சாதனை படைத்து எண்டர்சனைப் பின்தள்ளி முன் சென்றார் யசீர் ஷா

292
Yasir Shah

இங்கிலாந்து – பாகிஸ்தான் கிரிக்கட் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் லோர்ட்ஸில் நடைபெற்றது. இதில் பாகிஸ்தான் அணி 75 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்குப் பாகிஸ்தான் அணியின் லெக் ஸ்பின்னர் யாசீர் ஷா முக்கிய பங்கு வகித்தார்.

இந்த டெஸ்டில் அவர் மொத்தம் 141 ஓட்டங்களைக் கொடுத்து 10 விக்கட்டுகளை அள்ளினார். முதல் இனிங்ஸில் 6 விக்கட்டுகளும், 2ஆவது இனிங்ஸில் 4 விக்கட்டுகளும் வீழ்த்தினார். இத்துடன் 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 86 விக்கட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இதன்மூலம் ஐ.சி.சி.யின் டெஸ்ட் பந்து வீச்சாளர் தரவரிசையில் முதல் இடத்தில் இருந்த இங்கிலாந்து அணி வேகப்பந்து வீச்சாளர் எண்டர்சனைப் பின்தள்ளி முதல் இடம்பிடித்தார்.

இதன்மூலம் லெக் ஸ்பின்னர் என்ற அடிப்படையில் பல பெருமைகைளையும் பெற்றுள்ளார். இதற்கு முன் கடந்த 2005ஆம் ஆண்டு லெக் ஸ்பின் ஜாம்பவான் ஷேன் வோன் தரவரிசையில் முதல் இடத்தில் இருந்தார். அதன்பின் ஒரு லெக் ஸ்பின் பந்து வீச்சாளர் தரவரிசையில் முதல் இடம் பிடிப்பது இப்போதுதான். மேலும், பாகிஸ்தானில் முஸ்டாக் அஹமது 1996ஆம் ஆண்டு டெஸ்ட் தரவரிசையில் முதல் இடம் பிடித்திருந்தார். அதன் பிறகு சுமார் 20 ஆண்டுகள் கழித்து பாகிஸ்தான் வீரர் தற்போது முதல் இடம்பிடித்துள்ளார்.

13 போட்டிகளில் 86 விக்கட்டுகளை வீழ்த்திய யாசீர் ஷா இன்னும் 3 டெஸ்டில் 14 விக்கட்டுகளை வீழ்த்தி 100 விக்கட்டுகளை எடுத்தால் 1896ஆம் ஆண்டு ஜார்ஜ் லோமான் சாதனையை சமன் அல்லது முறியடிக்க வாய்ப்புள்ளது.

லோர்ட்ஸ் போட்டிக்கு முன் யாசீர் ஷா தரவரிசையில் 4ஆவது இடத்தில் இருந்தார். இந்தப் போட்டியின் 2ஆவது நாள் ஆட்டத்தில் மைதானம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமற்ற நிலையில் இருந்தபோதும் தனது அபார பந்து வீச்சால் 72 ஓட்டங்களைக் கொடுத்து 6 விக்கட்டுகளை வீழ்த்தினார். பின்னர் 2ஆவது இனிங்ஸில் 69 ஓட்டங்களைக் கொடுத்து 4 விக்கட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் மூன்று இடங்கள் முன்னேறி முதல் இடத்தைப் பிடித்துள்ளார். முதல் இடத்தில் இருந்த எண்டர்சன் 3ஆவது இடத்திற்குப் பின்தள்ளப்பட்டுள்ளார். இந்திய வீரர் அஸ்வின் 2ஆவது இடத்திலுள்ளார்.

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்