சிங்கர் பிரீமியர் லீக் T20 இறுதிப் போட்டியில் டிமோ – யுனிசெல்லா

438

சிங்கர் நிறுவனத்தின் அனுசரணையில் நடைபெறும் வர்த்தக நிறுவனங்களுக்கு இடையிலான 25ஆவது பிரீமியர் லீக் T20 நொக் அவுட் தொடரின் அரையிறுதிப் போட்டிகள் இன்று (17) நடைபெற்றன.

மாஸ் ஹோல்டிங்ஸ்யுனிசெல்லா எதிர் டீஜே லங்கா

ரமித் ரம்புக்வெல்லவின் அதிரடி சதத்தின் மூலம் டீஜே லங்கா அணியை 52 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்று மஸ் ஹோல்டிங்ஸ்யுனிசெல்லா அணி 25ஆவது சிங்கர் பிரீமியர் லீக் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம் கண்டது.

டிமோ, யுனிசெல்லா அணிகள் T-20 அரையிறுதிக்கு முன்னேற்றம்

சிங்கர் நிறுவனத்தின் அனுசரணையில்…

பி. சரா ஓவல் மைதானத்தில் இன்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற மிலின்த சிறிவர்தன தலைமையிலான டீஜே லங்கா முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது. அதன்படி துடுப்பெடுத்தாட களமிறங்கிய யுனிசெல்லா அணியின் ஆரம்ப வீரர் ரமித் ரம்புக்வெல்ல எதிரணியின் எதிர்பார்ப்புகள் அனைத்தையும் துவம்சம் செய்து பந்துகளை மைதானத்திற்கு வெளியே செலுத்தினார்.

52 பந்துகளுக்கு முகம்கெடுத்த ரம்புக்வெல்ல 3 பௌண்டரிகள் மற்றும் 11 சிக்ஸர்களுடன் 105 ஓட்டங்களை விளாசினார். மத்திய வரிசையில் வந்த மஹேல உடவத்த 25 பந்துகளில் 36 ஓட்டங்களை பெற்றார்.

இதன்மூலம் யுனிசெல்லா அணி 20 ஓவர்களுக்கும் 8 விக்கெட்டுகளை இழந்து 208 ஓட்டங்களை பெற்றது.  

இந்நிலையில் சவாலான வெற்றி இலக்கை நோக்கி பதிலெடுத்தாட களமிறங்கிய டீஜே லங்கா அணி வேகமாக ஓட்டங்களை பெற தடுமாறியதோடு தொடர்ந்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. இதனால் அந்த அணி 18.4 ஓவர்களில் 156 ஓட்டங்களுக்கு சுருண்டது.

மத்திய வரிசையில் வந்த சரித் அசலங்க 17 பந்துகளில் 40 ஓட்டங்களை பெற்றபோதும் ஏனைய வீரர்கள் ஓட்டங்கள் பெற தடுமாறினர்.

யுனிசெல்லா அணி சார்பில் பர்வீஸ் மஹ்ரூப் 17 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு அனுக் பெர்னாண்டோவும் 3 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.

போட்டியின் சுருக்கம்

மாஸ் ஹோல்டிங்ஸ்யுனிசெல்லா – 208/8 (20) – ரமித் ரம்புக்வெல்ல 105, மஹேல உடவத்த 36, நுவன் பிரதீப் 2/38, தம்மிக்க பிரசாத் 2/44, கசுன் மதுசன்க 2/48

டீஜே லங்கா – 156 (18.4) – சரித் அசலங்க 40, சாலிக்க கருனநாயக்க 26, மினோத் பானுக்க 23, பர்வீஸ் மஹ்ரூப் 3/17, அனுக் பெர்னாண்டோ 3/37, டி.எம் டில்ஷான் 2/17, இஷார அமரசிங்க 2/36

முடிவு  மாஸ் ஹோல்டிங்ஸ்யுனிசெல்லா 52 ஓட்டங்களால் வெற்றி


எல்.பி. பினான்ஸ் எதிர் டிமோ

பி. சரா ஓவல் மைதானத்தில் நடைபெற்ற எல்.பி. பினான்ஸ் அணியுடனான சிங்கர் பிரீமியர் லீக் T20 தொடரின் அரையிறுதியில் 6 விக்கெட்டுகளால் வெற்றியீட்டிய டிமோ அணி, யுனிசெல்லா அணியுடனான இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

இரண்டாவது அரையிறுதியாக இன்று நடைபெற்ற போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்த எல்.பி. பினான்ஸ் 20 ஓவர்களுக்கும் 8 விக்கெட்டுகளை இழந்து 170 ஓட்டங்களை பெற்றது. அணித்தலைவர் லக்ஷான் ரொட்ரிகோ 31 பந்துகளுக்கு 44 ஓட்டங்களை பெற்றார்.

 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பந்துவீச ஹபீசுக்குத் தடை

இந்நிலையில் சவாலான இலக்கை நோக்கி பதிலெடுத்தாட களமிறங்கிய டிமோ அணிக்கு ஆரம்ப வீரர் திக்சில டி சில்வா அதிரடி அட்டத்தை வெளிக்காட்டினார். 36 பந்துகளுக்கு முகம்கொடுத்த அவர் 7 பௌண்டரிகள் மற்றும் 6 சிக்சர்களுடன் 71 ஓட்டங்களை விளாச, டிமோ அணிக்கு வெற்றி இலக்கு இலகுவானது.

மத்திய வரிசை வீரர் ரமேஷ் மெண்டிஸ் 18 பந்துகளில் ஆட்டமிழக்காது 33 ஓட்டங்களை விளாசினார். இதன்மூலம் டிமோ அணி 18.2 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 173 ஓட்டங்களை பெற்று வெற்றியீட்டியது.

போட்டியின் சுருக்கம்

எல்.பி. பினான்ஸ் – 170/8 (20) – லக்ஷான் ரொட்ரிகோ 44, சஹன் ஆரச்சிகே 29*, அஞ்சலோ பெரேரா 24, மதீஷ 2/18, இஷார பிரஷான் 2/18, நிசல தாரக்க 2/31

டிமோ – 173/4 (18.2) – திக்ஷில டி சில்வா 71, ரமேஷ் மெண்டிஸ் 33*, சம்மு அஷான் 22*, சரித் சுதரக்க 19/2, சஹன் அரச்சிகே 2/41

முடிவு டிமோ அணி 6 விக்கெட்டுகளால் வெற்றி