஜேசன் கில்லெஸ்பியின் வேண்டுகோளுக்கு இணங்கவே ரஷித் கானை இங்கிலாந்தின் சசெக்ஸ் அணி ஒப்பந்தம் செய்திருக்கின்றது. அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான கில்லெஸ்பியே சசெக்ஸ் அணியின் பயிற்றுவிப்பாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

“ரஷித் கான் எங்களது ஒப்பந்தத்தினை ஏற்று எங்களுடன் இணைந்ததில் நாங்கள் மகிழ்ச்சி அடைகின்றோம். ஆப்கானிஸ்தான் அணிக்காகவும், ஏனைய T20 அணிகளுக்காகவும் கடந்த இரண்டு வருடகாலமாக அவர் வெளிப்படுத்திய ஆட்டம் பிரம்மிக்கத்தக்க வகையில் இருக்கின்றது.“ என ஜேசன் கில்லெஸ்பி ரஷித் கான் பற்றி பேசியிருந்தார்.

கிரிக்கெட் விளையாட்டின் ஒழுக்கம் தொடர்பான செயலி ஒன்றினை வெளியிட்டுள்ள ஐ.சி.சி

சர்வதேச கிரிக்கெட் பேரவையானது (ஐ.சி.சி.)…

இங்கிலாந்தின் கிரிக்கெட் மைதானங்கள் ரஷித் கான் வழமையாக பந்து வீசும் உலகின் ஏனைய நாடுகள் போன்று உலர்ந்ததாக இருப்பதில்லை. இதனால், அவருக்கு இங்கிலாந்தின் ஆடுகளங்களில் பந்துவீசுவது ஒரு புதிய சவாலாகவே இருக்கும் என கூறப்படுகின்றது.

அண்மையில் இங்கிலாந்தின் லோர்ட்ஸ் மைதானத்தில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிராக நடைபெற்ற T20 போட்டியில் உலக பதினொருவர் அணிக்காக ஆடிய ரஷித் கான் இரண்டு விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சசெக்ஸ் அணிக்காக ஒப்பந்தமாகியிருக்கும் ரஷித் T20 பிளாஸ்ட் தொடரில் விளையாட நேற்று  (03) இங்கிலாந்துக்கு பயணமாகியுள்ளார்.

T20 பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் இவர் உள்ளூர், சர்வதேச போட்டிகள் அடங்கலாக 116 T20 போட்டிகளில் ஆடி இதுவரையில் 166 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<