கரீபியன் ப்ரீமியர் லீக்கிலிருந்து பிராவோ திடீர் விலகல்

155
Getty Images

உலகம் முழுவதும் நடைபெற்று வருகின்ற டி20 லீக் போட்டிகளில் முன்னணி சகலதுறை வீரராக வலம்வந்து கொண்டிருக்கின்ற மேற்கிந்திய தீவுகள் அணியின் நட்சத்திர வீரர் டுவைன் பிராவோ, இம்முறை கரீபியன் ப்ரீமியர் லீக் டி20 தொடரிலிருந்து விலகியுள்ளார்.

கரீபியன் ப்ரீமியர் லீக் தொடரில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியின் தலைவராக டுவைன் பிராவோ செயற்பட்டு வருகின்றார். இந்த நிலையில், இம்முறை போட்டிகள் ஆரம்பமாவதற்கு முன் பயிற்சியில் ஈடுபட்ட போது அவரது இடதுகை விரலில் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அவருக்கு சத்திரசிகிச்சை செய்யவும் நேரிட்டது. 

இளையோர் ஆசியக் கிண்ண அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்த இலங்கை

இளையோர் ஆசியக் கிண்ணத் தொடரில்….

இந்த நிலையில், அவரது காயம் குணமடைவதற்கு இன்னும் இரண்டு மாதங்கள் வரை எடுக்கும் என வைத்தியர்கள் அறிவுறுத்திய நிலையில், இம்முறை கரீபியன் ப்ரீமியர் லீக் தொடரிலிருந்து விலகிக் கொள்வதாக அவர் அறிவித்துள்ளர்.  

இதனிடையே, பிராவோ மருத்துவமனையில் இருந்து எடுத்த புகைப்படமொன்றை டுவிட்டரில் பதிவிட்டுள்ளதுடன், அதில் எனது 16 வருடகால கிரிக்கெட் வாழ்க்கையில் 4 ஆவது முறையாக சத்திரசிகிச்சை செய்யவுள்ளேன். இது வெற்றிகரமாக முடிய வேண்டும் என பிரார்த்திக்கிறேன். 

எனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி. இம்முறை CPL தொடரில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி வெற்றிபெற வாழ்த்துகிறேன் என தெரிவித்துள்ளார். 

இதேநேரம், தனது காயம் குறித்து ட்ரினிடாட் அண்ட் டொபேகோவில் இருந்து வெளிவரும் நிவ்ஸ்டுடே பத்திரிகைக்கு பிராவோ வழங்கிய செவ்வியில், இந்த காயம் குணமடைந்த உடன் போட்டிகளில் களமிறங்குவதற்கு ஆவலுடன் உள்ளேன். ஆனாலும், எனது காயம் முழுமையாக குணமடைவதற்கு இன்னும் சில காலம் செல்லும். எனவே மிக விரைவில் கிரிக்கெட் விளையாடுவதற்கு வருவேன் என தெரிவித்திருந்தார். 

இதன்படி, கரீபியன் ப்ரீமியர் லீக்கில் விளையாடும் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியின் தலைவராக கிரென் பொல்லார்ட் நியமனம் செய்யப்பட்டுள்ளார். பொல்லார்ட் இதற்கு முன் பார்படோஸ் டிரிடென்ட்ஸ், செயின்ட் லூசியா ஸ்டார்ஸ் அணிகளுக்காக விளையாடியிருந்தார். 

எனினும், இம்முறை போட்டியில் முதல் முறையாக டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிக்காக பொல்லார்ட் விளையாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

மகளிர் டி-20 உலகக் கிண்ண தகுதிகாண் சம்பியனாகிய பங்களாதேஷ்

மகளிருக்கான டி-20 உலகக் கிண்ண தகுதிச்….

அதுமாத்திரமின்றி, கிரென் பொல்லார்ட் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி இதுவரை நடைபெற்ற மூன்று போட்டிகளிலும் வெற்றியீட்டி புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. 

இதேநேரம், பொலிவுட்டின் முன்னணி நடிகரான ஷாருக்கான் உரிமையாளராக உள்ள டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி இதுவரை மூன்று முறை கரீபியன் ப்ரீமியர் லீக் சம்பியன் பட்டம் வென்றுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<