தர்ஜினியின் மற்றொரு சாதனையுடன் உலகக் கிண்ணத்தை நிறைவு செய்த இலங்கை

581

வலைப்பந்து உலகக் கிண்ணத் தொடரில், 15ஆவது இடத்தினை பெறும் அணி எது என்பதை தீர்மானிக்க இடம்பெற்ற போட்டியில் இலங்கை வலைப்பந்து அணி, சிங்கப்பூர் வலைப்பந்து அணியினை 78-57 என்கிற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தியுள்ளது. 

வலைப்பந்தாட்டத்தில் சதமடித்து சாதனை படைத்தார் தர்ஜினி சிவலிங்கம்

இலங்கை வலைப்பந்தாட்ட அணியின்….

இங்கிலாந்தின் லிவர்பூல் நகரில் 15ஆவது வலைப்பந்து உலகக் கிண்ணத் தொடர் நடைபெற்று வருகின்றது. இந்த உலகக் கிண்ணத் தொடரில், குழுநிலை போட்டிகள் எதிலும் வெற்றி பெறாத இலங்கை வலைப்பந்து அணி, வலைப்பந்து உலகக் கிண்ணத் தொடரில் 13 தொடக்கம் 16 வரையில் உள்ள இடங்களை பெறும் அணிகளை தீர்மானிக்கும் சுற்றில் ஆடியது. 

இந்த சுற்றில் சமோவா (65-55), பிஜி (59-44) ஆகிய அணிகளிடம் தோல்வியினை தழுவிய இலங்கை வலைப்பந்து அணி ஏற்கனவே தாம் வீழ்த்திய சிங்கப்பூர் (88-50) வலைப்பந்து அணியினை 15ஆவது இடத்திற்கான போட்டியில் எதிர்கொண்டிருந்தது. 

எம்&எஸ் வங்கி அரங்கில் ஆரம்பமான போட்டியில் இலங்கை வலைப்பந்து அணி தொடக்கம் முதலே தர்ஜினி சிவலிங்கத்தின் புள்ளிகள் மழையோடு சிறந்த ஆட்டத்தினை வெளிப்படுத்தியது. இதனால், இலங்கை வலைப்பந்து அணி போட்டியின் முதல் கால்பகுதியை 23-15 என்கிற புள்ளிகள் கணக்கில் தமதாக்கியது. 

Photos: Sri Lanka vs Fiji | Group E | Netball World Cup 2019

ThePapare.com | 18/07/2019 Editing and re-using images without permission of ThePapare.com….

பின்னர் இரண்டாம் கால்பகுதியிலும் இலங்கை வீராங்கனைகள் அபாரம் காண்பித்தனர். இதனால், போட்டியின் இரண்டாம் கால்பகுதியும் 20-13 என்கிற புள்ளிகள் கணக்கில் இலங்கை வலைப்பந்து அணியின் வசமாகியது. 

இரண்டாம் கால்பகுதியை கைப்பற்றிய இலங்கை வலைப்பந்து அணி 43-28 என்கிற புள்ளிகள் கணக்கில் போட்டியின் முதல் அரைப்பகுதியில் முன்னிலை பெற்றுக் கொண்டது. 

இதனை அடுத்து போட்டியின் மூன்றாம் கால்பகுதியிலும் இலங்கை வலைப்பந்து அணியின் ஆதிக்கமே நீடித்தது. அதன்படி, 22-12 என்கிற புள்ளிகள் கணக்கில் குறித்த கால்பகுதியினை இலங்கை வலைப்பந்து அணி கைப்பற்றியது. 

போட்டியின் இறுதிக் கால்பகுதியினை இலங்கை வலைப்பந்து அணியினர் 17-13 என்கிற புள்ளிகள் கணக்கில் பறிகொடுத்த போதிலும், ஏனைய கால்பகுதிகளில் சிறப்பாக செயற்பட்டதன் மூலம் போட்டியில் 78-57 என்கிற புள்ளிகள் கணக்கில் வெற்றியாளர்களாக மாறினர். 

Video – தர்ஜினி சிவலிங்கம் கடந்து வந்த பாதைகள்

உலகின் சிறந்த சூட்டர் என்ற புகழைப் பெற்ற….

அதோடு, இப்போட்டியில் கிடைத்த வெற்றியின் மூலம் உலகக் கிண்ணத்தில் சிங்கப்பூரினை இரண்டாவது தடவையாக தோற்கடித்த இலங்கை வலைப்பந்து அணி 16 நாடுகளின் அணிகள் பங்குபெறும் வலைப்பந்து உலகக் கிண்ணத் தொடரில் 15ஆவது இடத்தினை பெற்றுக் கொள்கின்றது.

இப்போட்டியில் அதிக புள்ளிகள் பெற்ற வீராங்கனையாக 85 முயற்சிகளில் 77 புள்ளிகள் பெற்ற இலங்கை வலைப்பந்து அணியின் தர்ஜினி சிவலிங்கம் தெரிவானார். அதோடு, தர்ஜினி இந்த 77 புள்ளிகள் மூலம் இந்த உலகக் கிண்ணத்தில் குறித்த போட்டியொன்றில் அதிக புள்ளிகள் பெற்ற வீராங்கனையாகவும் மாறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

இதேநேரம், சிங்கப்பூர் வலைப்பந்து அணியில் 38 புள்ளிகள் பெற்ற சர்மேய்னி சோஹ் அவரது தரப்பில் அதிக புள்ளிகள் பெற்ற வீராங்கனையாக மாறியிருந்தது குறிப்பிடத்தக்கது. Singapore 

>>மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க<<