சர்வதேச மாஸ்டர்ஸ் கால்பந்து தொடரில் பங்கேற்கும் கொழும்பு வெடரன்ஸ் அணி

203

13 ஆவது தடவையாக இடம்பெறும் முன்னாள் கால்பந்து வீரர்களுக்கான சர்வதேச மாஸ்டர்ஸ் நலன்புரி கால்பந்து திருவிழா (International Master Goodwill Soccer Festival) தொடரில், இலங்கையை பிரதிநிதித்துவம் செய்து கொழும்பு வெடரன்ஸ் கால்பந்து கழகம் பங்கேற்கவுள்ளது.

இன்று (7), நாளை (8) மற்றும் நாளை மறுதினம் (9) என மூன்று நாட்கள் தொடர்ச்சியாக நடைபெறவுள்ள இந்த கால்பந்து தொடரின் போட்டிகள் யாவும் கொழும்பு சிட்டி கால்பந்து அரங்கிலும், செரசன்ஸ் மைதானத்திலும் இடம்பெறுகின்றன.

10 நாடுகள் பங்கேற்கும் சர்வதேச மாஸ்டர்ஸ் கால்பந்து தொடரில் கொழும்பு அணி

இந்தியாவின் கொச்சின் நகரில் நவம்பர் மாதம் 8 ஆம் திகதி …

இந்த கால்பந்து தொடரில் பங்கேற்கும் கொழும்பு வெடரன்ஸ் கால்பந்து கழகம் தேசிய கால்பந்து அணியின் முன்னாள் வீரரான மொஹமட் ரூமியினால் வழிநடாத்தப்படவுள்ளது.    

இதேவேளை, ரூமிக்கு உதவியாக கொழும்பு வெடரன்ஸ் அணியினை வழிநடாத்தும் பொறுப்பை இந்த கால்பந்து கழகத்தினை உருவாக்கி, அதன் தற்போதைய நிர்வாக தலைவராகவும் இருக்கும் ராமநாதன் புவனேந்திரன் எடுத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

கடந்த 2005ஆம் ஆண்டு முதற்தடவையாக ஆரம்பிக்கப்பட்ட இந்த கால்பந்து திருவிழா தொடரில் இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் இலங்கை ஆகிய ஐந்து நாடுகளின் அணிகளே பங்கெடுத்திருந்தன. எனினும், தற்போது பிரபலமான ஒரு தொடராக மாறியிருக்கும் இந்த கால்பந்து திருவிழாவில் ஐரோப்பா உட்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த முன்னாள் கால்பந்து வீரர்கள் அடங்கிய பத்து கால்பந்து அணிகள் பங்கேற்கின்றன.

இதன்படி இந்த ஆண்டுக்கான தொடரில் கொழும்பு வெடரன்ஸ் கால்பந்து கழகத்தோடு சேர்த்து சென்னை வெடரன்ஸ் (இந்தியா), லண்டன் ஒலிம்பிக் வெடரன்ஸ் (ஐக்கிய அரபு இராச்சியம்), மெடன் வெடரன்ஸ் (இந்தோனேஷியா), ப்ளம்ஸ் ஸ்போர்ட்ஸ் (தென்னாப்பிரிக்கா), சவான்னா வெடரன்ஸ் (மொரிஷியஸ்), செலங்கோர் வெடரன்ஸ் (மலேசியா), சிங்கப்பூர் வெடரன்ஸ் ஒன்றியம் (சிங்கப்பூர்), ஸ்ரீ லக் கால்பந்து கழகம் – மிலான் (இத்தாலி) ஆகிய அணிகள் மோதுகின்றன.

மூன்றாவது ஆண்டாகவும் சம்பியனான ஓல்ட் பென்ஸ்

எட்டாவது முறையாக நடைபெற்ற மூத்த கால்பந்து …

இந்த பத்து அணிகளும் தமக்கிடையே ஒவ்வொரு தடவை போட்டிகளில் மோதவுள்ளதோடு, ஒவ்வொரு போட்டிகளுக்கும் வழங்கப்படும் புள்ளிகளின் அடிப்படையில் கூடுதல் புள்ளிகள் பெறும் அணி 13 ஆவது சர்வதேச மாஸ்டர்ஸ் கால்பந்து திருவிழாத் தொடரின் வெற்றியாளராக தெரிவு செய்யப்படும்.

இந்த கால்பந்து தொடர் பற்றி கருத்து தெரிவித்த புவனேந்திரன்,

“ இப்படியான ஒரு தொடரை ஒழுங்கு செய்து முன்னாள் வீரர்கள்  மகிழ்வதற்காகவும், அவர்களது கடந்த கால நிகழ்வுகளை மீட்டுவதற்கும் ஒரு வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுப்பதில் மகிழ்ச்சியடைவதோடு அதனை கெளரவமாகவும் கருதுகின்றோம். இப்படியான தொடர்கள் இளம் சமுதாயத்தினருக்கு கால்பந்து விளையாட்டு மீது ஈர்ப்பினை ஏற்படுத்த நிச்சயமாக உதவும். இன்னும் நாங்கள் கடந்த ஆண்டுகளில் (கால்பந்து) வீரர்களாக இருந்தவர்களின் விளையாட்டை மீண்டும் பார்ப்பதற்கு பெரும்திரளான மக்களையும் எதிர்பார்க்கின்றோம்.” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இத்தொடரில் பங்கேற்கும் கொழும்பு வெடரன்ஸ் கால்பந்து கழகம், முன்னாள் தேசிய கால்பந்து அணி வீரர்கள் பலரை கொண்டிருப்பதோடு இந்த தொடரில் ஏற்கனவே நான்கு தடவைகள் (2006, 2008, 2011, 2017) சம்பியன் பட்டத்தினையும் வென்றிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. எனவே, இம்முறை ஐந்தாவது சம்பியன் பட்டத்தினை கொழும்பு வெடரன்ஸ் கால்பந்து கழகம் எதிர்பார்க்கின்றது.

இதேநேரம் கொழும்பு வெடரன்ஸ் அணி இந்த கால்பந்து தொடரில் நான்கு தடவைகள் (2007, 2012, 2013, 2015) இரண்டாம் இடத்தினையும் பெற்றிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.  

மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க…