ஐ.சி.சி T-20 தரவரிசையில் இலங்கை, இந்திய வீரர்கள் முன்னேற்றம்

1108
Sri Lankan players moves up in ICC T20I rankings

இலங்கை, இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதிய சுதந்திரக் கிண்ண முத்தரப்பு T-20 தொடர், சர்ச்சைகள் மற்றும் சாகசங்கள் என்பவற்றுடன் கடந்த வாரம் நிறைவுக்கு வந்தது.

[rev_slider LOLC]

இந்நிலையில், குறித்த தொடருக்குப் பின்னர் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் T-20 போட்டிகளுக்கான வீரர்களின் தரவரிசை நேற்றுமுன்தினம் வெளியிட்டிருந்தது. அதில் பல வீரர்கள் அதிரடி முன்னேற்றம் கண்டுள்ளனர்.

இதில் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் இலங்கை அணியின் அதிரடித் துடுப்பாட்ட வீரர் குசல் ஜனித பெரேரா 20 இடங்கள் முன்னேறி 20ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளார். இவர் சுதந்திரக் கிண்ணத் தொடரில் 3 அரைச்சதங்கள் அடங்கலாக 204 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தினேஷ் கார்த்திக்கின் சாகச துடுப்பாட்டத்தால் சுதந்திரக் கிண்ணம் இந்தியா வசம்

கடைசி இரண்டு ஓவர்களிலும் தனது துடுப்பாட்டத்தால் சாகசம் நிகழ்த்திய தினேஷ் …

இதேவேளை, 48ஆவது இடத்திலிருந்த குசல் மெண்டிஸ் 27ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். இத்தொடரில் அவர், 2 அரைச்சதங்கள் உள்ளடங்கலாக 134 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.

இதேநேரம், அதிரடியுடன் இறுதிப் போட்டியை நிறைவுசெய்த தினேஷ் கார்த்திக் 125ஆவது இடத்திலிருந்து 95ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

அத்துடன், இந்திய வீரர்களான லோகேஷ் ராகுல் 12ஆவது இடத்தையும், ரோஹித் சர்மா 13ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டுள்ள அதேநேரம், 11 இடங்கள் முன்னேற்றம் கண்ட ஷிகர் தவான் 17ஆவது இடத்தை பெற்றுக்கொண்டுள்ளார்.

இந்நிலையில், இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சஹால் T20 பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் 12 இடங்கள் முன்னேறி முதற்தடவையாக 2ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.

இதனையடுத்து இந்திய அணியின் இளம் பந்துவீச்சாளர் வொஷிங்டன் சுந்தர் 151ஆவது இடத்திலிருந்து அதிரடி ஏற்றம் கண்டு 31ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். சுதந்திரக் கிண்ணத் தொடரில் பவர் பிளே ஓவர்களில் சுந்தர் பந்து வீசியதுடன், 5.40 எனும் குறைந்த ஓட்ட வேகத்தில் 8 விக்கட்டுகளை வீழ்த்தி பாரிய முன்னேற்றம் அடைந்துள்ளார்.

இதேவேளை இலங்கை அணியின் இளம் சுழற்பந்துவீச்சாளர் அகில தனஞ்சய 35ஆவது இடத்துக்கும், இந்தியாவின் ஜெயதவ் உனத்கட் 52ஆவது இடத்துக்கும் முன்னேறியுள்ளதுடன், சர்துல் தாகூர் 76ஆவது இடத்துக்கு ஏற்றம் கண்டுள்ளார்.

உடைமாற்றும் அறைக் கதவை உடைத்தவர் ஷகீப் அல் ஹஸன்

பங்களாதேஷுக்கு எதிராக இந்திய அணி கடைசி பந்தில் திரில் வெற்றி ஒன்றை பெற்ற சுதந்திரக் கிண்ண இறுதிப் போட்டியில்…

அத்தடன், பங்களாதேஷ் வீரர் முஸ்தபிசூர் ரஹ்மான் ஒரு இடம் சறுக்கி 8ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளதுடன், ருபெல் ஹொசைன், 40 இடங்கள் முன்னேறி 42ஆவது இடத்துக்கு முன்னேற்றம் கண்டுள்ளார்.

இதேவேளை, சகலதுறை வீரர்களுக்கான பட்டியலில் இலங்கை அணியின் திசர பெரேரா ஒரு இடம் முன்னேற்றம் கண்டு 6ஆவது இடத்தை பிடித்துள்ளதுடன், இதுவரை காலமும் முதலிடத்தில் இருந்த சகிப் அல் ஹசன் 3ஆவது இடத்துக்கு பின்தள்ளப்பட்டுள்ளார்.  

இந்நிலையில், .சி.சியின் T-20 தரவரிசையில் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் நியூசிலாந்தின் கொலின் மன்ரோவும், பந்து வீச்சாளர்களில் ஆப்கானிஸ்தான் வீரர் ராஷித் கானும், சகலதுறை வீரர்களில் அவுஸ்திரேலியாவின் கிளென் மெக்ஸ்வெல்லும் முதலிடங்களைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.  

மேலும், அணிகளுக்கான தரவரிசையில் பாகிஸ்தான் முதல் இடத்திலும், அவுஸ்தரேலியா 2ஆவது இடத்திலும் உள்ளதுடன், சுதந்திரக் கிண்ணத் தொடரில் ஒரே ஒரு தோல்வியை சந்தித்து கிண்ணத்தையும் கைப்பற்றிய இந்திய அணி 3ஆவது இடத்துக்கு முன்னேற்றம் கண்டுள்ளது. இந்நிலையில் 89 புள்ளிகளுடன் இலங்கை அணி 8ஆவது இடத்திலும், 77 புள்ளிகளுடன் பங்களாதேஷ் அணி 10ஆவது இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.