மகளிர் உலகக் கிண்ண தகுதிகாண் தொடர் ஜிம்பாப்வேயில்

192

2022ஆம் ஆண்டுக்கான மகளிர் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கிண்ணத்திற்கு அணிகளை தெரிவு செய்யும் தகுதிகாண் கிரிக்கெட் தொடர் நவம்பர் மாதம் 21ஆம் திகதி தொடக்கம் டிசம்பர் மாதம் 05ஆம் திகதி வரை ஜிம்பாப்வேயில் நடைபெறவிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. 

அவுஸ்திரேலிய கழக அணியில் இணையும் லஹிரு திரிமான்ன 

மொத்தம் 10 நாடுகளின் மகளிர் கிரிக்கெட் அணிகள் பங்குபெறுகின்ற இந்த தகுதிகாண் தொடரில் இருந்து, 2022ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்திற்காக மூன்று அணிகள் தெரிவு செய்யப்படவிருக்கின்றன. 

இவ்வாறு தெரிவு செய்யப்படும் 03 அணிகளும், ஏற்கனவே இந்த தொடருக்கு தெரிவு செய்யப்பட்ட இந்தியா, தென்னாபிரிக்கா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய 05 நாடுகளின் மகளிர் கிரிக்கெட் அணிகளுடன் இணைந்து தொடரில் பங்கெடுக்கவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. 

இதேவேளை தகுதிகாண் தொடரில் பங்கெடுக்கும் அணிகளாக இலங்கை, பங்களாதேஷ், பாகிஸ்தான், அயர்லாந்து, தாய்லாந்து, பபுவா நியூ கினியா, ஐக்கிய அமெரிக்கா, மேற்கிந்திய தீவுகள், நெதர்லாந்து, மற்றும் ஜிம்பாப்வே ஆகியவற்றின் மகளிர் கிரிக்கெட் அணிகள் காணப்படுகின்றன. 

டயலொக் SLC அழைப்பு T20 லீக்கின் போட்டி அட்டவணையில் மாற்றம்!

அதோடு இந்த மகளிர் உலகக் கிண்ணத்திற்கான போட்டி அட்டவணையானது காலக்கிரமத்தில் அறிவிக்கப்படும் எனவும் சர்வதேச கிரிக்கெட் வாரியமானது (ICC இனால்) குறிப்பிட்டுள்ளது.  

இதேநேரம், 2022ஆம் ஆண்டுக்கான மகளிர் கிரிக்கெட் உலகக் கிண்ணத்தொடர் 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் 04ஆம் திகதி தொடக்கம் ஏப்ரல் 03ஆம் திகதி வரை நியூசிலாந்தில் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<