ஆப்கானிஸ்தான் தொடரிலிருந்து நீக்கப்படும் சாமிக்க கருணாரத்ன!

Afghanistan tour of Sri Lanka 2022

1081

இலங்கை அணியின் முன்னணி சகலதுறை வீரர் சாமிக்க கருணாரத்ன ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான தொடரிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் சபை தலைமையகத்தில் இன்று வியாழக்கிழமை (17) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது கிரிக்கெட் சபையின் செயலாளர் மொஹான் டி சில்வா இந்த விடயத்தினை சுட்டிக்காட்டியுள்ளார்.

>> பிணையில் விடுவிக்கப்பட்டார் தனுஷ்க குணதிலக்க!

சாமிக்க கருணாரத்ன ஒழுக்க மீறல்கள் காரணமாக அணியிலிருந்து நீக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக சமுகவலைளத்தங்களில் அதிகமான தகவல்கள் வெளியாகிவந்தன. எனினும், சாமிக்க கருணாரத்னவின் பிரகாசிப்பினை அடிப்படையாக கொண்டு அணியிலிருந்து நீக்கப்படுகின்றார் என மொஹான் டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பில் கருத்து வெளியிட்ட மொஹான் டி சில்வா, “சாமிக்க கருணாரத்னவை தேர்வுக்குழுவினர் ஆப்கானிஸ்தான் தொடருக்கான குழாத்திலிருந்து நீக்கியுள்ளனர். சாமிக்க கருணாரத்ன ஒழுக்க விதிமீறல்கள் காரணமாக அணியிலிருந்து நீக்கப்படவில்லை. அவர் பிரகாசிக்க தவறியதன் காரணமாகவே அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்” என்றார்.

ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான ஐசிசி சுபர் லீக்கிற்கான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் எதிர்வரும் 25, 27 மற்றும் 30ம் திகதிகளில் கண்டி – பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<