ஜேர்மன் மற்றும் பயென் முனிச் நட்சத்திரங்களுடனான கால்பந்து பயிற்சி

102
Photo Courtesy - Allianz.lk

அலியான்ஸ் காப்புறுதி நிறுவனம் நடாத்தும் இளம் கால்பந்து வீரர்களுக்கான விஷேட பயிற்சி முகாம் இம்முறையும் எதிர்வரும் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் இடம்பெறவுள்ளது.  

கால்பந்திற்கு பிரபலம் மிக்க ஜேர்மன் தேசிய அணி மற்றும் பயென் முனிச் கழகம் என்பவற்றின் விஷேட பயிற்றுவிப்பாளர்களினால் வழங்கப்படும் இந்த பயிற்சி முகாம் இந்தோனேசியா மற்றும் ஜேர்மன் ஆகிய நாடுகளில் இடம்பெறவுள்ளன.

இதில் பங்கு கொள்ள வேண்டும் எனில்

  • 14 முதல் 16 வயது வரை உள்ளவராக இருக்க வேண்டும்.
  • பாடசாலை கால்பந்து வீர/ வீராங்கனையாக இருக்க வேண்டும்.
  • கால்பந்து விளையாட்டில் ஊக்கம் உள்ளவராக இருக்க வேண்டும்.  

மேற்குறிப்பிட்ட தகுதிகளை உள்ளவர்கள் தமது விண்ணப்பங்களை எதிர்வரும் 10ஆம்திகதிக்கு முன்னர் (ஜூன்) கையளிக்க வேண்டும்.

இது குறித்த மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ள அண்மையில் உள்ள அலியான்ஸ் காப்புறுதிக் கிளை ஒன்றில் அல்லது www.alianz.lk என்ற இணைய தள முகவரியினூடாகப் பெற்றுக்கொள்ளலாம்.  

>>விண்ணப்பப் பட்டிவம்