உலகக் கிண்ணத்திற்கு தகுதிபெறும் இறுதிக்கட்ட பலப்பரீட்சை ஆரம்பம்

232
Last stage of FIFA

ரஷ்யாவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள FIFA உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் விளையாடும் 32 அணிகளையும் தீர்மானிக்கும் இறுதிக் கட்ட தகுதிகாண் போட்டிகள் இன்று (9) ஆரம்பமாகவுள்ளன.

பிரேசில், ஆர்ஜன்டீனா, ஜெர்மனி என பல பலம்மிக்க அணிகளும் ஏற்கனவே உலகக் கிண்ணத்திற்கு தகுதிபெற்றுள்ள நிலையில் உலகெங்கும் மேலும் சில அணிகள் தமது உலகக் கிண்ண வாய்ப்புக்காக இறுதி முயற்சியில் ஈடுபடவுள்ளன.  

மிகச் சிறிய நாடாக சாதனையுடன் உலகக் கிண்ணத்திற்கு தகுதிபெற்ற ஐஸ்லாந்து

கடந்த ஆண்டு ஐரோப்பிய கிண்ணத்தில் இங்கிலாந்தை…

ஆபிரிக்க மண்டலத்தில் இரண்டாவது சுற்றின் கடைசிக் கட்ட குழுநிலைப் போட்டிகள் நாளை (10) தொடக்கம் நவம்பர் 14ஆம் திகதிவரை நடைபெறவுள்ளன. ஆபிரிக்காவில் இருந்து நைஜீரியா, எகிப்து அணிகள் ஏற்கனவே உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெற்ற நிலையில் ஏஞ்சியுள்ள மூன்று இடங்களுக்கும் பலமான போட்டி நிலவுகிறது.  

ஏனைய மண்டலங்களில் பிளோ ஓப் போட்டிகள் இடம்பெறவுள்ளன. இதில் ஐரோப்பிய மண்டலத்தில் உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெற எஞ்சி இருக்கும் நான்கு இடங்களுக்காக எட்டு அணிகள் இன்று (09) தொடக்கம் நவம்பர் 14ஆம் திகதி வரை நடைபெறும் தகுதிகாண் போட்டிகளில் பலப்பரீட்சை நடத்தும்.

ஏற்கனவே தகுதிபெற்ற அணிகள்

உலகக் கிண்ணத்தை நடத்தும் ரஷ்யா தகுதிகாண் போட்டியில் பங்கேற்காமலேயே தனது இடத்தை உறுதி செய்த நிலையில் எஞ்சிய 31 இடத்திற்கும் 200க்கும் அதிகமான FIFA உறுப்பு நாடுகளும் கடந்த இரண்டரை ஆண்டுகளாக தகுதிகாண் போட்டிகளில் பங்கேற்றன.

இதுவரை மொத்தம் 23 நாடுகள் உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெற்றுள்ளன. நடப்புச் சம்பியன் ஜெர்மனியும் தகுதிகாண் போட்டியில் பங்கேற்றே ரஷ்யா செல்வதற்கான இடத்தை உறுதி செய்து கொண்டது.

இதில் வெறும் 335,000 மக்கள் தொகை கொண்ட ஐஸ்லாந்து இதுவரை காலத்தில் உலகக் கிண்ணத்திற்கு தகுதிபெற்ற மிகச் சிறிய நாடு என்ற சாதனையோடு உலகக் கிண்ணத்தில் தனது இடத்தை உறுதி செய்துகொண்டது.

FIFA தரவரிசையில் 98 ஆவது இடத்தில் இருக்கும் சவூதி அரேபியா அடுத்த உலகக் கிண்ணத்திற்கு தகுதிபெறும்போது, நான்கு மாதங்களுக்கு முன்னர் தரவரிசையில் நான்காவது இடத்தில் இருந்த சிலி 32 அணிகளுக்குள் இடம்பிடிக்க தவறியது துரதிஷ்டமே.

ஐரோப்பிய மண்டலத்தில் A குழுவில் ஆடிய பலம்மிக்க நெதர்லாந்து அந்த குழுவில் மூன்றாவது இடத்திற்கு சரிந்து உலகக் கிண்ண வாய்ப்பை இழந்தது. அதேபோன்று, தொடர்ச்சியாக கடந்த எட்டு உலகக் கிண்ணப் போட்டிகளுக்கு தகுதி பெற்றிருந்த அமெரிக்காவும் இம்முறை உலகக் கிண்ண வாய்ப்பை இழந்தது.    

எந்தவித வெற்றியுமின்றி நாடு திரும்பும் இலங்கை கனிஷ்ட அணி

தஜிகிஸ்தானில் நடைபெற்று முடிந்திருக்கும் 19 வயதுக்கு..

இதன்படி 28 ஆண்டுகளுக்குப் பின் எகிப்து அணி முதல் முறை உலகக் கிண்ணத்தில் ஆட வாய்ப்பு பெற்றிருப்பதோடு ஆர்ஜன்டீனா கடும் போராட்டத்திற்குப் பின் கடைசி நேரத்திலேயே உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெற்றது. ஆசிய மண்டலத்தில் தென் கொரியா தொடர்ச்சியாக 9ஆவது தடவையாக உலகக் கிண்ணத்திற்கு தகுபெற்றுக்கொண்டது.

2018 FIFA உலகக் கிண்ணத்திற்கு இதுவரை தகுதி பெற்ற 23 அணிகள்

ஆர்ஜன்டீனா, பெல்ஜியம், பிரேசில், கொலம்பியா, கொஸ்டாரிகா, எகிப்து, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஐஸ்லாந்து, ஈரான், ஜப்பான், மெக்சிகோ, நைஜீரியா, பனாமா, போலந்து, போர்த்துகல், ரஷ்யா, சவூதி அரேபியா, செர்பியா, தென் கொரியா, ஸ்பெயின், உருகுவே.

ஐரோப்பா

உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகளில் விறுவிறுப்பை எட்டிய மண்டலமாக ஐரோப்பா மாறியுள்ளது. ஐரோப்பிய மண்டலத்தில் ஒவ்வொரு அணியும் ஒன்றோடு ஒன்று சளைக்காதவை என்பதால் ஆரம்பம் தொட்டே தகுதிகாண் போட்டிகள் பரபரப்பாகக் காணப்பட்டன.

ஐரோப்பிய மண்டத்தில் மொத்தம் 13 அணிகள் தகுதிபெறும் என்ற நிலையில் நடந்து முடிந்த ஒன்பது குழுக்களுக்கு இடையிலான போட்டிகளில் ஒவ்வொரு குழுவிலும் முதல் இடத்தை பிடித்த அணிகள் ஏற்கனவே உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெற்றுவிட்டன.

எஞ்சியிருக்கும் நான்கு இடங்களுக்கு எட்டு நாடுகள் போட்டியிடுகின்றன. ஸ்லோவாக்கியா தவிர குழுநிலையில் ஒவ்வொரு குழுவிலும் இரண்டாவது இடத்தை பிடித்த அணிகளே பிளே ஓப் (play-off) முறையில் ஆடவுள்ளன. இதன்படி ஒவ்வொரு அணியும் மற்றொரு அணியுடன் சொந்த நாடு மற்றும் எதிரணியின் நாட்டில் தலா ஒரு போட்டியில் ஆடும். இதில் முதலிடம் பெறும் அணி உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெறும்.

<

வட அயலாந்து எதிர் சுவிட்சர்லாந்து

முதல் போட்டி: நவம்பர் 9 (இன்று), பெல்பாஸ்ட்
இரண்டாவது போட்டி: நவம்பர் 12 (ஞாயிறு), பசெல்

வட அயர்லாந்து மற்றும் சுவிட்சர்லாந்து அணிகள் 1964ஆம் ஆண்டுக்குப் பின் தொடர் ஒன்றில் பலப்பரீட்சை நடத்தியதில்லை. அதேபோன்று வட அயர்லாந்து 1986 இற்குப் பின் முதல் முறை உலகக் கிண்ணத்திற்கு முன்னேற எதிர்பார்த்துள்ளது.    

C குழுவில் நடப்புச் சம்பியன் ஜெர்மனிக்கு அடுத்து இரண்டாவது இடத்தை பிடித்த வட அயர்லாந்து 2016 யூரோ கிண்ணத்தில் முதல் 16 இடங்களுக்கு முன்னேறிய நிலையில் பெரும் எதிர்பார்ப்புடனேயே களமிறங்குகிறது.

எனினும் C குழுவில் போர்த்துகலுடன் மாத்திரம் தோல்வியை சந்தித்து, ஏனைய அனைத்து போட்டிகளிலும் வென்ற சுவிட்சர்லாந்து பலம் கொண்ட அணியாகவே களமிறங்குகிறது.  

டென்மார்க் எதிர் அயர்லாந்து குடியரசு

முதல் போட்டி: நவம்பர் 11 (சனிக்கிழமை), கோபன்ஹேகன்
இரண்டாவது போட்டி: நவம்பர் 14 (செவ்வாய்), டப்லின்

அயர்லாந்து குடியரசு ஐரோப்பிய சம்பியன்ஷிப் போட்டிக்கு அடுத்தடுத்து தகுதி பெற்றபோதும் 2002ஆம் ஆண்டுக்குப் பின் உலகக் கிண்ணத்திற்கு தகுதிபெறவில்லை. டென்மார்க் கடைசியாக 2010ஆம் ஆண்டிலேயே உலகக் கிண்ணத்திற்கு தகுதிபெற்றது.   

அயர்லாந்து அணியின் குறிப்பிடத்தக்க நட்சத்திர வீரர்கள் இல்லாதபோதும் டென்மார்க் அணி வசம் ஐரோப்பாவின் சிறந்த வீரர்களில் ஒருவரான கிரிஸ்டியன் எரிக்சன் பிளோ ஓப் போட்டிகளில் விளையாடவுள்ளார். தகுதிகாண் போட்டிகளில் அவர் எட்டு கோல்களை புகுத்தினார்.

சுவீடன் எதிர் இத்தாலி

முதல் போட்டி: நவம்பர் 10 (நாளை), ஸ்டொக்ஹோம்
இரண்டாவது போட்டி: நவம்பர் 13 (திங்கள்), மிலான்

நான்கு முறை உலகக் கிண்ணத்தை வென்ற இத்தாலி உலகக் கிண்ண வாய்ப்பை தவறவிடுவது எதிர்பார்க்க முடியாத ஒன்று. அந்த அணி 1958ஆம் ஆண்டிலேயே கடைசியாக உலகக் கிண்ணத்திற்கு தகுதிபெறத் தவறியது. அப்போது உலகக் கிண்ணப் போட்டியை சுவீடன் நடத்தியது தற்செயல் நிகழ்வு.

2017ஆம் ஆண்டின் சிறந்த கால்பந்து வீரராக ரொனால்டோ தெரிவு

2017ஆம் ஆண்டுக்கான பிபாவின் (FIFA) சிறந்த கால்பந்து வீரருக்கான விருதை…

கடைசி இரண்டு உலகக் கிண்ண போட்டிகளுக்கும் சுவீடன் தகுதிபெறவில்லை. எனினும் தனது சொந்த மண்ணில் தொடர்ச்சியாக ஏழு போட்டியில் தோல்வியுறாத அணியாக சுவீடன் உள்ளது. இத்தாலி கடைசியாக ஆடிய நான்கு போட்டிகளில் இரண்டில் தோல்விடைந்துள்ளது.    

குரோஷியா எதிர் கிரேக்கம்    

முதல் போட்டி: நவம்பர் 9 (இன்று), சக்ரெப்
இரண்டாவது போட்டி: நவம்பர் 12 (ஞாயிறு), பிரியுஸ்

FIFA தரவரிசையில் 47ஆவது இடத்தில் இருக்கும் குரோஷியா சுதந்திர நாடான பின் இடம்பெற்ற 11 பிரதான போட்டித் தொடர்களில் ஒன்பதில் ஆட தகுதி பெற்றுள்ளது. உக்ரைன் அணியை 2-0 என வீழ்த்தியே குரோஷியா குழுவில் இரண்டாவது இடத்தை பிடித்தது.  

H குழுவில் பெல்ஜியத்திற்கு அடுத்து இரண்டாவது இடத்தை பிடித்த கிரேக்கம் தொடர்ச்சியாக மூன்றாவது உலகக் கிண்ணப் போட்டிகளுக்கு தகுதிபெற பலப்பரீட்சை நடத்துகிறது.

தென் அமெரிக்க/ஓசியானியா

நியூசிலாந்து எதிர் பெரு (நவம்பர் 11, நவம்பர் 16)

ஓசியானியா மண்டலத்தில் சம்பியனான நியூசிலாந்து உலகின் 10ஆவது இடத்தில் இருக்கும் பெருவை எதிர்கொள்வது அந்த அணிக்கு பெரும் சவாலாகும். நியூசிலாந்து FIFA தரவரிசையில் 122 ஆவது இடத்திலேயே உள்ளது.

தென் அமெரிக்க மண்டல தகுதிகாண் போட்டியில் பெரு ஐந்தாவது இடத்தை பிடித்தே பிளே ஓப் சுற்றுக்கு முன்னேறியது. 1982 ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதல் முறை உலகக் கிண்ணத்திற்கு தகுதிபெறும் எதிர்பார்ப்போடே பெரு களமிறங்கவுள்ளது. அதே 1982ஆம் ஆண்டிலேயே நியூசிலாந்து முதல் முறை உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெற்றது.   

துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளர் சமரவீர இன்றி இந்தியா சென்ற இலங்கை அணி

ஏழு வார கிரிக்கெட் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டு…

2009 ஆம் ஆண்டு வெளிங்கடனில் 35,000 ரசிகர்கள் முன் பஹ்ரைனை 1-0 என வீழ்த்தி நியூசிலாந்து இரண்டாவது முறை உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெற்றிருந்தமை நினைவுகூறத்தக்கது.  

ஆசியா/மத்திய அமெரிக்கா

ஹொன்டுராஸ் எதிர் அவுஸ்திரேலியா (நவம்பர் 10, நவம்பர் 15)

ஆசிய மண்டலத்திற்கான பிளே ஓப் போட்டியில் சிரியாவை வீழ்த்தியே அவுஸ்திரேலியா, மண்டலங்களுக்கு இடையிலான பிளே ஓப் போட்டிக்கு முன்னேறியது.

தொடர்ச்சியாக மூன்றாவது முறை உலகக் கிண்ணத்திற்கு தகுதிபெறும் எதிர்பார்ப்புடனேயே ஹொன்டுராஸ் அவுஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. எனினும் அவுஸ்திரேலியா கடந்த மூன்று உலகக் கிண்ணப் போட்டிகளிலும் விளையாடியுள்ளது. இதில் யார் உலகக் கிண்ணத்திற்கு தகுதிபெறப்போகிறார்கள் என்று தெரிவதற்கு இன்னும் இரண்டு போட்டிகளே எஞ்சியுள்ளன.

ஆபிரிக்கா

முக்கிய போட்டிகள்:

தென்னாபிரிக்கா எதிர் செனகல் (நவம்பர் 10, நவம்பர் 14)
துனீஷியா எதிர் லிபியா (நவம்பர் 11)
ஐவொரி கோஸ்ட் எதிர் மொரோக்கோ (நவம்பர் 11)

ஆபிரிக்க மண்டலத்தில் எஞ்சிய குழுநிலைப் போட்டிகளே நடைபெறவுள்ளன. எனவே ஐந்து குழுக்களின் முதல் இடத்தை பெறும் அணி உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெறும்.  

தனது குழுவில் முதலிடத்தை உறுதி செய்த நைஜீரியா மற்றும் எகிப்து ஏற்கனவே தகுதிபெற்றுவிட்டன. மேலும் மூன்று இடங்கள் எஞ்சியுள்ளன. இதில் துனீஷியா பொரும்பாலும் தகுதிபெற்றுவிடும் என்று எதிர்பார்க்கலாம். அதற்கு லிபியாவுடனான போட்டியில் அவ்வணி ஒரு புள்ளியை பெற்றால் போதுமானது.  

மொரொக்கோவுடனான எதிர்வரும் போட்டியை வென்றால் ஐவொரி கோஸ்டுக்கு C குழுவில் இருந்து உலகக் கிண்ணத்திற்கு முன்னேறலாம். அதேபோன்று D குழுவில் செனகலும் உலகக் கிண்ணத்திற்கு தகுதிபெற பிரகாசமான வாய்ப்பு உள்ளது. எனினும் தென்னாபிரிக்காவுடனான அடுத்தடுத்த போட்டிகளில் வெல்வது கட்டாயம்.   

குறித்த போட்டிகளின் முடிவில் உலகக் கிண்ணத்திற்கு தெரிவாகிய அணிகள் குறித்த தகவல்களை ThePapare.com ஆகிய நாம் உடனுக்குடன் வழங்கத் தயாராக உள்ளோம்.