இலங்கை இளையோர் மற்றும் அவுஸ்திரேலிய இளையோர் (19 வயதின்கீழ்) அணிகளுக்கு இடையில் கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் நடைபெற்றுவரும் இளையோர் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தின் முடிவில், இலங்கை இளையோர் அணிக்காக கமில் மிஷார சதமடித்து கைகொடுக்க, அவுஸ்திரேலிய இளையோர் கிரிக்கெட் அணியை விட இலங்கை வீரர்கள் 18 ஓட்டங்களால் முன்னிலை பெற்றுள்ளனர்.
இளையோர் டெஸ்ட் முதல் நாளில் இலங்கை இளையோர் அணி ஆதிக்கம்
இலங்கை 19 வயதின் கீழ் மற்றும்…
இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய இளையோர் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் மற்றும் ஒற்றை இளையோர் டெஸ்ட் என்பவற்றில் இலங்கை இளையோர் கிரிக்கெட் அணியுடன் விளையாடி வருகின்றது. இந்த நிலையில், இவ்விரு அணிகளுக்குமிடையிலான ஒற்றை இளையோர் டெஸ்ட் போட்டி நேற்று (10) ஆரம்பமாகியிருந்தது.
இப்போட்டியில், நேற்று முதலில் துடுப்பாடிய அவுஸ்திரேலிய இளையோர் அணி 9 விக்கெட்டுக்களை இழந்து 269 ஓட்டங்களைப் பெற்ற நிலையில், தமது முதல் இன்னிங்ஸ் ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது.
Photo Album : Photos: Australia U19 Team Tour to Sri Lanka 2019 | 3 Day Match | Day 2
இதன் பின்னர் தமது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை இளையோர் அணி, விக்கெட் இழப்பின்றி 20 ஓட்டங்களைப் பெற்றநிலையில், போட்டியின் முதல் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்தது.
இலங்கை இளையோர் அணியின் துடுப்பாட்டத்தில் கமில் மிஷார 15 ஓட்டங்களுடனும், தவீஷ அபிஷேக் ஒரு ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றிருந்தனர்.
போட்டியின் இரண்டாம் நாளான இன்று (11) தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை தொடர்ந்த இலங்கை இளையோர் அணிக்கு, ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான கமில் மிஷார மற்றும் தவீஷ அபிஷேக் ஆகியோர் முதல் விக்கெட்டுக்காக அரைச்சத இணைப்பாட்டமொன்றைப் பெற்று வலுச்சேர்த்தனர்.
போராட்டத்தின் பின் T20I தொடரையும் இழந்த இலங்கை
சுற்றுலா நியூசிலாந்து மற்றும் இலங்கை…
எனினும், இந்த இணைப்பாட்டத்தை மதிய நேர இடைவேளைக்கு முன் அவுஸ்திரேலிய இளையோர் அணியின் சுழல் பந்துவீச்சாளர் தன்வீர் சங்கா தகர்த்தார். 68 பந்துகளுக்கு முகங்கொடுத்த தவீஷ அபிஷேக் 4 பௌண்டரிகளுடன் 36 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் ஆட்டமிழந்தார்.
இதனையடுத்து கமில் மிஷாரவுடன் ஜோடி சேர்ந்த மொஹமட் சமாஸ் இரண்டாவது விக்கெட்டுக்காக 84 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்து நம்பிக்கை அளித்தார்.
எனினும், ஜெர்ரோட் ப்ரீமென்னின் பந்தில் 43 ஓட்டங்களுடன் மொஹமட் சமாஸ் துரதிஷ்டவசமாக ஆட்டமிழக்க, மறுமுனையில் சிறப்பாக துடுப்பாடிய கமில் மிஷார சதம் கடந்து அசத்தினார்.
இதனைத் தொடர்ந்து மத்திய வரிசையில் இலங்கை அணிக்காக ஓட்டங்களைக் குவிப்பார்கள் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கமில் மிஷார 105 ஓட்டங்களுடனும், அணித் தலைவர் நிபுன் தனன்ஞய 20 ஓட்டங்களுடனும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றம் கொடுத்தனர்.
Photos : Australia U19 Team Tour to Sri Lanka 2019 | 3 Day Match | Day 1
ThePapare.com | Hiran Chandika | 11/01/2019 Editing and re-using images without permission of ThePapare.com
இதனை அடுத்து சற்று தடுமாற்றத்தை காண்பித்த இலங்கை இளையோர் அணிக்கு சமிந்து விஜேசிங்க மற்றும் சந்துன் மெண்டிஸ் ஆகியோர் ஆறாவது விக்கெட்டுக்காக 56 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்து நம்பிக்கை அளித்தனர். எனினும், இந்த இணைப்பாட்டத்தை அவுஸ்திரேலிய இளையோர் அணியின் சுழல் பந்துவீச்சாளர் ஜெர்ரோட் ப்ரீமென் மீண்டும் தகர்த்தார்.
சமிந்து விஜேசிங்க 39 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, தமது முதல் இன்னிங்ஸுக்காகத் துடுப்பெடுத்தடி வரும் இலங்கை இளையோர் அணி, போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வரும்போது 7 விக்கெட்டுக்களை இழந்து 287 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. இதன்படி, அவுஸ்திரேலிய இளையோர் அணியினை விட 18 ஓட்டங்களால் இலங்கை இளையோர் அணி முன்னிலை பெற்றது.
இதேநேரம், அவுஸ்திரேலிய இளையோர் அணியின் பந்துவீச்சு சார்பாக ஜெர்ரோட் ப்ரீமேன் 82 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும், தன்வீர் சங்க 61 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தனர்.
நாளை போட்டியின் கடைசி நாளாகும்.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<




















