மார்ச் மாதம் பூராகவும் நாட்டின் பல பாகங்களிலும் விறுவிறுப்பாக இடம்பெற்ற பாடசாலைகளுக்கிடையிலான மாபெரும் கிரிக்கெட் சமர்கள் நிறைவுக்கு வந்துள்ள நிலையில், அப்போட்டிகளின் போது காணக்கிடைத்த அபார துடுப்பாட்டம் மற்றும் பந்து வீச்சு ஆகியவற்றின் தொகுப்பு உங்களுக்காக.

சரண நாணயக்கார மற்றும் நவீன் குணவர்தன

1இசிபதன கல்லூரி மற்றும் தர்ஸ்டன் கல்லூரி அணிகள் மோதிக்கொண்ட சகோதரர்களின் சமர் சமநிலையில் நிறைவடைந்தது. எனினும், தர்ஸ்டன் கல்லூரியானது முதல் இன்னிங்ஸ் வெற்றியை தனதாக்கிக் கொண்டது. தர்ஸ்டன் கல்லூரி சார்பாக துடுப்பாட்டத்தில் சரண நாணயக்கார இரண்டு அரைச் சதங்களையும் (58, 55), பந்து வீச்சில் நவீன் குணவர்தன மொத்தமாக 8 விக்கெட்டுக்களையும் (5/33, 3/31) பெற்று அணிக்கு தங்களது பங்களிப்புக்களை வழங்கியிருந்தனர்.

ICC யின் தொலைக்காட்சி வர்ணனையாளராக குமார் சங்கக்கார

அதேநேரம், நேரடி ஒளிபரப்பிற்கான வரைபு திட்டங்களை சர்வதேச கிரிக்கெட் சபை முதல்..

ஜெஹான் டேனியல்

3புனித பேதுரு கல்லூரியுடனான 83ஆவது புனிதர்களின் சமரில் முதலில் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த புனித ஜோசப் கல்லூரி வெறும் 9 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இந்நிலையில் தனது அபார துடுப்பாட்டத்துடன் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்த ஜெஹான் டேனியல் 12 பௌண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் உள்ளடங்கலாக 124 ஓட்டங்களை விளாசி தனது அணியை மீட்டெடுத்ததுடன், முதல் இன்னிங்ஸ் வெற்றியையும் பெற்றுக் கொடுத்தார்.

ரவிந்து கொடிதுவக்கு மற்றும் கலன பெரேரா

8புனித தோமியர் கல்லூரியின் உபதலைவரான ரவிந்து கொடிதுவக்கு 14 பௌண்டரிகள் உள்ளடங்கலாக 98 ஓட்டங்களை குவிந்திருந்த நிலையில் துரதிஷ்டவசமாக ஆட்டமிழந்து சதத்தினை தவறிவிட்டார். எனினும் அவரது சிறப்பாட்டத்தின் உதவியுடன் புனித தோமியர் கல்லூரியானது 138ஆவது நீலங்களின் சமரில் முன்னிலை பெற்றுக் கொண்டது.

அதனை தொடர்ந்து தனது வேகப்பந்து வீச்சினால் றோயல் கல்லூரியை திணறடித்த கலன பெரேரா முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை பதம்பார்த்தார். அவர் இரண்டாவது இன்னிங்சில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன், இவ்விருவரின் பங்களிப்புக்களுடன் புனித தோமியர் கல்லூரி முதல் இன்னிங்ஸ் வெற்றியை பெற்றுக் கொண்டது.

லக்ஷித ரசஞ்சன

11ஆனந்த கல்லூரியுடன் இடம்பெற்ற 88 ஆவது மாபெரும் கிரிக்கெட் போட்டியில் ஆரம்பத்தில் விக்கெட்டுக்களை இழந்து தடுமாறிய நாலந்த கல்லூரியை தனி ஒருவராக வழிநடாத்திய லக்ஷித ரசஞ்சன ஆட்டமிழக்காது 113 ஓட்டங்கள் குவித்து அசத்தினார். இவரது பொறுப்பான இன்னிங்சின் உதவியுடன் நாலந்த கல்லூரி 5 விக்கெட் இழப்பிற்கு 280 ஓட்டங்கள் குவித்து போட்டியை சமநிலையில் முடித்துக் கொண்டது.

கனகரட்ணம் கபில்ராஜ் 

10இம்முறை இடம்பெற்ற 111 ஆவது வடக்கின் மாபெரும் சமரில் தனது அபார பந்து வீச்சின் மூலம் சென் ஜோன்ஸ் கல்லூரியை வெற்றிக்கு அழைத்துச் சென்ற கனகரத்தினம் கபில்ராஜ் மொத்தமாக 10 விக்கெட்டுக்களை சாய்த்து அசத்தினார். வலதுகை வேகப்பந்து வீச்சாளரான கபில்ராஜ் முதல் இன்னிங்சில் 39 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களையும் இரண்டாவது இன்னிங்சில் 28 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களையும் வீழ்த்தி, யாழ் மத்திய கல்லூரிய கல்லூரியை இன்னிங்ஸ் தோல்வியடையச் செய்ய பெரிதும் பங்காற்றினார்.

வசன்தன் ஜதுசன்  

Vasanthan-Jathushanவடக்கின் மாபெரும் சமரில் சென் ஜோன்ஸ் கல்லூரியின் முதல் இன்னிங்சிற்கு பெரிதும் பலம் கொடுத்த ஒரு துடுப்பாட்டமாக வசன்தன் ஜதுசனின் ஆட்டம் இருந்தது. நிதானம் கலந்த அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர், எதிரணியின் பந்து வீச்சை வியூகத்துடன் எதிர்கொண்டு 70 ஓட்டங்களைக் குவித்தார். இவரது இந்த ஓட்டங்கள் மத்திய வரிசையை பலப்படுத்தும் விதத்தில் அமைந்தமை குறிப்பிடத்தக்கது.  

விஷ்வ சதுரங்க மற்றும் பிரவீன் ஜயவிக்ரம

Vishwaவிறுவிறுப்பாக இடம்பெற்ற போட்டியில் புனித செபஸ்டியன் கல்லூரியை முதல் இன்னிங்சில் வீழ்த்தியது பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி. புனித செபஸ்டியன் கல்லூரியின் இடதுகை சுழற்பந்து வீச்சாளரான பிரவீன் ஜயவிக்ரம 62 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை வீழ்த்தி தனது அணிக்கு நம்பிக்கையளித்த போதிலும், பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரியின் அணித் தலைவர் விஷ்வ சதுரங்க பொறுப்பாக ஆடி 88 ஓட்டங்களை குவித்து தனது அணியை முதல் இன்னிங்சில் முன்னிலை பெறச் செய்திருந்தார்.

ஹசித போயகொட மற்றும் ஷனோகீத் ஷண்முகநாதன்

2மலையகத்தின் 100 ஆவது நீலங்களின் மாபெரும் சமரில் திரித்துவக் கல்லூரி சார்பாக பாரிய இணைப்பாட்டமொன்றை பகிர்ந்து கொண்ட ஹசித போயகொட மற்றும் ஷனோகீத் ஷண்முகநாதன் ஆகியோர் முறையே 90 மற்றும் 83 ஓட்டங்களை குவித்து அசத்தியிருந்தனர். எனினும் மழையின் குறுக்கீட்டினால் புனித அந்தோனியார் கல்லூரியானது போட்டியை ஒருவாறாக சமநிலையில் நிறைவு செய்து கொண்டது.

விமுக்தி விஜேசிறிவர்தன மற்றும் கனிந்து கௌசல்ய

கிங்ஸ்வூட் கல்லூரி மற்றும் தர்மராஜ கல்லூரி அணிகள் மோதிக்கொண்ட மற்றுமொரு விறுவிறுப்பான போட்டியில் விமுக்தி விஜேசிறிவர்தன மற்றும் கனிந்து கௌசல்யவின் அற்புத ஆட்டங்களின் பலனாக கிங்ஸ்வூட் கல்லூரி முதல் இன்னிங்ஸ் வெற்றியை சுவீகரித்துக் கொண்டது. விஜேசிறிவர்தன நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 87 ஓட்டங்களையும், சுழற்பந்து வீச்சாளரான கனிந்து தனது திறமையான பந்து வீச்சின் மூலம் 7 விக்கெட்டுக்களையும் பெற்று கிங்ஸ்வூட் அணியின் வெற்றிக்கு வித்திட்டிருந்தனர்.

தனஞ்சய லக்ஷான் மற்றும் கமிந்து மெண்டிஸ்

5தென்னிலங்கையின் முன்னணி பாடசாலைகளான ரிச்மண்ட் கல்லூரி மற்றும் மஹிந்த கல்லூரிகளுக்கு இடையிலான 112ஆவது மாபெரும் சமரில், எதிரணியின் பந்து வீச்சாளர்களை துவம்சம் செய்த கமிந்து மெண்டிஸ் மற்றும் தனஞ்சய லக்ஷான் 168 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்து கொண்டனர். தனஞ்சய லக்ஷான் சதம் கடந்த போதிலும் கமிந்து மெண்டிஸ் 92 ஓட்டங்கள் பெற்றிருந்த நிலையில் ஆட்டமிழந்தார்.

இங்கிலாந்து காலநிலைக்கு ஈடுகொடுக்க மலையகத்தில் பயிற்சியில் ஈடுபடும் இலங்கை அணி

பலத்த எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் எதிர்வரும் ஜூன் மாத ஆரம்பத்தில் இங்கிலாந்து…

ரந்தீர ரணசிங்க மற்றும் புபுது கனேகம

ரந்தீர ரணசிங்கவின் அற்புத துடுப்பாட்டம் மற்றும் புபுது கனேகமவின் சிறப்பான பந்து வீச்சு என்பவற்றின் உதவியுடன் புனித ஏன்ஸ் கல்லூரியானது மலியதேவ கல்லூரியை முதல் இன்னிங்சில் வீழ்த்தியது. சிறப்பாக துடுப்பெடுத்தாடி சதத்தினை நெருங்கி வந்த ரந்தீர ரணசிங்க துரதிஷ்டவசமாக 98 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார். பந்து வீச்சில் சிறப்பித்த புபுது கனேகம 62 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை கைப்பற்றிக்கொண்டார்.

பசிந்து நதுன்

7லும்பினி கல்லூரி மற்றும் பண்டாரநாயக்க கல்லூரிகளுக்கு இடையில் நான்காவது வருடமாக இடம்பெற்ற மாபெரும் கிரிக்கெட் போட்டியில் லும்பினி கல்லூரியானது இன்னிங்ஸ் மற்றும் 4 ஓட்டங்களினால் இலகு வெற்றியை சுவீகரித்தது. எதிரணி வீரர்களை திணறடித்த லும்பினி கல்லூரியின் வேகப்பந்து வீச்சாளரான பசிந்து நதுன் முதல் இன்னிங்சில் 49 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுக்களையும் இரண்டாவது இன்னிங்சில் 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தியிருந்தார்.

முதித லக்ஷான்

mudith Lakshanஇவ்வருடத்தில் மாபெரும் கிரிக்கெட் போட்டிகளின் போது நூலிழையில் சதத்தை தவறவிட்ட மற்றுமொரு வீரரான முதித லக்ஷான் டி.எஸ். சேனநாயக்க கல்லூரி சார்பாக 98 ஓட்டங்களை குவித்துக் கொண்டார். அவரது பொறுப்பான இன்னிங்சின் பலனாக அவ்வணியானது மஹாநாம கல்லூரியுடனான போட்டியை சமநிலையில் முடித்துக் கொண்டது.

கபில்ராஜின் 10 விக்கெட்டுகளுடன் வடக்கின் பெரும் சமரை வெற்றிகொண்டது சென் ஜோன்ஸ் கல்லூரி

இன்று இடம்பெற்று முடிந்த 111ஆவது வடக்கின் பெரும் சமரில் இன்னிங்ஸ் மற்றும்..