ஐசிசியின் குற்றச்சாட்டுகளை மறுக்கும் அவிஷ்க குணவர்தன

201

எமிரேட்ஸ் கிரிக்கெட் சபையின் (ECB) சார்பாக, சர்வதேச கிரிக்கெட் வாரியம் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளுக்கும் தனக்கும் எவ்வித தொடர்புகளும் இல்லை என இலங்கை ஏ அணியின் முன்னாள் தலைமை பயிற்றுவிப்பாளர் அவிஷ்க குணவர்தன தெரிவித்தார்.

அவிஷ்க குணவர்தன, சொய்ஸா மீது ஐ.சி.சி. ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டு

எமிரேட்ஸ் கிரிக்கெட் சபையின் (ECB) சார்பாக………

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்ற T10 தொடரின் போது ஆட்டநிர்ணயம் செய்வது தொடர்பிலான செயற்பாடுகளில் ஈடுபட்டதாக இலங்கை அணியின் முன்னாள் வீரர் நுவான் சொய்ஸா மற்றும் ஏ அணியின் பயிற்றுவிப்பாளர் அவிஷ்க குணவர்தன ஆகியோர் மீது ஐசிசி கடந்த வாரம் குற்றம் சுமத்தியிருந்தது.

இந்த நிலையில் சுமத்தப்பட்டுள்ள குற்றங்களுக்கும் தனக்கும் எவ்வித தொடர்புகளும் இல்லை என நேற்று (13) இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பின் போது அவிஷ்க குணவர்தன குறிப்பிட்டார்.

Photos: Press meet of Avishka Gunawardene

அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்,

“நான் ஆட்ட நிர்ணயத்தை ஊக்கப்படுத்தியதாகவும், அது தொடர்பில் அறிவிக்கத் தவறியதாகவும் சர்வதேச கிரிக்கெட் வாரியம் என் மீது குற்றம் சுமத்தியுள்ளது. இந்த குற்றங்கள் தொடர்பில் எனக்கு ஒன்றும் புரியவில்லை. அதனால், நான் எனது சட்டத்தரணி கிரிஸ்மல் வர்ணசூரியவின் மூலமாக மேன்முறையீடு செய்துள்ளேன்.

“அதேநேரம், தற்போது என் மீது உள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் தனிப்பட்ட வீரர் ஒருவர் மூலமாக ஐசிசியிடம் முறைப்பாடு செய்யப்பட்டதாகும். குறித்த வீரரின் ஒழுங்கு மற்றும் உடற்தகுதி காரணமாக என்னால் பல தடவைகள் தேசிய அணியிலிருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார். அதன் காரமணாகவே இந்த குற்றச்சாட்டுகளை என் மீது சுமத்தப்பட்டுள்ளது”

இதேவேளை, ஐசிசியின் இந்த குற்றச்சாட்டுகள் காரணமாக இலங்கை கிரிக்கெட் சபை, ஏ அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து அவிஷ்க குணவர்தனவை இடைநிறுத்தம் செய்திருந்தது. இவ்வாறு, தன்னிடம் எவ்வித விசாரணையும் இல்லாமல் பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து நீக்கியமை தொடர்பிலும், அவிஷ்க குணவர்தன மேன்முறையீடு செய்யவுள்ளார்.

ஐ.சி.சியின் குற்றச்சாட்டுகளை முற்றாக மறுக்கிறேன்: நுவன் சொய்ஸா

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஊழல் மோசடிக்கெதிரான கோவையின் மூன்று சரத்துகளை ……….

இது தொடர்பில் குறிப்பிட்ட இவர், “ஐசிசியின் குற்றச்சாட்டினை அடுத்து இலங்கை கிரிக்கெட் சபை என்னை பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து இடைநிறுத்தியுள்ளது. ஒழுக்காற்று விதிமுறையின் படியே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. ஆனால், என்னிடம் எவ்வித விசாரணைகளையும் மேற்கொள்ளாமல் இவ்வாறு கிரிக்கெட் சபை முடிவெடுத்துள்ளமை தொடர்பிலும் நான் மேன்முறையீடு செய்யவுள்ளேன்” என்றார்”

இலங்கை அணியின் முன்னாள் வீரரான அவிஷ்க குணவர்தன இலங்கை தேசிய அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக செயற்பட்டிருந்ததுடன், இலங்கை வளர்ந்து வரும் அணி மற்றும் இலங்கை ஏ அணிகளுக்கான பயிற்றுவிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவிஷ்க குணவர்தன மீது ஐசிசி சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகள்

சரத்து 2.1.4 சரத்து 2.1.1 இணை மீறி நடக்கும் வகையில் போட்டியில் பங்கெடுப்பவர்களை (அதாவது வீரர்களை) நேரடியான முறையிலோ அல்லது நேரடியற்ற முறையிலோ ஊக்குவித்தல், அணுகுதல், அறிவுறுத்தல் விடுத்தல்.

சரத்து 2.4.5 (வீரர்) ஒருவர் தவறு ஒன்று செய்ததாக இனம்காட்டப்படும் சந்தர்ப்பத்தில் (தகுந்த காரணங்கள் இன்றி அப்படியான) ஏதாவது (ஊழல்) சம்பவமொன்றிற்கு, தேவையான முழு விபரங்களையும் வெளிப்படுத்த தவறுதல்.   

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<