அஸி. கிரிக்கெட் சபையின் புதிய தலைவராக ஏர்ல் எடிங்ஸ்

17
Image courtesy - Fox Sports

அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையின் தலைவராக செயற்பட்டு வந்த டேவிட் பீவர் பதவி விலகியதனைத் தொடர்ந்து, அவரின் இடத்துக்கு புதிய தலைவராக இடைக்கால தலைவராக செயற்பட்டு வந்த ஏர்ல் எடிங்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

நான்காவது தடவையாக மகளிர் T20I உலகக் கிண்ணம் அவுஸ்திரேலியா வசம்

மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வந்த ஐசிசி மகளிர் T20I உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப்…..

அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையின் பணிப்பாளராக 10 வருடங்கள் செயற்பட்டு வந்த ஏர்ல் எடிங்ஸ், டேவிட் பீவர் தலைவர் பதவியிலிருந்து விலகியதனைத் தொடர்ந்து, இடைக்கால தலைவராக கடந்த சில வாரங்களுக்கு முன் நியமிக்கப்பட்டார். இந்நிலையில், ஏர்ல் எடிங்ஸ் இன்று (28) புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக ஆஸி. கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையின் தலைவராக செயற்பட்டு வந்த டேவிட் பீவர், கடந்த மாதம் நடைபெற்ற கிரிக்கெட் சபை தேர்தலின் பின்னர், மேலும் மூன்று வருடங்கள் தலைவராக நியமிக்கப்பட்டார்.

எனினும், இவ்வருடம் மார்ச் மாதம் தென்னாபிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம்பெற்ற பந்தை சேதப்படுத்திய விவகாரம் தொடர்பிலான மீளாய்வு அறிக்கை வெளியிடப்பட்ட பின்னர், அதிகப்படியான அழுத்தத்திற்கு முகங்கொடுத்த இவர், அவரது பதவியை இராஜினாமா செய்திருந்தார்.

புதிய தலைவராக ஏர்ல் எடிங்ஸ் நியமிக்கப்பட்டதை தொடர்ந்து கருத்து வெளியிட்டுள்ள அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையின் பணிப்பாளர் ஜெக்குயி ஹெய், “இவ்வருடமானது அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபைக்கு சவாலான வருடமாக அமைந்து விட்டது. தற்போது நாம் எமது முகாமைத்துவத்தின் அதிகாரத்தையும், விளையாட்டின் நம்பிக்கைத் தன்மையையும் கட்டியெழுப்புவதற்கான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றோம்.

பங்களாதேஷ் பிரீமியர் லீக்கில் விளையாடும் ஸ்டீவ் ஸ்மித்

பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் ஓராண்டு போட்டித் தடைக்கு உள்ளாகியுள்ள……

அத்துடன், கடந்த ஒரு தசாப்தமாக அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையில் சிறந்த மாற்றங்களையும், சர்வதேச கிரிக்கெட் சபையுடனும், ஏனைய கிரிக்கெட் உறுப்புரிமை கொண்டுள்ள நாடுகளுடனும் பலமான உறவினை ஏர்ல் எடிங்ஸ் கொண்டுள்ளதால், அவர் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, “அவுஸ்திரேலிய கிரிக்கெட்டை பொருத்தவரையில், நாடு முழுவதும் உள்ள இரசிகர்கள் அதிக ஈடுபாட்டினை கொண்ட விளையாட்டாகும். அதன் மகத்துவத்தை காப்பது எமது கடமையாகும். இந்த பதவியை மதிப்புடன் ஏற்றுக்கொள்வதுடன், கிரிக்கெட் விளையாட்டை மேலும் சக்திமிக்கதாகவும், நாட்டுக்கு பெருமை சேர்க்கும் விதமான வளர்ச்சிப் பாதையை நோக்கி கொண்டுச் செல்வேன்என ஏர்ல் எடிங்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

ஏர்ல் எடிங்ஸின் பதவிக்காலமானது எதிர்வரும் வருடம் நடைபெறவுள்ள, அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையின் பொதுக்குழு கூட்டம் வரையில் நீடிக்கப்பட்டும் என அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை அறிக்கை வெளியிட்டுள்ளது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<