ஒக்ஸ்போர்ட் ஜனாதிபதி கிண்ண கால்பந்தாட்டம் தொடர் 2019 நாளை ஆரம்பம்

150

கொழும்பு ஹமீட் அல் ஹுஸைனி  கல்லூரியில் 80களில் கல்வி கற்ற “80s குழுவினரால்” வருடாந்தம் ஏற்பாடு செய்யப்பட்டு நடாத்தப்படும் முன்னணி பாடசாலைகளுக்கு இடையிலான ஒக்ஸ்போர்ட் ஜனாதிபதி கிண்ண கால்பந்தாட்ட தொடர் நாளை (16) சுகததாஸ அரங்கில்  ஆரம்பமாகவுள்ளது.

ஹமீட் அல் ஹுஸைனியை வீழ்த்திய ஸாஹிராவுக்கு ஜனாதிபதிக் கிண்ணம்

மிகவும் விறுவிப்பாக இடம்பெற்ற இறுதிப் …..

பாடசாலை மாணவர்களுக்கு இடையில் கால்பந்தாட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் நடத்தப்படும் இந்தப் போட்டித் தொடரில், இம்முறை 19 பாடசாலை அணிகள் பங்கேற்பதுடன், போட்டிக்கான பூரண அனுசரணையை “ஒக்ஸ்போர்ட் குழு” நிறுவனம் (Oxford Group) வழங்குகின்றது.

இதன்படி, ஆரம்பிக்கவுள்ள ஒக்ஸ்போர்ட் ஜனாதிபதி கிண்ண தொடரானது நொக்-அவுட் சுற்று முறைமையில் நடைபெறவுள்ளதுடன், முதல் நாாளான நாளை ஐந்து போட்டிகளுடன் தொடர் ஆரம்பமாகிறது. முதல்சுற்று மற்றும் காலிறுதிக்கு முன்னைய சுற்றுக்கான போட்டிகள் நாளை தொடக்கம் எதிர்வரும் 18ம் திகதிவரை இடம்பெறவுள்ளன.

பின்னர், இரண்டு காலிறுதிப் போட்டிகள் 18ம் திகதியும், மிகுதி இரண்டு காலிறுதிப் போட்டிகள் 20ம் திகதியும் நடைபெறவுள்ளதுடன், அரையிறுதிப் போட்டிகள் 24ம் திகதி நடைபெறவுள்ளன. தொடரின் வெற்றியாளரைத் தெரிவு செய்யும் இறுதிப் போட்டி இம்மாதம் 31ம் திகதி மாலை 05.00 மணிக்கு நடைபெறவுள்ளதுடன், மூன்றாவது இடத்துக்கான போட்டி அதே நாளில் பிற்பகல் 02.00 மணிக்கு நடைபெறவுள்ளது.  

போட்டித் தொடரின் ஆரம்ப சுற்றுகள் மற்றும் முதல் இரண்டு காலிறுதிப் போட்டிகள் என்பன கொழும்பு சுகததாஸ மைதானத்தில் இடம்பெறவுள்ளதுடன், அரையிறுதி, மூன்றாவது இடத்துக்கான போட்டி மற்றும் இறுதிப்போட்டி என்பன கொழும்பு குதிரைப் பந்தயத்திடல் சர்வதேச விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது. இதில், 20ம் திகதி நடைபெறவுள்ள இரண்டு காலிறுதிப் போட்டிகளுக்கான மைதானம் இதுவரை உறுதிசெய்யப்படவில்லை.  

Photo Album : President’s Cup 2019 | Press Conference | Hameed Al Husseinie College G80’s

இதேவேளை, நடைபெறவுள்ள போட்டிகள் நேர மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, முதல் சுற்றுப் போட்டிகள் அனைத்தும் 70 நிமிடங்களுக்கு (முதற்பாதி, இரண்டாவது பாதி தலா 35 நிமிடங்கள், இடைவேளை 5 நிமிடங்கள்) மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. பின்னர், நடைபெறும் காலிறுதிப் போட்டிகள் 80 நிமிடங்கள் (முதற்பாதி, இரண்டாவது பாதி தலா 40 நிமிடங்கள், இடைவேளை 10 நிமிடங்கள்) அடங்கிய போட்டிகளாக நடைபெறுவதுடன், இறுதிப் போட்டி மற்றும் மூன்றாம் இடத்துக்கான போட்டிகள் முழுமையான போட்டிகளாக (90 நிமிடங்கள்) நடைபெறும்.

போட்டித் தொடரில் பங்கேற்கும் அணிகள்

ஹமீட் அல் ஹுஸைனி கல்லூரி – கொழும்பு, புனித தோமியர் கல்லூரி – கொழும்பு, இந்துக் கல்லூரி – கொழும்பு,  டீ.எஸ். சேனாநாயக்க கல்லூரி – கொழும்பு, ஆனந்த கல்லூரி – கொழும்பு, லும்பினி கல்லூரி – கொழும்பு, வெஸ்லி கல்லூரி – கொழும்பு, இசிபத்தன கல்லூரி – கொழும்பு, அல் முபாரக் மத்திய கல்லூரி – மல்வானை, திருச்சிலுவை கல்லூரி – களுத்துறை, மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி – நீர்கொழும்பு, டி மெசனொட் கல்லூரி – கந்தானை, அல் அஸ்ஹர் மத்திய கல்லூரி – திஹாரிய, தர்மதூத்த கல்லூரி – பதுளை, கேட்வே சர்வதேச கல்லூரி – கொழும்பு, புனித பெனடிக் கல்லூரி – கொழும்பு, றோயல் கல்லூரி – கொழும்பு, புனித பேதுரு கல்லூரி – கொழும்பு, களுத்துறை முஸ்லிம் மத்திய கல்லூரி  

>> மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<