ஐ.சி.சி தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ள இலங்கை வீரர்கள்

580

மேற்கிந்திய தீவுகளுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டி சமநிலையில் முடிவடைந்துள்ள நிலையில் ஐ.சி.சி இன் டெஸ்ட் போட்டிகளுக்கான தரப்படுத்தலில் இலங்கை வீரர்கள் சிலர் முன்னேற்றம் கண்டுள்ளனர்.

மழையினால் நழுவிப்போன இலங்கையின் வெற்றி வாய்ப்பு

சென். லூசியா நகரில் நடைபெற்று வந்த சுற்றுலா இலங்கை மற்றும் மேற்கிந்திய…

கடந்த திங்கட்கிழமை சமநிலையில் முடிவடைந்த குறித்த போட்டியில் ஆட்ட நாயகன் விருது பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணியின் வேகப்பந்து வீச்சாளர் சென்னோன் கேப்ரியல் டெஸ்ட் பந்து வீச்சாளர்களுக்கான தரப்படுத்தலில் 12 ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். இது அவரது வாழ் நாளின் சிறந்த தரப்படுத்தல் பெறுபேறாகும்.

ட்ரினிடாட் என்ட் டொபேகோவைச் சேர்ந்த 30 வயதான கேப்ரியல் இப்போட்டியில் 121 ஓட்டங்களுக்கு 13 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார். இது டெஸ்ட் போட்டி ஒன்றில் மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் ஒருவர் பெற்ற மூன்றாவது சிறந்த பந்து வீச்சுப் பிரதி ஆகும். இதனால் அவர் தரவரிசையில் 11 இடங்கள் முன்னேறி 754 புள்ளிகளைப் பொற்றுள்ளார். முன்னதாக இவர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 636 புள்ளிகளுடன் 18 ஆம் இடத்தை பிடித்திருந்தமையே சிறந்த தரப்படுத்தல் நிலையாக இருந்தது.

மேலும் சக வீரர்களான ரொஸ்டன் சேஸ் மற்றும் அணித்தலைவர் ஜேசன் ஹோல்டர் ஆகியோரும் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரப்படுத்தலில் முன்னேற்றம் கண்டுள்ளனர்.

இலங்கை அணி மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக மூன்று போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் ஒரு போட்டி எஞ்சியிருக்கும் நிலையில் 1 – 0 என்ற அடிப்படையில் பின்தங்கி இருக்கின்றது. எனினும், இரண்டாவது டெஸ்டானது இலங்கை அணிக்கு வெற்றி வாய்ப்புக்கள் அதிகம் இருந்த நிலையில், போட்டியின் இறுதி நாளில் மழை பெய்தமை போட்டியின் முடிவை சமநிலையாக்குவதற்கு வழிவகுத்தது.

குறித்த போட்டியில் இலங்கை அணித்தலைவர் தினேஷ் சந்திமால் முதல் இன்னிங்ஸில் ஆட்டமிழக்காமல் 119 ஓட்டங்களையும் இரண்டாம் இன்னிங்ஸில் 39 ஓட்டங்களையும் பெற்றிருந்தார். எனவே, தற்போதைய தரப்படுத்தலில் அவர் பத்தாம் இடத்தில் இருந்து ஒன்பதாவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

மேலும், மற்றுமொரு துடுப்பாட்ட வீரரான குசல் மெண்டிஸ் நான்கு இடங்கள் முன்னேறி 12ஆம் இடத்தில் உள்ளார். இது அவரது வாழ்நாளின் சிறந்த தரப்படுத்தல் பிரதி ஆகும். மேலும், இலங்கை அணியின் பந்து வீச்சாளர்களான சுரங்க லக்மால் ஒரு இடம் முன்னேறி 29 ஆவது இடத்திலும் லஹிரு குமார மூன்று இடங்கள் முன்னேறி 51 ஆவது இடத்திலும் உள்ளனர்

இதேவளை, ஆப்கானிஸ்தான் அணிக்கெதிராக பெங்களூரில் இடம்பெற்ற டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 262 ஓட்டங்களால் வெற்றி பெற்றிருந்தது. இப்போட்டியில் விளையாடிய வீரர்களும் தரப்படுத்தலில் உள்வாங்கப்பட்டுள்ளனர்

ஆப்கானிஸ்தான் அணியுடன் சதங்கள் கடந்த இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான முரளி விஜய் மற்றும் ஷிக்கர் தவான் ஆகியோர் தர வரிசையில் ஆதிக்கம் செலுத்தியுள்ளனர். விஜய் ஆறு இடங்கள் முன்னேறி 23 ஆவது இடத்திலும், தவான் தனது வாழ்நாளின் சிறந்த பிரதியாக பத்து இடங்கள் முன்னேறி 24 ஆவது இடத்திலும் உள்ளனர்.

சந்திமாலுக்கு போட்டித் தடை : பயிற்சியாளர், முகாமையாளர் மீது குற்றச்சாட்டு

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக செயின்ட் லூசியாவில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் …

ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் ஆறு விக்கெட்டுக்கள் வீழ்த்திய இந்திய அணியின் சுழல் பந்துவீச்சாளர் ரவீந்தர ஜடேஜா நான்காம் இடத்தில் இருந்து மூன்றாம் இடத்துக்கு முன்னேறியுள்ளார். மேலும் வேகப்பந்து வீச்சாளர்களான இஷாந்த் ஷர்மா மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோரும் தரப்படுத்தலில் முன்னேறியுள்ளனர்

தனது முதலாவது டெஸ்ட் போட்டியில் விளையாடிய ஆப்கானிஸ்தான் வீரர்களும் .சி.சி இன் தரவரிசையில் முதன்முறையாக இடம் பிடித்துள்ளனர். அந்த வகையில் துடுப்பாட்ட வீரர்களில் ஹஷ்மதுல்லா ஷஹிதி மற்றும் அணித்தலைவர் அஸ்கர் ஸ்டனிக்சாய் ஆகியோர் முறையே 111 மற்றும் 136 ஆவது இடங்கள் உள்ளனர்.

பந்து வீச்சாளர்களில் யமின் அஹ்மத்சாய் 94 ஆவது இடத்திலும் முஜீபுர் ரஹ்மான் 114 ஆவது இடத்திலும் மேலும் .சி.சி இன் சர்வதேச இருபதுக்கு 20 தரப்படுத்தலில் முதலிடத்திலும் ஒருநாள் தரப்படுத்தலில் இரண்டாம் இடத்திலும் உள்ள ரஷித் கான் டெஸ்ட் தரவரிசையில் 119 ஆவது இடத்திலும் அறிமுகமாகியுள்ளனர்

அணிகளுக்கான தர வரிசையில் புள்ளிகளில் எவ்வித மாற்றமும் இன்றி இந்திய அணி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க