பாகிஸ்தான் சென்று விளையாட பங்களாதேஷ் வீரர் முஷ்பிகுர் ரஹிம் மறுப்பு

mushfiqur

பங்களாதேஷ் அணி பாகிஸ்தான் சென்று விளையாட சம்மதம் தெரிவித்துள்ள நிலையில், அந்த அணியின் அனுபவ வீரரான முஷ்பிகுர் ரஹிம் அங்கு சென்று விளையாட மறுப்பு தெரிவித்துள்ளார்.

பங்களாதேஷ் கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.

பங்களாதேஷை எதிர்கொள்ளும் பாகிஸ்தான் டி20 குழாம் அறிவிப்பு

பங்களாதேஷ் அணியுடன் சொந்த மண்ணில் நடைபெறவுள்ள

ஆனால் பாதுகாப்பு காரணத்தை முன்னிறுத்தி ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடரில் விளையாட தயார் எனவும், டெஸ்ட் தொடரை பொதுவான இடத்தில் நடத்த வேண்டும் என பங்களாதேஷ் அணி கோரிக்கை விடுத்தது.

ஆனால் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அதை முற்றிலுமாக மறுத்துவிட்டது. இதனால் இரு அணிகளுக்கு இடையில் டெஸ்ட் தொடர் நடக்குமா? என்ற கேள்வி எழுந்தது.

ஆனால் பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தொடர் முயற்சியால் பங்களாதேஷ் அணி அங்கு சென்று விளையாட சம்மதம் தெரிவித்தது. 

தொடர்ச்சியாக இரண்டு டெஸ்ட் போட்டிகள் நடத்தப்படாமல் ஒருமாத கால இடைவெளியில் நடத்தப்படுகிறது.

இந்த நிலையில், பங்களாதேஷ் அணியின் அனுபவ மற்றும் தலைசிறந்த துடுப்பாட்ட வீரரான முஷ்பிகுர் ரஹிம் பாகிஸ்தான் செல்ல மறுத்துவிட்டார்.

இது தொடர்பில் பங்களாதேஷ் தேர்வுக் குழுவின் தலைவர் மின்ஹாஜுல் ஹக் AFP செய்திச் சேவைக்கு வழங்கிய செவ்வியில், முஷ்பிகுர் இன்று என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பாகிஸ்தான் தொடரில் பங்கேற்க முடியாது என தெரிவித்தார். 

அது தொடர்பிலான உத்தியோகபூர்வ கடிதம் இதுவரை எமக்கு கிடைக்கவில்லை. அந்தக் கடிதம் கிடைத்தவுடன் அவரை இந்தத் தொடரில் இருந்து நீக்குவதற்கு நடவடிக்கை எடுப்போம் என தெரிவித்தார். 

ஏற்கனவே சகிப் அல் ஹசனுக்கு இரண்டு வருட போட்டித் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், முஷ்பிகுர் ரஹிமின் இந்த திடீர் முடிவு பங்களாதேஷ் அணிக்கு பின்னடைவை கொடுத்துள்ளது.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க