SAG பளுதூக்கலில் தங்கம் வென்று சாதனை படைத்தார் திமாலி

93

தெற்காசிய விளையாட்டு விழா பளுதூக்கல் போட்டியின் மூன்றாவது நாளான இன்றைய தினம் (07)  நடைபெற்ற பெண்களுக்கான பளுதூக்கல் போட்டியில் இலங்கை வீராங்கனை திமாலி ஹபுதென்ன தங்கப் பதக்கம் வென்று பெருமை தேடிக் கொடுத்தார். 

35 வருடகால தெற்காசிய விளையாட்டு விழா வரலாற்றில் பெண்களுக்கான பளுதூக்கலில் இலங்கை பெற்றுக் கொண்ட முதலாவது தங்கப் பதக்கம் இதுவாகும்.

13 ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவில் இன்று மெய்வல்லுனர், பளுதூக்கல், நீச்சல், பெட்மிண்டன், கால்பந்து, கிரிக்கெட் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன.

SAG பளுதூக்கலில் யாழ். மங்கை ஆர்ஷிக்காவுக்கு வெள்ளிப் பதக்கம்

நேபாளத்தின் கத்மண்டுவில் நடைபெற்று வருகின்ற தெற்காசிய விளையாட்டு விழாவில்…

இதில் இலங்கைக்காக பதக்கங்களை பெற்றுக்கொடுக்கின்ற முக்கிய போட்டியாக அமைந்த பளுதூக்கல் போட்டிகளில் பெண்களுக்கான 76 கிலோகிராம் எடைப் பிரிவிற்கு மேற்பட்ட போட்டியில் பங்குகொண்ட திமாலி ஹபுதென்ன, 180 கிலோகிராம் எடையைத் தூக்கி தங்கப் பதக்கத்தை வென்று சாதனை படைத்தார்.

இவர் ஸ்னெச் முறையில் 85 கிலோகிராம் எடையையும், கிலீன் என்ட் ஜேர்க் முறையில் 105 கிலோகிராம் எடையையும் தூக்கி இந்த வெற்றியை தனதாக்கினார். 

இதேநேரம், நேபாளத்தின் அஸ்மிதா ராஜ், 125 கிலோகிராம் எடையைத் தூக்கி வெள்ளிப் பதக்கத்தையும், பங்களாதேஷின் பெரோஷா பர்வின் 115 கிலோகிராம் எடையைத் தூக்கி வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.

இது இவ்வாறிருக்க, பெண்களுக்கான 76 கிலோகிராம் எடைப் பிரிவில் இலங்கை வீராங்ககையான சதுரிகா வீரசிங்க வெள்ளிப் பதக்கம் வென்றார். 

இதன்படி, பளுதூக்கல் போட்டிகளின் மூன்றாவது நாள் நிறைவுக்கு வரும் போது இலங்கை அணி 2 தங்கம், 7 வெள்ளி மற்றும் ஒரு வெண்கலப் பதக்கத்தினை வென்றுள்ளது. நாளை (07) பளுதூக்கல் போட்டிகளின் இறுதி நாளாகும். 

>>தெற்காசிய விளையாட்டு விழா கொடர்பான மேலதிக செய்திகளைப் படிக்க<<