இளையோர் ஒலிம்பிக் விழாவுக்கு தகுதிபெற்ற இலங்கை வீரர்கள் விபரம்

140

ஆர்ஜென்டீனாவின் புவனர்ஸ் அயர்ஸில் நடைபெறவுள்ள இளையோர் ஒலிம்பிக் விளையாட்டு விழாவிற்கு இலங்கையிலிருந்து நான்கு வீரர்கள் தகுதிபெற்றுக் கொண்டனர்.

18 வயதுக்குட்பட்ட வீரர்களுக்காக நடைபெறும் மூன்றாவது இளையோர் ஒலிம்பிக் விழா எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 6ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரை ஆர்ஜென்டீனாவின் புவனர்ஸ் அயர்ஸில் நடைபெறவுள்ளது.

இளையோர் ஒலிம்பிக் போட்டிகளுக்கு இலங்கையிலிருந்து இரு வீரர்கள் தெரிவு

தாய்லாந்தின் பெங்கொங் நகரில் இன்று (04) ஆரம்பமாகிய இளையோர் ஒலிம்பிக்…

இந்த நிலையில், குறித்த போட்டிகளுக்கு தகுதியினைப் பெற்றுக்கொள்வதற்காக தாய்லாந்தின் பெங்கோக் நகரில் கடந்த இரண்டு தினங்களாக நடைபெற்ற ஆசிய தகுதிகாண் போட்டிகளில் இலங்கையின் ஏழு வீர வீராங்கனைகள் பங்கேற்றிருந்தனர்.

இதில், போட்டிகளின் முதல் நாளான நேற்றுமுன்தினம் (04) நடைபெற்ற பெண்களுக்கான 2000 மீற்றர் தடைதாண்டல் ஓட்டப் போட்டியில் கலந்துகொண்ட, ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனரில் பெண்களுக்கான 3000 மீற்றர் தடைதாண்டல் போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்ற குளியாப்பிட்டிய மத்திய கல்லூரி மாணவி பாரமி வசந்தி மாரிஸ்டெல்லா, தங்கப் பதக்கத்துடன் இளையோர் ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபற்றும் வாய்ப்பைப் பெற்றுக்கொண்டார்.

குறித்த போட்டித் தூரத்தை 6 நிமிடங்களும் 35.20 செக்கன்களில் ஓடிமுடித்த அவர், அதிசிறந்த தனிப்பட்ட நேரப் பெறுதியையும் பதிவுசெய்தார்.

இதேநேரம், இளையோர் ஒலிம்பிக் விழாவுக்கான அதிசிறந்த காலத்தைப் பதிவு செய்த முதல் வீராங்கனையாகவும் அவர் இடம்பிடித்தார். முன்னதாக பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த கிளயர் பலு என்ற வீராங்கனை குறித்த போட்டியை 6 நிமிடங்களும் 35.80 செக்கன்களில் ஓடிமுடித்ததே சிறந்த காலப் பிரதியாகப் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட இலங்கை அணியின் மத்திய தூர ஓட்ட வீரரான குருநாகல் ஸ்ரீமத் ஜோன் கொத்தலாவல கல்லூரியைச் சேர்ந்த டிலான் போகொட குமாரசிங்க, தங்கப் பதக்கம் வென்றார். அதற்காக அவர் 48.58 செக்கன்களை எடுத்துக் கொண்டார். இது அவரது அதிசிறந்த தனிப்பட்ட நேரப் பெறுமதியாகும்.

இதன்படி, ஆசியாவின் மிகவும் வேகமான மத்திய தூர ஓட்ட வீரராக, இளையோர் ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் பங்குபற்றும் வாய்ப்பை டிலான் போகொட பெற்றுக்கொண்டார்.

இதேநேரம், போட்டிகளின் இரண்டாவது நாளான நேற்று (05) நடைபெற்ற ஆண்களுக்கான உயரம் பாய்தல் போட்டியில் கலந்துகொண்ட கொழும்பு றோயல் கல்லூரி மாணவன் செனிரு அமரசிங்க, 2.14 மீற்றர் உயரத்தைத் தாவி வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.

ஆசிய விளையாட்டு விழாவில் 185 இலங்கை வீர, வீராங்கனைகள்

இந்தோனேஷியாவின் ஜகார்த்தாவிலும்…

தனது அதிசிறந்த தனிப்பட்ட உயரத்தைப் பதிவுசெய்த அவர், குறித்த போட்டிப் பிரிவில் உலக இளையோர் தரவரிசையில் மூன்றாவது இடத்தையும் பெற்று இம்முறை இயையோர் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பை உறுதி செய்தார்.

  • பாரமி வசந்தி மாரிஸ்டெல்லா

இந்த நிலையில், அண்மையில் நிறைவுக்கு வந்த தேசிய கனிஷ்ட மற்றும் தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடர்களில் 100 மற்றும் 200 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்தி பதக்கங்களை வென்று அசத்திய கேட்வே சர்வதேச பாடசாலை மாணவி ஷெலிண்டா ஜென்சென், நேற்று நடைபெற்ற பெண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப் போட்டியின் இறுதிப் போட்டியில் நான்காவது இடத்தைப் பெற்றுக்கொண்டார். அதற்காக அவர் 25.50 செக்கன்களை எடுத்துக் கொண்டார்.

எனினும், முன்னதாக நடைபெற்ற தகுதிச் சுற்றுப் போட்டியில் (24.99 செக்.) தனது இரண்டாவது அதிசிறந்த நேரப்பெறுதியைப் பதிவுசெய்த அவர், குறித்த போட்டிப் பிரிவில் நான்காவது சிறந்த நேரப் பெறுமதியைப் பதிவுசெய்த வீராங்கனையாக இளையோர் ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் பங்கேற்கும் வாய்ப்பை பெற்றுக்கொண்டார்.

 >> காணொளிகளைப் பார்வையிட

இதேவேளை, பெண்களுக்கான 1500 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட வலள ஏ ரத்னாயக்க கல்லூரி மாணவி சாமினி ஹேரத்துக்கு எதிர்பார்த்தளவு திறமையை வெளிப்படுத்த முடியாமல் போனது.

குறித்த போட்டியை 4 நிமிடங்களும் 41.92 செக்கன்களில் நிறைவுசெய்த அவருக்கு ஐந்தாவது இடத்தை மாத்திரமே பெற்றுக்கொள்ள முடிந்தது.

அதேபோல, ஆண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட பம்பலப்பிட்டி புனித பேதுரு கல்லூரி மாணவன் தினெத் சேனாநாயக்க, போட்டியை 22.48 செக்கன்களில் நிறைவு செய்து எட்டாவது இடத்தைப் பெற்று ஏமாற்றம் கொடுத்தார்.

எனினும், முன்னதாக நடைபெற்ற தகுதிச் சுற்றுப் போட்டியை அவர் 22.33 செக்கன்களில் நிறைவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன்படி, இம்முறை இளையோர் ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிடுவதற்கு பாரமி வசந்தி மாரிஸ்டெல்லா, டிலான் போகொட, செனிரு அமரசிங்க மற்றும் ஷெலிண்டா ஜென்சென் ஆகியோர் தகுதியைப் பெற்றுக்கொண்டனர்.

>> மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க <<