சர்வதேச கிரிக்கெட்டின் சாதனைகளும், சம்பவங்களும் – 2018 மீள் பார்வை

213

கடந்து சென்றுள்ள 2018ஆம் ஆண்டானது விளையாட்டு உலகில் பல முக்கிய நிகழ்வுகள் இடம்பெற்ற ஒரு ஆண்டாக உள்ளது. அவ்வாறு கிரிக்கெட் விளையாட்டில், கடந்த ஆண்டு பதிவாகிய முக்கிய சம்பவங்கள் குறித்து இந்த ஆக்கத்தினூடாகப் பார்ப்போம்.  

  • ஸ்டீவ் ஸ்மித்தின் ஆறாயிரத்துடன் ஆரம்பித்த 2018

அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவர் ஸ்டீவ் ஸ்மித் டெஸ்ட் போட்டிகளில் வேகமாக 6000 ஓட்டங்கள் கடந்த இரண்டாவது வீரர் என்ற சாதனை படைக்க, அவுஸ்திரேலிய அணி ஏஷஷ் தொடரை 4-0 என கைப்பற்றியது.

இலங்கை கிரிக்கெட் அணிக்கு கடந்த ஆண்டு எப்படி இருந்தது?

அடிக்கடி மாறிய அணித்தலைவர்கள், மிகவும் மோசமான துடுப்பாட்டம், முக்கிய வீரர்களது உபாதைகள்

  • வைட்வொஷ் தோல்வியுடன் வருடத்தை ஆரம்பித்த பாகிஸ்தான்

நியூசிலாந்து மற்றும் சுற்றுலா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 5-0 என வைட்வொஷ் முறையில் இழந்த பாகிஸ்தான் அணி, நியூசிலாந்திடம் படுதோல்வியடைந்தது.

  • 19 வயக்குட்பட்டோர் உலகக் கிண்ணத்தை கைப்பற்றிய இந்தியா

நியூசிலாந்தில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கிண்ண இறுதிப் போட்டியில், அவுஸ்திரேலிய அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, நான்காவது முறையாக சம்பியனாகியது இந்திய அணி.

image courtesy – ICC
  • உலகக் கிண்ணத் தகுதிகாண் தொடரின் சம்பியனான ஆப்கானிஸ்தான்

ஜிம்பாப்வேயில் நடைபெற்ற 2019ம் ஆண்டு உலகக் கிண்ணத் தொடருக்கான தகுதிகாண் போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அணி சம்பியனானது. இதன்மூலம், 2019ம் ஆண்டு உலகக்கிண்ணத் தொடருக்கு மே.தீவுகள் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் தகுதிப்பெற்றன.

image courtesy – ICC
  • 2018ம் ஆண்டின் பேசுபொருளாக மாறிய பந்தை சேதப்படுத்திய விவகாரம்

தென்னாபிரிக்க அணிக்கு எதிராக கேப்டவுனில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் போது, அவுஸ்திரேலிய அணியின் துடுப்பாட்ட வீரர், கெமரூன் பென்கிரொப்ட் மணல் கடதாசியின் மூலம் பந்தை சேதப்படுத்தியமை கெமராவில் பதிவாகியது.

இதனையடுத்து விசாரணை மேற்கொண்ட அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை, அவுஸ்திரேலிய அணியின் தலைவர் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் உப தலைவர் டேவிட் வோர்னர் ஆகியோருக்கு ஒருவருட போட்டித் தடை விதித்ததுடன், கெமரூன் பென்கிரொப்ட்டுக்கு 9 மாத போட்டித் தடை விதித்திருந்தது.

image courtesy – ICC
  • மோர்னே மோர்க்கலின் ஓய்வு

அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக வொண்டரசில் நடைபெற்ற நான்காவது டெஸ்ட் போட்டியுடன், தென்னாபிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் மோர்னே மோர்கல் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றார். இவர் இறுதி டெஸ்ட் போட்டியில் 110 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார்.

  • அயர்லாந்தின் கன்னி டெஸ்ட்

சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் டெஸ்ட் அந்தஸ்தை பெற்ற அயர்லாந்து அணி, பாகிஸ்தான் அணிக்கு எதிராக தங்களுடைய கன்னி டெஸ்ட் போட்டியில் விளையாடியது. இந்தப் போட்டியில் அயர்லாந்தின் கெவின் ஓ பிரைன் சதமடிக்க, பாகிஸ்தான் அணி தடுமாற்றத்துக்கு மத்தியில் போட்டியில் வெற்றிபெற்றது.

image courtesy – ICC
  • ஐ.பி.எல் சம்பியன் கிண்ணம் சென்னை வசம்

இந்தியாவில் நடைபெற்ற, ஐ.பி.எல். தொடரின் சம்பியன் கிண்ணத்தை இரண்டு வருட தடைக்கு பின்னர் திரும்பிய சென்னை சுப்பர் கிங்ஸ் அணி கைப்பற்றியது.

image courtesy – IPLT20.COM
  • ஏபி.டி. வில்லியர்ஸின் திடீர் ஓய்வு

ஐ.பி.எல். தொடரில் விளையாடிய தென்னாபிரிக்க அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரர் ஏபி.டி.வில்லியர்ஸ் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து திடீர் (மே 27) ஓய்வை அறிவி்த்தார்.

  • சாதனை ஓட்டங்களை விளாசிய நியூசிலாந்து மகளிர் அணி

அயர்லாந்து மகளிர் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 4 விக்கெட்டுக்களை இழந்து 491 ஓட்டங்களை விளாசிய நியூசிலாந்து மகளிர் அணி, சர்வதேச கிரிக்கெட்டில் அதிகூடிய ஒருநாள் ஓட்டங்களை பெற்ற சாதனையை பதிவுசெய்தது.

image courtesy – Espncricinfo
  • எமிலியா கெர்ரின் அதிரடி

நியூசிலாந்து மகளிர் அணியின் 17 வயதான எமிலியா கெர், மகளிர் ஒருநாள் போட்டிகளில் அதிகூடிய ஓட்டங்களை விளாசிய வீராங்கனை என்ற சாதனையை படைத்தார். இவர் அயர்லாந்து மகளிர் அணிக்கு எதிரான போட்டியில் 145 பந்துகளில் 232 ஓட்டங்களை விளாசினார். அத்துடன் இந்தப் போட்டியில் 5 விக்கெட்டுகளையும் அவர் வீழ்த்தினார்.

image courtesy – Espncricinfo

குசல் பெரேரா சதமடித்தும் முதல் போட்டியில் தோல்வியை தழுவிய இலங்கை

சுற்றுலா இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று

  • ஸ்கொட்லாந்து அணி அபாரம்

ஸ்கொட்லாந்து கிரிக்கெட் அணி, வரலாற்றில் முதன் முறையாக இங்கிலாந்து அணியை ஒருநாள் போட்டியொன்றில் வீழ்த்தி, தொடர் வெற்றியினை பெற்றது.

bbc.co.uk
  • மகளிர் ஆசியக் கிண்ணத்தை வென்ற பங்களாதேஷ்

மலேசியாவில் நடைபெற்ற மகளிர் ஆசியக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில், ஆறு தடவைகள் சம்பியனாகிய இந்திய அணியை வீழ்த்தி, பங்களாதேஷ் மகளிர் அணி சம்பியனாகியது.

image courtesy – ICC
  • கன்னி டெஸ்ட் போட்டியில் விளையாடிய ஆப்கானிஸ்தான்

ஐசிசியின் டெஸ்ட் அந்தஸ்தை பெற்ற ஆப்கானிஸ்தான் அணி, தங்களுடைய முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவுடன் மோதியது. இந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி இன்னிங்ஸால் தோல்வியடைந்தது.

image courtesy – ICC
  • சாதனை இணைப்பாட்டத்தை பகிர்ந்த இமாம் – பக்ஹர் ஷமான்

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில், பாகிஸ்தான் அணியின் துடுப்பாட்ட வீரர்களான இமாம் உல் ஹக் மற்றும் பக்ஹர் ஷமான் ஆகியோர் இணைந்து முதல் விக்கெட்டுக்காக 304 ஓட்டங்களை பகிர்ந்து சாதனை படைத்தனர். இதில், பக்ஹர் ஷமான் 244 ஓட்டங்களை பெற்று, பாகிஸ்தான் அணிக்காக இரட்டைச் சதம் கடந்த முதல் வீரர் (ODI) என்ற பெருமையையும் பெற்றார்.

image courtesy – ICC
  • அலெஸ்டயர் குக் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு

இந்திய அணிக்கு எதிரான ஐந்தாவதும், இறுதியுமான டெஸ்ட் போட்டியுடன், இங்கிலாந்து அணியின் முன்னாள் தலைவரும் ஆரம்பத் துடுப்பாட்ட வீரருமான அலெஸ்டயர் குக் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விடைபெற்றார். இவருடைய இறுதி டெஸ்ட் போட்டியில் குக் சதம் விளாசியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

image courtesy – Espncricinfo

டி20 போட்டிகளில் புதிய மைக்கல்லை எட்டிய ரஷீட் கான்

கடந்த ஆண்டில் அதிக டி20 விக்கெட்டுக்களை வீழ்த்தியதும், 90க்கும் மேற்பட்ட

  • அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய ஜேம்ஸ் அண்டர்சன்

இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் அண்டர்சன் இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில், கிளேன் மெக்ரா்த்தின் சாதனையை தகர்த்து, டெஸ்ட் போட்டிகளில் அதிகூடிய விக்கெட்டுகளை (564) வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை படைத்தார்.

image courtesy – Espncricinfo
  • ஆசியக் கிண்ண சம்பியனாகிய இந்தியா

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்ற ஆசியக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில், பங்களாதேஷ் அணியை வீழ்த்தி இந்திய அணி சம்பியனானது.

image courtesy – Espncricinfo
  • மகளிர் T20I உலகக் கிண்ணம் அவுஸ்திரேலியா வசம்

மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்ற மகளிருக்கான T20I உலகக் கிண்ணத் தொடரின் சம்பியன் கிண்ணத்தை அவுஸ்திரேலிய மகளிர் அணி வென்றது. இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை, அவுஸ்திரேலிய அணி வீழ்த்தியிருந்தது.

image courtesy – Espncricinfo
  • 17 வருடங்களுக்கு பின்னர் ஜிம்பாப்வே அணிக்கு டெஸ்ட் வெற்றி

பங்களாதேஷ் அணிக்கு எதிராக சில்ஹெட் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் ஜிம்பாப்வே அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியானது 17 வருடங்களுக்கு பின்னர் நாட்டுக்கு வெளியில் அந்த அணி பெற்றுக்கொண்ட டெஸ்ட் வெற்றியாக பதிவாகியது.

image courtesy – Espncricinfo

 காணொளிகளைப் பார்வையிட

  • வேகமாக 200 டெஸ்ட் விக்கெட்டுகளை கைப்பற்றி யசீர் ஷா

நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது, வேகமாக 200 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற பெருமையை யசீர் ஷா பெற்றுக்கொண்டார். இவர் 33 டெஸ்ட் போட்டிகளில் இந்த மைல் கல்லை எட்டியிருந்தார்.

image courtesy – Espncricinfo
  • 49 வருட சாதனையை புதுப்பித்த நியூசிலாந்து

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை, 2-1 என கைப்பற்றிய நியூசிலாந்து அணி 49 வருட சாதனையை தகர்த்திருந்தது. 1969ம் ஆண்டுக்கு பின்னர் வெளிநாட்டு மண்ணில் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை நியூசிலாந்து அணி கைப்பற்றி, சாதனை படைத்தது.

image courtesy – The National
  • ஷோர்ன் பொல்லக்கின் சாதனையை முறியடித்த ஸ்டெய்ன்

பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தனது முதல் விக்கெட்டை வீழ்த்திய டேல் ஸ்டெய்ன், தென்னாபிரிக்க அணி சார்பில் அதிகூடிய டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற பெருமையை பெற்றார். டெஸ்ட் கிரிக்கெட்டில் ஷோர்ன் பொல்லக் 421 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்த நிலையில், ஸ்டெய்ன் 422 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனையை முறியடித்தார்.

image courtesy – Espncricinfo

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க