இலங்கை வீரர்களுக்கு பார்சிலோனாவில் பயிற்சி பெறும் வாய்ப்பு

726

உலகின் பிரபல கால்பந்து கழகமான பார்சிலோனாவின் பயிற்சி முகாம் ஒன்றில் கலந்துகொள்வதற்காக இலங்கையிலிருந்து திறமையான ஆறு வீரர்களுக்கு வாய்ப்பு கிட்டவுள்ளது.   

10 வீரர்களுடனான பார்சிலோனாவிடம் தோல்வியை தவிர்த்த ரியெல் மெட்ரிட்

கரேத் பேல் கடைசி நேரத்தில் போட்ட அபார கோல் மூலம் லா லிகா……

இதன்படி, பார்சிலோனா கால்பந்தாட்ட பயிற்சியகத்தில் (BRACA Academy) நடைபெறவுள்ள சிறுவர்களுக்கான நான்கு நாட்கள் கொண்ட கால்பந்தாட்டப் பயிற்சி முகாம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இடம்பெறும். அதில் கலந்துகொள்ளவுள்ள அந்த ஆறு அதிஷ்டசாலி வீரர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக நாடாளவிய ரீதியிலிருந்து 12 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான பாடசாலை மட்ட கால்பந்து போட்டித் தொடரொன்றை நடத்துவதற்கு நெஸ்லே லங்காவின் மைலோ நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக கல்வி அமைச்சும், இலங்கை பாடசாலைகள் கால்பந்தாட்ட சங்கமும் பூரண ஒத்துழைப்பை வழங்கவுள்ளது.

விளையாட்டுத்துறையில் ஈடுபடுவதன் ஊடாக பிள்ளைகளின் அபிலாஷைகளை ஊக்குவிப்பதனை இலக்காகக் கொண்டு பார்சிலோனா கழகத்துடன் மைலோ நிறுவனம் கைகோர்த்துள்ளது.

அதுமாத்திரமின்றி, தாழ்வுணர்ச்சி, திறமை, ஆர்வம், மதித்தல், கூட்டு முயற்சி உள்ளிட்ட ஐந்து அம்சங்களில் பார்சிலோனா கழகம் சிறந்து விழங்குகின்றது. இந்த அம்சங்களை கருத்திற்கொண்டு வளமான வாழ்க்கைத் தரத்தையும், இளையோரை உடல் ரீதியாக செயற்றிறன் மிக்கவர்களாக மாற்றுவதற்கும் பிரபல பார்சிலோனா கால்பந்து கழகத்துடன், மைலோ நிறுவனம் நான்கு வருட ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பார்சிலோனாவை நோக்கிய பயணம் (Road to Barcelona) என்ற தொனிப்பொருளில் முன்னெடுக்கப்படவுள்ள இப்போட்டிகளில் 800 ஆண்கள் அணிகளும், 250 பெண்கள் அணிகளும் கலந்துகொள்ளவுள்ளன. அத்துடன், சுமார் 12,600 பாடசாலை மாணவர்கள் கலந்துகொள்ளவுள்ள இப்போட்டித் தொடரானது எதிர்வரும் ஜுலை மாதம் முதல் ஆரம்பமாகவுள்ளது.

இதில் திறமைகளை வெளிப்படுத்துகின்ற அதி சிறந்த வீரர்கள் அல்லது வீராங்கனைகள் அறுவருக்கு பார்சிலோனா செல்வதற்கான வாய்ப்பு கிடைக்கவுள்ளது. எனவே, 2007 மற்றும் 2008ஆம் ஆண்டுகளில் பிறந்த சிறுவர்கள் இப்போட்டிகளில் கலந்துகொள்ள முடியும்.

இதேநேரம், குறித்த கால்பந்து போட்டிகளில் கலந்துகொள்ள முடியாமல் போகின்ற வீரர்களுக்கு விசேட பயிற்சி முகாமொன்றும் நடத்தப்படவுள்ளது. இதில் பங்குபற்ற எதிர்பார்த்துள்ள மாணவர்கள், 400 கிலோ கிராம் மைலோ பெக்கெட்டின் மேல் உறையில் குறிப்பிடப்பட்டுள்ள இரகசிய இலக்கத்தை 6456 என்ற இலக்கத்துக்கு SMS அனுப்ப வேண்டும். அத்துடன், இதுதொடர்பிலான மேலதிக தகவல்களை Milo Sri Lanka என்ற பேஸ்புக் பகுதி மூலம் பெற்றுக்கொள்ளவும் முடியும்.

பார்சிலோனாவை நோக்கிய பயணம் என்ற தொனிப்பொருளில் முன்னெடுக்கப்படவுள்ள இந்த கால்பந்து போட்டித் தொடரின் ஊடாக எதிர்காலத்தில் இலங்கையில் கால்பந்து விளையாட்டை பிரபல்யப்படுத்தி நட்சத்திர வீரர்களை உருவாக்குதே இந்த செயற்பாட்டின் குறிக்கோளாகும். எனவே, இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுத்த மைலோ நிறுவனத்துக்கு நன்றிகளைத் தெரிவிப்பதாக கல்வி அமைச்சின் விளையாட்டுப் பிரிவின் ஆலோசகரான சுனில் ஜயவீர தெரிவித்தார்.

Photos : Road to Barcelona – Press Conference

Photos of Road to Barcelona – Press Conference Title Road to Barcelona……

கடந்த திங்கட்கிழமை (14) கொழும்பில் நடைபெற்றபார்சிலோனாவை நோக்கிய பயணம்” நிகழ்ச்சி தொடர்பில் ஊடகங்களை தெளிவுபடுத்தும் விசேட மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதேவேளை, நாடாளவிய ரீதியில் இடம்பெறவுள்ள இந்த போட்டிகள் எதிர்வரும் ஜுன் மாதம் 5ஆம், 6ஆம் திகதகளில் வட மத்திய மாகாணத்தில் இருந்து ஆரம்பமாகவுள்ளது. இதில் வட மாகாணத்திற்கான போட்டிகள் ஜுலை மாதம் 15ஆம், 16ஆம் திகதிகளில் யாழ். துரையப்பா மைதானத்தில் நடைபெறவுள்ளதுடன், கிழக்கு மாகாணத்திற்கான போட்டிகள் ஜுலை மாதம் 29ஆம், 30ஆம் திகதிகளில் திருகோணமலை நகரசபை மைதானத்தில் நடைபறெவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

போட்டி விபரம்

மாகாணம் திகதி இடம்
வட மத்திய மாகாணம் ஜுலை 5,6 அநுராதபுரம் சிறைச்சாலை மைதானம்
மேல் மாகாணம் ஜுலை 7,8 கொழும்பு சிட்டி லீக் மைதானம்
தென் மாகாணம் ஜுலை 9,10 மாத்தறை உயன்வத்த மைதானம்
மத்திய மாகாணம் ஜுலை 11,12 கண்டி, போகம்பரை மைதானம்
வட மாகாணம் ஜுலை 15,16 யாழ். துரையப்பா மைதானம்
ஊவா மாகாணம் ஜுலை 17,18 பதுளை வின்சென்ட் டயஸ் மைதானம்
வட மேல் மாகாணம் ஜுலை 19,20 குருநாகல் பொது மைதானம்
சபரகமுவ மாகாணம் ஜுலை 21,22 இரத்தினபுரி பொது மைதானம்
கிழக்கு மாகாணம் ஜுலை 29,30 திருகோணமலை நகர சபை மைதானம்

 

>>மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க<<