பிஃபா உலகக் கிண்ண போட்டியில் பிரகாசிக்க போகும் இளம் நட்சத்திரங்கள்

1140
Young players who are debut in FIFA world cup

எதிர்வரும் 14 ஆம் திகதி ரஷ்யாவில் ஆரம்பமாகவுள்ள உலகக் கிண்ண போட்டிகளுக்கு அனைத்து அணிகளும் தமது அணியில் இடம்பெறும் வீரர்கள் பற்றிய விபரங்களை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் ஒவ்வொரு அணியிலும் இடம் பிடித்துள்ள 21 வயது மற்றும் அதற்கு குறைந்த வயதுடைய வீரர்களில் தமது திறமைகளை வெளிக்காட்டி இம்முறை உலகக் கிண்ண போட்டிகளில் சிறப்பாக விளையாடுவர் என எதிர்பார்க்கப்படும் 10 இளம் வீரர்கள் பற்றிய கண்ணோட்டம் இது.

2018 பிஃபா உலகக் கிண்ண வாய்ப்பை இழந்த பிரபலங்கள்

இம்மாதம் 14 ஆம் திகதி ரஷ்யாவில் ஆரம்பமாகவுள்ள..

  1. அல்பேர்ட் கட்மன்ட்சன் (Albert Gudmundsson)

உலகக் கிண்ண போட்டித்தொடர் ஒன்றில் முதன் முறையாக பங்கு பற்றும் அணிகளில் ஒன்றான ஐஸ்லாந்து அணியின் 20 வயது இளம் முன்கள வீரரான இவர் இம்முறை அவ்வணியில் முக்கியமாக எதிர்பார்க்கப்படும் வீரர்களில் ஒருவராவர். இவர் இதுவரை தமது தேசிய அணிக்காக நான்கு போட்டிகளில் விளையாடியுள்ளதுடன் மூன்று கோல்களையும் பெற்றுள்ளார்.

  1. வில்ஃப்ரட் ந்டீடி (Wilfred Ndidi)

இங்கிலாந்தின் லைஸ்டர் சிட்டி கழகத்தின் மத்திய கள வீரரான இவர் இம்முறை நைஜீரியா தேசிய அணியில் இடம்பெற்றுள்ள 21 வயது இளம் வீரர் ஆவார். 2015 ஆம் ஆண்டு தனது அறிமுக போட்டியில் விளையாடிய இவர் இதுவரை நைஜீரியா அணிக்காக 16 போட்டிகளில் விளையாடியுள்ளார்

  1. யோரி டியல்மன்ஸ் (Youri Tielemans) 

உலகின் சிறந்த இளம் வீரர்களில் ஒருவராக கருதப்படும் 21 வயதான இவர் பெல்ஜியம் அணியில் இடம் பிடித்துள்ளார். இம்முறை உலகக் கிண்ண போட்டிகளில் சிறப்பாக செயல்படுவார் என எதிர்பார்க்கப்படும் மற்றுமொரு இளம் வீரராகவும் இவர் இருக்கின்றார்.

பிரான்ஸ் நாட்டின் மொனாக்கோ கழகத்திற்காக விளையாடி வரும் இவர் தனது 16 வயதில் ஐரோப்பிய சம்பியன்ஸ் கிண்ண போட்டிகளில் மொனாக்கோ அணி சார்பாக விளையாடியவர். குறைந்த வயதில் ஐரோப்பிய சம்பியன்ஸ் கிண்ண போட்டிகளில் விளையாடிய பெல்ஜியம் வீரர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரரான இவர் பெல்ஜியம் தேசிய அணிக்காக இதுவரை ஏழு போட்டிகளில் விளையாடியுள்ளார்

  1. கொன்காலோ குவேஸ் (Goncalo Guedes)

இம்முறை போர்த்துக்கல் அணியின் உலகக் கிண்ண குழாமில் இடம் பெற்றுள்ள 21 வயது வீரரான குவேஸ் ஸ்பெயின் நாட்டின் வெலன்சியா கழகத்துக்காக விளையாடுகிறார். போர்த்துக்கல் அணியின் நட்சத்திர வீரரான கிரிஸ்டியானோ ரொனால்டோவை முன்மாதிரியாக கொண்டு விளையாடும் இவர் போர்த்துக்கல் தேசிய அணி சார்பாக இதுவரை ஒன்பது போட்டிகளில் விளையாடி ஒரு கோல் பெற்றுள்ளார்

  1. ரொட்ரிகோ பென்டங்குர் (Rodrigo Bentancur)

21 வயதான உருகுவே மற்றும் இத்தாலியின் ஜுவென்டஸ் கழகத்தின் மத்தியகள வீரரான இவரும் இம்முறை உலகக் கிண்ண போட்டிகளில் எதிர்பார்க்கப்படும் வீரர்களில் ஒருவர் ஆவார். 2017 ஆம் ஆண்டு உருகுவே தேசிய அணியில் இடம் பிடித்த இவர் இதுவரை தனது அணி சார்பாக ஆறு போட்டிகளில் விளையாடியுள்ளார்.  

  1. அலெக்ஸன்டர் ஆர்னோல்ட் (Alexander-Arnold)

19 வயது இளம் பின்கள வீரரான இவர் ரஷ்யா செல்லும் இங்கிலாந்து அணியில் முதன் முறையாக இடம் பிடித்துள்ளார். மேலும் உலகக் கிண்ண போட்டிகளில் தனது தேசிய அணிக்கான அறிமுக போட்டியில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இங்கிலாந்தின் பிரபல கழகமான லிவர்பூல் அணிக்காக விளையாடும் இவர் அண்மையில் நடைபெற்ற ஐரோப்பிய சம்பியன்ஸ் கிண்ண இறுதிப் போட்டியில் விளையாடி லிவர்பூல் அணி சார்பாக ஐரோப்பிய சம்பியன்ஸ் கிண்ண இறுதி போட்டியொன்றில் விளையாடிய இளம் வீரர் என்ற பெருமையை பெற்றிருந்தார்

  1. ஊஸ்மான் டெம்பேலே (Ousmane Dembele)

பார்சிலோனா மற்றும் பிரான்ஸ் அணியின் 21 வயது முன்கள வீரரான டெம்பேலே இம்முறை உலகக் கிண்ண போட்டிகளில் விளையாடும் பிரான்ஸ் அணியில் இடம்பிடித்துள்ளார். பார்சிலோனா அணியில் இருந்து விலகிய நெய்மரின் இடத்தை பூர்த்தி செய்யும் முகமாக இவர் 2017 ஆம் ஆண்டு 105 மில்லியன் யூரோக்களுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்.

பார்சிலோனா அணிக்காக சிறப்பாக விளையாடி வரும் இவர் இவ்வருட உலகக் கிண்ண போட்டிகளில் தனது திறமைகளை வெளிக்காட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர் பிரான்ஸ் தேசிய அணிக்காக 11 போட்டிகளில் விளையாடி இரண்டு கோல்களையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்

உலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் வீரர்கள் பட்டியலில் கோஹ்லி

உலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் விளையாட்டு …

  1. மார்கஸ் ரஷ்பஃர்ட் (Marcus Rashford)

இங்கிலாந்து மற்றும் மென்செஸ்டர் யுனைடட் கழகங்களின் முன்கள வீரரான இவர் தான் விளையாடிய பல அறிமுக போட்டிகளில் கோல் பெற்றுள்ளார். இது இவர் மீதான எதிர் பார்ப்பை அதிகரிக்கின்றது. அந்த வகையில் மென்செஸ்டர் யுனைடட் அணி சார்பாக இவர் அறிமுகமாகிய பிரீமியர் லீக், ஐரோப்பிய சம்பியன்ஸ் கிண்ணம் மற்றும் ஐரோப்பா கிண்ணம் போன்ற போட்டிகளில் கோல் பெற்றுள்ளதோடு ஐரோப்பிய ஒன்றியம் நடாத்தும் போட்டிகளில் அவ்வணி சார்பாக அறிமுக போட்டியில் கோல் பெற்ற இளம் வீரரும் இவராவார்.

மேலும் இங்கிலாந்து தேசிய அணிக்காக விளையாடிய அறிமுக போட்டியிலும் கோல் பெற்றதன் மூலம் இங்கிலாந்து அணி சார்பாக அறிமுக போட்டியில் கோல் பெற்ற இளம் வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியிருந்தார். தற்போது 20 வயதான இவர் இம்முறை உலகக் கிண்ண போட்டிகளில் சிறப்பாக விளையாடுவார் என பலராலும் எதிர்பார்க்கப்படும் வீரர்களில் ஒருவராவார்

  1. கேப்ரியல் ஜெசூஸ் (Gabriel Jesus)

இங்கிலாந்து பிரீமியர் லீக் சம்பியனான மென்செஸ்டர் சிட்டி அணியின் நட்சத்திர வீரரும் பிரேசில் அணியின் 21 வயது முன்கள வீரரான ஜெசூஸ் மென்செஸ்டர் சிட்டி அணிக்காக 20 கோல்களும் பிரேசில் தேசிய அணிக்காக ஒன்பது கோல்களும் இதுவரை பெற்றுள்ளார். இதன் மூலம் இவர் இம்முறை உலகக் கிண்ண தொடரில் சிறப்பாக செயல்படுவார் என கால்பந்து ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இளம் வீரர் என்பதில் எவ்வித ஐயமுமில்லை

  1. கிலியன் ம்பாபே (Kylian Mbappe)

ரஷ்யா உலகக் கிண்ண தொடரில் விளையாடும் இளம் வீரர்களில் முதன்மையான வீரர் ம்பாப்பே என்றால் அது மிகையாகாது. 19 வயதான பிரான்ஸ் அணியின் சிறந்த இளம் முன்கள வீரரான இவர் பிரான்ஸ் நாட்டின் பரிஸ் செயிண்ட் ஜேர்மன் (பி.எஸ்.ஜி) கழகத்தில் விளையாடி வருகிறார்.

180 மில்லியன் யூரோ என்ற பெரும் தொகைக்கு ஒப்பந்தமான இவர் இம்முறை பி.எஸ்.ஜி கழகம் சம்பியன் பட்டம் வெல்ல தனது பங்கினை சிறப்பாகவே வழங்கியிருந்தார். இதுவரை அவ்வணி சார்பாக 13 கோல்கள் பெற்றுள்ளதுடன் பிரான்ஸ் தேசிய அணிக்காக 14 போட்டிகளில் விளையாடி மூன்று கோல்களையும் மப்பே பெற்றுள்ளார்.

>> மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<