ஊக்கமருந்து சந்தேகத்தில் கென்ய மரதன் ஓட்ட வீரருக்கு போட்டித்தடை

81

லண்டன் மரதன் ஓட்டப் போட்டியின் முன்னாள் சம்பியனான கென்ய நாட்டைச் சேர்ந்த டெனியல் வாஞ்சிருவுக்கு ஊக்கமருந்து பயன்படுத்திய சந்தேகத்தில் மெய்வல்லுனர் நேர்மைத்துவப் பிரிவினால் தற்காலிக போட்டித்தடை விதிக்கப்பட்டுள்ளது.   

தடைசெய்யப்பட்ட மித்தொட் எனும் ஊக்கமருந்தை பாவித்தமைக்காக டெனியல் வாஞ்சிருவுக்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதை மெய்வல்லுனர் நேர்மைத்துவப் பிரிவு  (Athletics Integrity Unit)  நேற்றுமுன்தினம் (14) உறுதி செய்துள்ளது

இதன்படி, அவருக்கு எதிரான விசாரணைகள் முடியும் வரை எந்தவொரு போட்டியிலும் பங்குபற்ற முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், அவருக்கான விசாரணைகள் எப்போது நடைபெறும் என குறிப்பிடவில்லை.

சமூக ஊடகத்தில் வைரலான போல்ட்டின் ‘சமூக விலகல்’ புகைப்படம்

உலகின் அதிவேக மனிதரான உசேன்….

இந்த நிலையில், டெனியல் வாஞ்சிரு எந்தவொரு ஊக்கமருந்தையும் உட்கொள்ளவில்லை என அவருடைய முகாமைத்துவ நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த போட்டித்தடை குறித்து பேசிய டெனியல் வாஞ்சிரு, எனது உயிரியல் கடவுச்சீட்டு எப்படி கண்டுபிடிப்பட்டது என்பது என்னை குழப்பமடையச் செய்கிறது, வெறுப்பாக இருக்கிறது.  

நான் ஏற்கனவே ஊக்கமருந்து பயன்படுத்திய ஒஐ குற்றவாளியாக பார்க்கப்படுவதாக உணர்கிறேன். ஆனால் நான் அவ்வாறு ஊக்கமருந்து உட்கொள்ளவில்லை” என தெரிவித்துள்ளார்.   

வஞ்சிருவின் இரத்த மாதிரியானது நேர்மறையான முடிவைக் கொடுக்கவில்லை, ஆனால் ஒரு தடகள வீரரின் இரத்த கடவுச்சீட்டு நீண்ட காலத்திற்கு எடுக்கப்பட்ட மாதிரி முடிவுகளை விளக்குவதன் மூலம் ஊக்கமருந்தின் விளைவுகளை வெளிப்படுத்த முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

ஆம்ஸ்டர்டாமில் 2016இல் நடைபெற்ற சர்வதேச மரதன் ஓட்டப் போட்டியிலும் வெற்றி பெற்ற 27 வயதான இவர், லண்டன் மரதன் ஓட்டப் போட்டியில் கடந்த இரு வருடங்களாக முறையே 8ஆவது மற்றும் 11ஆவது இடங்களைப் பெற்றுக் கொண்டதுடன், 2017இல் நடைபெற்ற உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் 8ஆவது இடத்தையும் பெற்றுக் கொண்டார்

ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவதற்கான புதிய காலக்கெடு அறிவிப்பு

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்…..

முன்னதாக, ஊக்கமருந்து பயன்படுத்திய குற்றச்சாட்டில் இரண்டு கென்ய நாட்டு மரதன் ஓட்ட வீரர்களுக்கு போட்டித்தடை விதிக்கப்பட்டது. இதில் வின்சன்ட் கிப்சேஜேவ்வுக்கு நான்கு வருடத் தடையும், கடந்த ஜனவரி மாதம் முன்னாள் உலக சம்பியனான வில்சன் கிப்சன்னுக்கு போட்டித் தடையும் விதிக்கப்பட்டது.  

அதுமாத்திரமின்றி, கடந்த வருடம் அஸ்பெல் கிப்ரொப், சைரஸ் ருட்டோ மற்றும் ஆப்ரஹாம் கிப்டும் ஆகியே மூவருக்கும் நான்கு வருட போட்டித்தடை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேநேரம், கடந்த 5 வருடங்களில் சுமார் 60 கென்ய நாட்டு வீரர்கள் ஊக்கமருந்து பயன்படுத்திய குற்றச்சாட்டில் தடைக்குள்ளாகியிருந்தனர். இதன்காரணமாக, அந்நாட்டு அரசாங்கம் ஊக்கமருந்து பயன்படுத்தும் வீரர்களை  குற்றவியல் அபராதத்தின் கீழ் கைதுசெய்து சிறைத்தண்டனை வழங்குவதற்கான யோசனையை நிறைவேற்றியமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்

>>மேலும் பல மெய்வல்லுனர்  செய்திகளைப் படிக்க<<