இலங்கை கிரிக்கெட் அணியின் உடற்பயிற்சி நிபுணராக டில்சான் பொன்சேக்கா

90

பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் இலங்கை கிரிக்கெட் அணி, ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பிற்காக அந்நாட்டு அணியுடன் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடவிருக்கின்றது.

இந்த சுற்றுப் பயணத்தில் இருந்து  இலங்கை கிரிக்கெட் அணியின் வழமையான உடற்பயிற்சி நிபுணர் (Trainer) நிக் லீ ஓய்வு எடுத்திருப்பதால், பாகிஸ்தான் செல்லும் இலங்கை கிரிக்கெட் அணியின் உடற்பயிற்சி நிபுணராக டில்சான் பொன்சேக்கா செயற்படவிருக்கின்றார்.

SAG கிரிக்கெட்: சம்மு அஷானின் அதிரடியோடு இலங்கை வெற்றி

நேபாளத்தின் கத்மண்டுவில் இடம்பெறும் தெற்காசிய விளையாட்டு விழாவின் T20…

இலங்கை கிரிக்கெட் அணியின் உடற்பயிற்சி நிபுணராக கடந்த 2016ஆம் ஆண்டில் இருந்து செயற்பட்டுவரும் நிக் லீ, மருத்துவ காரணங்களுக்காக தனது தாயகமான இங்கிலாந்துக்கு சென்றிருப்பதே அவர் பாகிஸ்தான் தொடரில் இருந்து ஓய்வு பெற காரணமாக அமைகின்றது.

இதேநேரம் இலங்கையில் உள்ள தலைசிறந்த உடற்பயிற்சி நிபுணர்களில் ஒருவரான டில்சான் பொன்சேக்கா, இலங்கை கிரிக்கெட் அணியுடன் ஏற்கனவே இணைந்து கடமை புரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேநேரம், கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச மைதானத்தில் அமைந்திருக்கும் கிரிக்கெட் வீரர்களுக்கான உடற்பயிற்சியகத்திலும் பணிபுரியும் டில்சான் பொன்சேக்கா, இலங்கை A கிரிக்கெட் அணியின் பிரதான உடற்பயிற்சி நிபுணராக இருந்து வருவதோடு, பங்களாதேஷின் டாக்கா டைனமைட்ஸ் கழகம், றாகம கிரிக்கெட் கழகம் ஆகியவற்றுடன் இணைந்து செயற்பட்ட அனுபவத்தையும் கொண்டிருக்கின்றார்.

எனவே, டில்சான் பொன்சேக்கா பாகிஸ்தான் தொடரில் இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்கள் சிறந்த ஆட்டத்தினை வெளிப்படுத்த முக்கிய பங்களிப்பினை வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கை கிரிக்கெட் அணி பாகிஸ்தானுடன் மோதும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இம்மாதம் 11ஆம் திகதி ஆரம்பமாகின்றமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<