Home Tamil தனன்ஜயவின் சதத்தையும் தாண்டி ஆதிக்கம் செலுத்தும் நியூசிலாந்து

தனன்ஜயவின் சதத்தையும் தாண்டி ஆதிக்கம் செலுத்தும் நியூசிலாந்து

212

கொழும்பு பி. சரா ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டரநேர நிறைவில், நியூசிலாந்து அணி டொம் லேத்தமின் சதத்துடன் 196 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்துள்ளது.

நேற்றைய இரண்டாவது நாள் ஆட்ட நேரமானது, சீரற்ற காலநிலை காரணமாக மதியபோசன இடைவேளையுடன் நிறுத்தப்பட்ட நிலையில், இலங்கை அணி 144 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்திருந்தது. 

Photos: Sri Lanka vs New Zealand | 2nd Test – Day 3

ThePapare.com | Waruna Lakmal | 24/08/2019 Editing and re-using images without permission of ThePapare.com…..

இதன்படி, இன்றைய நாள் ஆட்ட நேரத்தை தொடர்ந்த இலங்கை அணி, தனன்ஜய டி சில்வாவின் அபார சதத்தின் உதவியுடன், 244 ஓட்டங்களை குவித்துக் கொண்டது. நேற்றைய ஆட்டநேர நிறைவில் களத்தில் நின்ற டில்ருவான் பெரேரா, தனன்ஜய டி சில்வாவுடன் இணைந்து இணைப்பாட்டமொன்றை பெற்றுக் கொடுக்க, தனன்ஜய  டி சில்வா அரைச் சதம் கடந்தார்.

தொடர்ந்து டில்ருவான் பெரேரா 13 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய சுரங்க லக்மால் 10 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். எனினும், இவர்களுடன் முறையே 41 மற்றும் 43 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்ற தனன்ஜய டி சில்வா அணியின் ஓட்ட எண்ணிக்கைக்கு வலுசேர்த்தார். பின்வரிசை வீரர்கள் இவ்வாறு ஆட்டமிழக்க தொடங்கியதில், இறுதி துடுப்பாட்ட வீரர் லஹிரு குமாரவின் உதவியுடன், தன்னுடைய 5வது டெஸ்ட் சதத்தை தனன்ஜய டி சில்வா பதிவுசெய்து 109 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

நியூசிலாந்து அணியின் பந்துவீச்சில் டிம் சௌதி 63 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளையும், ட்ரென்ட் போல்ட் 75 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் அதிகபட்சமாக வீழ்த்தியிருந்தனர்.

பின்னர், தங்களுடைய முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த நியூசிலாந்து அணி விக்கெட்டிழப்பின்றி 2 ஓவர்கள் துடுப்பெடுத்தாடிய நிலையில், மதியபோசன இடைவேளை வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆட்டம் ஆரம்பிக்க நியூசிலாந்து அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஜீட் ராவல் ஓட்டங்களின்றி ஆட்டமிழக்க, கேன் வில்லியம்சன் 20 ஓட்டங்களுடன் லஹிரு குமாரவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

வில்லியம்சன் ஆட்டமிழந்த போதும், ரொஸ் டெய்லர் மற்றும் டொம் லேத்தம் ஆகியோர் இணைப்பாட்டமொன்றை கட்டியெழுப்பினர். இருவரும் 50 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்ற நிலையில், ரொஸ் டெய்லர் 23 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

ரொஸ் டெய்லரின் ஆட்டமிழப்பின் பின்னர், ஹென்ரி நிக்கோல்ஸ் களமிறங்க, டொம் லேத்தம் தன்னுடைய 16வது டெஸ்ட் அரைச் சதத்தை கடந்தார். இவரின் அரைச் சதத்தின் உதவியுடன் நியூசிலாந்து அணி தேநீர் இடைவேளையின் போது, 103 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

இதன்பின்னர், களமிறங்கிய நியூசிலாந்து அணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த, 123/3 ஓட்டங்களை பெற்றிருந்த போது, இன்றைய ஆட்டநேரத்தில் முதன்முறையாக மழை குறுக்கிட்டது. எனினும், சிறிய இடைவேளைக்கு பின்னர் போட்டி ஆரம்பமாகியதுடன், நியூசிலாந்து அணியின் 4வது விக்கெட் வீழ்த்தப்பட்டது. 15 ஓட்டங்களை பெற்றிருந்த ஹென்ரி நிக்கோல்ஸ், டில்ருவானின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

சீரற்ற காலநிலையால் கைவிடப்பட்ட இரண்டாம் நாள் ஆட்டம்!

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு….

எவ்வாறாயினும், இதனையடுத்து ஜோடி சேர்ந்த டொம் லேத்தம் மற்றும் பிஜே வெட்லிங் ஆகியோர் மிகச்சிறந்த இணைப்பாட்டத்தை பெற்று, இன்றைய ஆட்டநேர நிறைவு வரை துடுப்பெடுத்தாடினர். இதில் சிறப்பாக துடுப்பெடுத்தாடிய லேத்தம் 10வது டெஸ்ட் சதத்தை கடந்து ஆட்டமிழக்காமல் 111 ஓட்டங்களை பெற்றுக்கொள்ள, பிஜே வெட்லிங் 25 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.

இதன்படி, நியூசிலாந்து அணி இன்றைய ஆட்டநேர நிறைவில் 4 விக்கெட்டுகளை இழந்து 196 ஓட்டங்களை பெற்றுள்ளதுடன், இலங்கை அணியின் முதல் இன்னிங்ஸ் ஓட்ட எண்ணிக்கையை எட்டுவதற்கு இன்னும் 48 ஓட்டங்களை பெறவேண்டும். இலங்கை அணியின் பந்துவீச்சை பொருத்தவரை, டில்ருவான் பெரேரா 76 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை கைப்பற்ற, லஹிரு குமார மற்றும் லசித் எம்புல்தெனிய ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

Result

Sri Lanka
244/10 (90.2) & 122/10 (70.2)
New Zealand
431/6 (115)
BatsmenRB4s6sSR
Dimuth Karunaratne c BJ Watling b Tim Southee651656039.39
Lahiru Thirimanne c Kane Williamson b William Somerville235005.71
Kusal Mendis c BJ Watling b Colin de Grandhomme32704045.71
Angelo Mathews c BJ Watling b Trent Boult229006.90
Kusal Perera lbw b Trent Boult04000.00
Dhananjaya de Silva b Trent Boult10914816273.65
Niroshan Dickwella c BJ Watling b Tim Southee03000.00
Dilruwan Perera lbw b Ajaz Patel13541024.07
Suranga Lakmal c BJ Watling b Tim Southee10241041.67
Lasith Embuldeniya lbw b Tim Southee02000.00
Lahiru Kumara not out5110045.45
Extras6 (b 1 , lb 2 , nb 3, w 0, pen 0)
Total244/10 (90.2 Overs, RR: 2.7)
Fall of Wickets 1-29 (14.4) Lahiru Thirimanne, 2-79 (32.3) Kusal Mendis, 3-93 (41.1) Angelo Mathews, 4-93 (41.5) Kusal Perera, 5-130 (57.3) Dimuth Karunaratne, 6-130 (57.6) Niroshan Dickwella, 7-171 (74.5) Dilruwan Perera, 8-214 (83.5) Suranga Lakmal, 9-224 (85.1) Lasith Embuldeniya, 10-244 (90.2) Dhananjaya de Silva,
BowlingOMRWEcon
Trent Boult22.267533.38
Tim Southee2976342.17
Colin de Grandhomme1733512.06
William Somerville632013.33
Ajaz Patel1644813.00
BatsmenRB4s6sSR
Jeet Raval c Dhananjaya de Silva b Dilruwan Perera09000.00
Tom Latham lbw b Dilruwan Perera15425115061.35
Kane Williamson c Kusal Mendis b Lahiru Kumara20282071.43
Ross Taylor c Dhananjaya de Silva b Lasith Embuldeniya23433053.49
Henry Nicholls c Dhananjaya de Silva b Dilruwan Perera15460032.61
BJ Watling not out1052264046.46
Colin de Grandhomme c Lahiru Kumara b Lasith Embuldeniya837755107.79
Tim Southee not out241022240.00
Extras7 (b 0 , lb 4 , nb 0, w 3, pen 0)
Total431/6 (115 Overs, RR: 3.75)
Fall of Wickets 1-1 (3.1) Jeet Raval, 2-34 (12.5) Kane Williamson, 3-84 (26.2) Ross Taylor, 4-126 (42.3) Henry Nicholls, 5-269 (85.3) Tom Latham, 6-382 (110.2) Colin de Grandhomme,
BowlingOMRWEcon
Dilruwan Perera37411433.08
Dhananjaya de Silva511002.00
Suranga Lakmal1123202.91
Lahiru Kumara25011514.60
Lasith Embuldeniya37415624.22


BatsmenRB4s6sSR
Lahiru Thirimanne run out (Ajaz Patel)05000.00
Kusal Perera c BJ Watling b Trent Boult03000.00
Kusal Mendis b William Somerville20633031.75
Angelo Mathews c Ross Taylor b Colin de Grandhomme7300023.33
Dhananjaya de Silva c Tim Southee b Ajaz Patel119005.26
Niroshan Dickwella c Tom Latham b Ajaz Patel511614031.68
Dimuth Karunaratne lbw b Tim Southee21702030.00
Dilruwan Perera c Ross Taylor b Tim Southee012000.00
Suranga Lakmal c Tom Latham b William Somerville14452131.11
Lasith Embuldeniya c Kane Williamson b Trent Boult5110045.45
Lahiru Kumara not out03000.00
Extras3 (b 0 , lb 2 , nb 0, w 1, pen 0)
Total122/10 (70.2 Overs, RR: 1.73)
Fall of Wickets 1-0 (0.5) Lahiru Thirimanne, 2-4 (2.2) Kusal Perera, 3-11 (11.3) Angelo Mathews, 4-22 (18.3) Dhananjaya de Silva, 5-32 (21.5) Kusal Mendis, 6-73 (43.5) Dimuth Karunaratne, 7-75 (47.4) Dilruwan Perera, 8-115 (65.3) Suranga Lakmal, 9-118 (69.3) Niroshan Dickwella, 10-122 (70.2) Lasith Embuldeniya,
BowlingOMRWEcon
Trent Boult14.281721.20
Tim Southee1261521.25
Ajaz Patel1933121.63
Colin de Grandhomme41812.00
William Somerville2164922.33

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<