அரையிறுதியில் ஜப்பானுடன் மோதும் இலங்கை ரக்பி அணி

63

ஆசிய விளையாட்டு விழாவில், காலிறுதிப் போட்டியில் சீன அணிக்கு எதிராக 17-12 என வென்ற இலங்கை ரக்பி அணி, அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

இலங்கை எதிர் சீனா

அரையிறுதிக்கு தகுதி பெற வெற்றிபெற வேண்டும் என்ற நிலையில் களம் இறங்கிய இலங்கை ரக்பி அணி, முதல் நிமிடத்தில் சீன அணிக்கு ட்ரை வைக்க இடம் கொடுத்து ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியதுஇருந்தாலும், இலங்கையின் நட்சத்திர வீரர் சுதம் சூரியாரச்சி அடுத்த நிமிடத்தில் அருமையான ட்ரை ஒன்றை வைத்து, அதை தானே கன்வேர்ட் செய்து இலங்கை அணியை போட்டியில் முன்னிலைக்கு அழைத்து சென்றார்.

தென் கொரிய அணியிடம் வீழ்ந்த இலங்கை ரக்பி அணி

ஆசிய விளையாட்டு விழாவில் தான் பங்குபற்றிய இரண்டாவது போட்டியில் 31-24 என தென் கொரிய…

தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய இலங்கை அணி முதல் பாதி முடிவடைய முன்னர் மேலும் இரண்டு ட்ரைகளை வைத்து அசத்தியது. ஸ்ரீநாத் சூரியபண்டார மற்றும் தரிந்த ரத்வத்த இலங்கை அணி சார்பாக ட்ரை வைத்தனர்.

முதல் பாதிஇலங்கை 17 – 05 சீனா

அருமையான முதல் பாதியின் பின்னர் சீன அணி ட்ரை ஒன்று வைத்து இலங்கை அணிக்கு அழுத்தம் கொடுத்தாலும், இலங்கை அணி சிறப்பாக விளையாடி வெற்றியை தக்க வைத்துக் கொண்டது.

முழு நேரம்: இலங்கை 17 – 12 சீனா

இதன் மூலம் இலங்கை அணி அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. நாளை பிரபல ஜப்பான் அணியை இலங்கை அரையிறுதியில் சந்திக்கும்


இலங்கை எதிர் ஆப்கானிஸ்தான்

இலங்கை தனது இறுதி குழுமட்ட போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை சந்தித்தது. எதிர்பார்க்கப்பட்டது போலவே இலங்கை அணிக்கு இப்போட்டி இலகுவாக அமைந்தது. இலங்கை அணி 2ஆம் நிமிடத்திலேயே சுதம் சூரியாரச்சி மூலமாக முதல் ட்ரை வைத்து போட்டியில் முன்னிலை பெற்றது. தொடர்ந்து ஸ்ரீனாத் சூரியபண்டார ட்ரை வைத்து முதல் பாதியில் இலங்கை அணிக்கு மேலும் புள்ளிகளை பெற்றுக் கொடுத்தார்.

முதல் பாதி: இலங்கை 14 – 00 ஆப்கானிஸ்தான்

இரண்டாம் பாதியில் இலங்கை அணி தமது வீரர்களை மாற்றி விளையாடியதை காணக்கூடியதாக இருந்தது. அதன்படி கவிந்து பெரேரா ட்ரை வைக்க தொடர்ந்து ரீசா ரபாய்டீன் ட்ரை வைத்து இலங்கை அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

எனினும், தொடர்ந்தும் ஸ்ரீனாத் மற்றும் சுதம் சூரியாரச்சி மேலும் இரண்டு ட்ரைகளை வைத்து இலங்கையின் வெற்றியை இலகுவாக்கினர்.

முழு நேரம்: இலங்கை 36 – 00 ஆப்கானிஸ்தான்