ரபாடா, ஸ்டெயினின் உலகக் கிண்ண வருகை குறித்து பயிற்சியாளர் கருத்து

59

மே 30 ஆம் திகதி நடைபெறவுள்ள இங்கிலாந்துக்கு எதிரான உலகக் கிண்ண ஆரம்பப் போட்டிக்காக தென்னாபிரிக்க வேகப்பந்து வீச்சாளர்களான ககிசோ ரபாடா மற்றும் டெல் ஸ்டெயின் இருவரும் மீண்டு வருவார்கள் என்று எதிர்பார்ப்பதாக தென்னாபிரிக்க பயிற்சியாளர் ஒட்டிஸ் கிப்ஸன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்த இருவரதும் வருகை தென்னாபிரிக்க அணிக்கு உற்சாகத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐ.பி.எல். தொடரிலிருந்து விலகும் காகிஸோ ரபாடா

ஐ.பி.எல். தொடரில் டெல்லி கெப்பிட்டல்ஸ் ………….

அண்மையில் முடிவுற்ற இந்தியன் ப்ரீமியர் லீக்கில் சோபித்த ரபாடா இடுப்பு வலி காரணமாக அந்தத் தொடரின் பிளே ஓப் சுற்றில் இருந்து வெளியேறினார். ஐ.பி.எல். தொடரில் மாற்று வீரராக இணைந்த டெல் ஸ்டெயினும் இரண்டு போட்டிகள் மாத்திரமே விளையாடிய நிலையில் தோள்பட்டை காயம் காரணமாக வெளியேறினார். இதனால் அவர் உலகக் கிண்ணத்தில் பங்கேற்பதில் சந்தேகம் உள்ளது.

எனினும், இந்த உபாதைகள் ஆபத்தாவை இல்லை என்று கிப்ஸன் குறிப்பிட்டுள்ளார்.

‘கே.ஜிவுக்கு (ரபாடா) பிரச்சினை இருக்கிறது. மற்றும் டெல்லுக்கும் பிரச்சினை இருக்கிறது. ஆனால், அவர்கள் நல்ல நிலையில் இருப்பதாக உணர்கிறேன்’ என்று கிப்ஸன் கூறினார். ‘அவர்கள் ஆபத்தான நிலையில் இல்லை. முழுமையான சுகம்பெற்று உலகக் கிண்ணத்தில் இடம்பிடிப்பார்கள்’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.    

அதேபோன்று ஹஷிம் அம்லாவின் ஆட்டத் திறன் பற்றிய கூற்றுகள் அபத்தமானது என்று கிப்ஸன் சாடினார். சி.எஸ்.கே. டி20 சலேஞ்ச் தொடரில் இருந்து அம்லா பாதியில் வெளியேறி இருந்தார். 2017 ஒக்டோபர் தொடக்கம் இரண்டு சதங்கள் மற்றும் நான்கு அரைச்சதங்களை மாத்திரமே அவர் பெற்றுள்ளார். எனினும் அவர் இங்கிலாந்தில் 56.73 என்ற ஓட்ட சராசரியை பதிவு செய்துள்ளார்.  

நாட்டில் வன்முறை வேண்டாம்: கிரிக்கெட் நட்சத்திரங்கள் கோரிக்கை

உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத்தாக்குதல் ………..

‘ஒவ்வொரு பந்தையும் அடித்தாட முயற்சிக்கும் டி20 இல் இருந்து வெளியேற ஹாஷ் (அம்லா) விரும்பினார். அவர் பெரிய ஓட்டங்கள் எடுக்காத நிலையில், அது இங்கிலாந்தில் விளையாடுவதற்காக அவரது உளநிலை மற்றும் தயார்படுத்தல்களுக்கு இடையூறாக அமையும் என்று அவர் நினைக்கிறார். அதற்காக அவருக்கு இடம் விடுவது முக்கியமென நாம் கருதுகிறோம். டி20 சூழலில் இருந்து அவரை அகற்றியதில் வேறு எந்த விடயமும் இல்லை’ என்று கிப்ஸன் கூறினார்.    

உலகக் கிண்ணத்தை இன்னும் வெல்லாத நிலையில் தென்னாபிரிக்க அணிக்கு இம்முறை உலகக் கிண்ணமும் பெரும் எதிர்பார்ப்பு மற்றும் அழுத்தங்கள் கொண்டதாக உள்ளது. கடந்த உலகக் கிண்ண போட்டிகளில் அந்த அணியின் வெளியேற்றங்கள் அதிர்ச்சி அளிப்பதாகவும் ஏமாற்றம் கொண்டதாகவும் இருந்தன. இந்நிலையில் தற்போதைய அணி பற்றி கிப்ஸன் கூறும்போது, பாப் டு ப்ளெசிஸின் தலைமையில் எந்த நெருக்கடியும் இல்லை என்றும் அணி மகிழ்ச்சியுடன் தொடரில் பங்கேற்பதாகவும் கூறினார்.

‘நாம் அது பற்றி பேசுவதில்லை என்று முடிவெடுத்திருக்கிறோம். ஒரு அணி வெற்றி பெறும், ஒரு அணி தோல்வியடையும், நீங்கள் (ஊடகம்) எப்படித் தோற்றது என்று எழுதுவீர்கள். கடந்த காலம் போய்விட்டது. இந்த உலகக் கிண்ணத்தில் கடந்த காலத்தை எடுத்துவரப் போவதில்லை. இது எமக்கான புதிய சாகசமாகும்’ என்று அவர் குறிப்பிட்டார்.   

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<