சர்வதேச கிரிக்கெட் அரங்கில், T20I மற்றும் T10 போன்ற குறைந்த ஓவர்கள் கொண்ட போட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் கிரிக்கெட்டின் சுறுசுறுப்பும், வேகமும் அதிகரித்துள்ளது. இதனால், காலத்துக்கேற்ப இரசிகர்களின் பார்வையும் குறைந்த ஓவர்கள் கொண்ட போட்டிகளின் மீது திரும்பியுள்ளதுடன், டெஸ்ட் போட்டிகளின் நிலை கேள்விக்குறியாகவே மாறியுள்ளது.

டெஸ்ட் போட்டிகள் என்றால் முடிவுகளை எட்ட ஐந்து நாட்கள் செல்லும், இதனால் அழுப்புத் தட்டும், நேரம் செலவளித்து பார்ப்பதால் உற்சாகமும் இல்லை, சிறந்த பொழுது போக்காகவும் இருக்காது என்ற சிலரது புரிதல்கள் காரணமாக டெஸ்ட் கிரிக்கெட்டின் மீதான எதிர்பார்ப்பும் குறைவடைந்து வருகின்றது.

சொந்த மண்ணில் ஆறுதல் வெற்றியை நோக்கி களமிறங்கவுள்ள இலங்கை

சுற்றுலா இங்கிலாந்து அணிக்கு எதிரான…

ஆனால், அனைத்து வகையிலுமான கிரிக்கெட்டையும் விட அதிகமான சுவாரஷ்யங்களை கொண்டதும், இரசிகர்களை மெய்சிலிர்க்க வைக்கும் போட்டிகளை தந்தது டெஸ்ட் கிரிக்கெட் மட்டும்தான் என்றால் அது மிகையாகாது. ஓவர்கள் நிர்ணயிக்கப்பட்ட போட்டிகளில் சுவாரஷ்யம் இருக்கலாம். ஆனால், ஐந்து நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டிகளில் குறுகிய, அதுவும் நெருக்கமான முடிவுகள் கிடைக்கப்பெறுமாயின் அதைவிட சுவாரஷ்யம் வேறு எதிலும் கிடைத்துவிடாது.

அதுசரி, டெஸ்ட் கிரிக்கெட்டுக்கும் ஏனைய வகை கிரிக்கெட்டுக்கும் இடையில் உள்ள வித்தியாசங்களையும், விறுவிறுப்பையும் ஏன் தனித்தனியாக சொல்ல வேண்டும்? எல்லாம் கிரிக்கெட் தானே! அப்படி சொல்ல வேண்டும் என்றால் ஏன் இப்போது சொல்ல வேண்டும்? இதற்கான காரணம் தான் என்ன?  என்ற கேள்விகள் நம் மத்தியில் எழுந்திருக்கலாம். ஆனால், டெஸ்ட் கிரிக்கெட்டின் சுவாரஷ்யம் குறைந்துவிட்டது என்று நினைப்போருக்கு பதில் கொடுக்கும் வகையில் அமைந்தது பாகிஸ்தான்நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி.

பாகிஸ்தான்நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி அபுதாபியில் நடைபெற்றிருந்ததை நாம் அறிந்திருப்போம். இந்த போட்டியில் நான்காவது நாள் ஆட்டம் தொடங்கியதும் பாகிஸ்தான் அணி 138 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கியது. பாகிஸ்தான் அணிக்கு கைவசம் 10 விக்கெட்டுகளும் சுமார் 1080 பந்துகளும் (180 ஓவர்கள்) எஞ்சியிருந்தன. வெற்றி முற்று முழுதாக பாகிஸ்தான் அணி பக்கமே இருந்தது. உணவு இடைவேளை வரையிலும் பாகிஸ்தான் அணி பக்கம் தான் வெற்றி. இரசிகர்களும் மகிழ்ச்சியில் கொண்டாடினர்.

ஆனால், நடந்ததோ வேறொன்று. பந்துகள் குவிந்து கிடந்தன. வெற்றியின் நுணிக்கே சென்றது பாகிஸ்தான். 5 ஓட்டங்கள் தேவை, அவர்களது நட்சத்திர துடுப்பாட்ட வீரர் அசார் அலி அரைச்சதத்துடன் துடுப்பாட்ட முனையில், பாகிஸ்தான் அணியின் இறுதி விக்கெட், மிகவும் நெருக்கடியான நிலை, மறுபக்கம் நியூசிலாந்தின் அறிமுக சுழற்பந்து வீச்சாளர் அஜாஷ் பட்டேல் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி பந்துவீச்சு முனையில் பந்து வீச தயாராகினார்.

இலங்கை மண்ணில் உலக சாதனை படைத்த இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர்கள்

பல்லேகலை மைதானத்தில் கடந்த 14ஆம்…

பந்தும் வீசப்பட்டது. LBW முறையில் அசார் அலி ஆட்டமிழந்து வெளியேறினார். நியூசிலாந்து வீரர்கள் வெற்றியை கொண்டாட, பாகிஸ்தான் இரசிகர்களும், வீரர்களும் மனமுடைந்தனர். அத்தனை நேரமும் பாகிஸ்தான் கையிலிருந்த வெற்றி, நியூசிலாந்தினால் இறுதி நேரத்தில் பறிக்கப்பட்டது. வெறும் 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பெறப்பட்ட இந்த வெற்றி, சர்வதேச கிரிக்கெட்டில் குறுகிய ஓட்டங்கள் வித்தியாசத்தில் பெறப்பட்ட ஐந்தாவது வெற்றியாகும்.

இதுதான், டெஸ்ட் கிரிக்கெட்டின் மீது இன்றும் இரசிகர்கள் ஈர்ப்பை கொண்டிருப்பதற்கான காரணம்.  இதனை போன்ற போட்டி முடிவுகள் இரசிகர்கள் மத்தியில் டெஸ்ட் போட்டிகளின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் வகையில் அமைந்துள்ளன. நாம் தற்போது பார்வையிட்ட பாகிஸ்தான் நியூசிலாந்து டெஸ்ட் போட்டி மிகவும் நெருக்கமான முடிவுகளை தந்த டெஸ்ட் போட்டிகள் வரிசையில் ஐந்தவாது இடத்தை பிடித்துள்ளது.

இதில் இரசிகர்களின் இதயத்துடிப்பை மேலும் அதிகரித்த நான்கு திக் திக் டெஸ்ட் போட்டிகள் இதோ,

4. அவுஸ்திரேலியாஇங்கிலாந்து (மெல்போர்ன் 1982)

மேல்போர்ன் மைதானத்தில 1982 டிசம்பர் 26ம் (பொக்ஷிங் டே) திகதி ஆரம்பித்த இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி 3 ஓட்டங்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றிருந்தது.

இங்கிலாந்து அணி 292 என்ற வெற்றியிலக்கை நிர்ணயிக்க, அதன்படி துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி அலன் போர்டன், டேவிட் ஹுக்ஸ் ஆகியோரின் அரைச்சதங்களின் உதவியுடன் வெற்றியிலக்கை நோக்கி நம்பிக்கையுடன் சென்றது.  எனினும், ஒரு கட்டத்தில் அவுஸ்திரேலிய அணி 9 விக்கெட்டுகளை இழக்க, இறுதி விக்கெட்டுக்காக 74 ஓட்டங்களை பெறவேண்டிய நிலை ஏற்பட்டது.

இறுதி விக்கெட்டுக்காக அலன் போர்டனுடன் இணைந்த ஜெப் தொம்சன் சிறந்த இணைப்பாட்டத்தை வழங்கினார். நான்காவது நாள் ஆட்டநேரம் நிறைவடைய அவுஸ்திரேலிய அணிக்கு 37 ஓட்டங்கள் தேவைப்பட்டது. ஐந்தாவது நாள் ஆட்டம் ஆரம்பித்தது. இருவரும் முழுமையாக 70 ஓட்டங்களை பகிர்ந்தனர். எனினும் வெற்றிக்கு நான்கு ஓட்டங்கள் மாத்திரம் தேவைப்பட்ட நிலையில், ஜெப் தொம்சன், இயன் போத்தமின் பந்து வீச்சில், ஜெப் மில்லரிடம் பிடிகொடுத்து ஆட்டமிழக்க, இங்கிலாந்து அணி மூன்று ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றது.

@gettyimages

3. இங்கிலாந்துஅவுஸ்திரேலியா (ஓல்ட் ட்ரெஃபோர்ட் 1902)

இங்கிலாந்து அணி, அவுஸ்திரேலிய அணியிடம் அடைந்த மறக்க முடியாத ஆஷஷ் தோல்வி போட்டியாக 1902ம் ஆண்டு ஓல்ட் ட்ரெஃபோர்ட் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டி பதிவாகியது.

அவுஸ்திரேலிய அணி தங்களுடைய முதல் இன்னிங்ஸில் 299 ஓட்டங்களை குவிக்க, இங்கிலாந்து அணி பதிலுக்கு 262 ஓட்டங்களை பெற்றது. பின்னர் இரண்டாவது இன்னிங்ஸில் பில் லொக்வூட்டின் வேகப்பந்து வீச்சுக்கு முகங்கொடுக்க முடியாமல் அவுஸ்திரேலிய அணி 86 ஓட்டங்களுக்கு சுருண்டது.

இதன்படி வெறும் 124 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கிய இங்கிலாந்து அணி 74 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து வெற்றியை நோக்கி பயணித்தது.  எனினும் அவுஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சாளர்களான யூஜ் ட்ரெம்பல் மற்றும் ஜெக் சௌண்டர்ஸ் ஆகியோர் முறையே 6 மற்றும் 4 விக்கெட்டுகளை வீழ்த்த இங்கிலாந்து அணி 120 ஓட்டங்களுக்கு சுருண்டு 3 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

>>புகைப்படங்களைப் பார்வையிட<<

2. இங்கிலாந்துஅவுஸ்திரேலியா (எட்ஜ்பெஸ்டன் 2005)

ஆஷஷ் தொடரில் மற்றுமொரு விறுவிறுப்பை தூண்டிய போட்டியாக அமைந்த இந்தப் போட்டியில் ஷேர்ன் வோர்ன் மற்றும் பிரெட் லீ ஆகியோரின் துடுப்பாட்டங்களின் ஊடாக வெற்றியை நோக்கிய அவுஸ்திரேலிய அணி துரதிஷ்டவசமாக 2 ஓட்டங்களால் தோல்வியை சந்தித்தது.

இங்கிலாந்து அணி தங்களுடைய முதல் இன்னிங்ஸில் 407 ஓட்டங்களை குவித்ததுடன், இரண்டாவது இன்னிங்ஸில் அவுஸ்திரேலிய அணியை விட 99 ஓட்டங்களை முன்னிலையாக பெற்றது. எனினும் ஷேர்ன் வோர்னின் அற்புத சுழலுக்கு தாக்குபிடிக்க முடியாமல் 182 ஓட்டங்களுக்கு சுருண்ட இங்கிலாந்து அணி, அவுஸ்திரேலிய அணிக்கு 282 ஓட்டங்களை நிர்ணயித்தது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணியின் துடுப்பாட்ட வீரர்கள் ஓரளவு ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து ஆட்டமிழக்க, அவ்வணி 175 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்தது.  போட்டி முடிவு இங்கிலாந்து அணி பக்கம் முழுமையாக திரும்பிய போதும், வோர்னர் மற்றும் பிரெட் லீ ஆகியோர் சிறந்த இணைப்பாட்டத்தை வழங்கினர். வோர்னர் 42 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, பிரெட் லீ, கொஷ்பிரொவிக்ஷுடன் இணைந்து 59 ஓட்டங்களை பெற அவுஸ்திரேலிய அணி 279 ஓட்டங்களை பெற்றது.

எனினும், கொஷ்பிரொவிக்ஷ் 20 ஓட்டங்களுடன் விக்கெட் காப்பாளரிடம் பிடிகொடுத்து ஆட்டமிழக்க, அவுஸ்திரேலிய அணி 2 ஓட்டங்களால் வெற்றியை தவறவிட்டது.

birminghammail

1. அவுஸ்திரேலியமேற்கிந்திய தீவுகள் (அடிலெய்ட் 1993)

டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகவும் குறுகிய ஓட்ட வித்தியாசத்தில் வெற்றிபெற்ற சாதனையை சுமார் 25 வருடங்களாக மேற்கிந்திய தீவுகள் அணி தம் கைவசம் வைத்துள்ளது.

Photos: Sri Lanka practice session before the 3rd Test against England

ThePapare.com | Waruna Lakmal | 22/11/2018 Editing and re-using images without permission of ThePapare.com…

அடிலெய்டில் 1993ம் ஆண்டு நடைபெற்ற அவுஸ்திரேலியஇங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இந்தப் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி வெறும் ஒரு ஓட்ட வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 252 ஓட்டங்களை பெற, அவுஸ்திரேலிய அணி 213 ஓட்டங்களுக்கு சுருண்டது. பின்னர் டிம் மேவின் பந்துவீச்சுக்கு தடுமாறிய மேற்கிந்திய தீவுகள் அணி, 146 ஓட்டங்களுக்கு சுருண்டு 186 ஓட்டங்களை வெற்றியிலக்காக நிர்ணயித்தது.

ESPNcricinfo

குறைந்த ஓட்டங்கள் கொண்ட வெற்றியிலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி, ஜெஸ்டின் லாங்கரின் அரைச்சதத்தை தொடர்ந்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. 144 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்த நிலையில், இறுதி விக்கெட்டுக்காக 42 ஓட்டங்கள் தேவைப்பட்டது.

நிதானமாக துடுப்பெடுத்தாடிய டிம் மே, மெக்டெமோர்ட்டுடன் இணைந்து 40 ஓட்டங்களை பெற்றநிலையில், அவுஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு 2 ஓட்டங்கள் தேவைப்பட்டது. எனினும் கௌண்டி வேல்ஸின் பந்து வீச்சில் மெக்டெமோர்ட் ஆட்டமிழக்க அவுஸ்திரேலிய அணி ஒரு ஓட்டத்தால் தோல்வியடைந்தது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<