உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் வெற்றி பெறும் அணிக்கான பரிசு என்ன?

115
AFP via Getty Images

சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ICC) தமது உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் பங்குபற்றிய அணிகளுக்கு வழங்கப்படவுள்ள பரிசுத்தொகை பற்றிய அறிவிப்பினை திங்கட்கிழமை (15) மாலை வெளியிட்டிருக்கின்றது.

ஐ.சி.சியின் மே மாதத்துக்கான சிறந்த வீரராக முஷ்பிகுர் ரஹீம் தெரிவு

முதன்முறையாக நடைபெறும் ICC உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி  எதிர்வரும் வெள்ளிக்கிழமை (18) செளத்தம்ப்டன் ஹம்ப்ஷைர் போல் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ள நிலையில் குறித்த இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் விளையாடவிருக்கின்றன. 

அதன்படி இந்த இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு பரிசுத்தொகையாக இலங்கை நாணயப்படி 31.6 கோடி ரூபாய்கள் (1.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள்) வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருப்பதோடு, வெற்றி பெறும் அணிக்கு ICC இன் Test Championship Mace உம் வெற்றிக்கேடயமாக கொடுக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. 

ICC இன் Test Championship Mace

மறுமுனையில், ICC உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரில் இரண்டாம் இடம் பெறும் அணிக்கு இலங்கை நாணயப்படி 15.8 கோடி (800,000 அமெரிக்க டொலர்கள்) ரூபாய்கள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. 

இதேநேரம், தொடர் சமநிலையில் நிறைவுறும் சந்தர்ப்பத்தில் இறுதிப் போட்டிக்கு வழங்கப்படும் மொத்த பரிசுத்தொகை இரண்டு அணிகளுக்கும் சமமாக பிரித்து வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளதோடு ICC இன் Test Championship Mace இன் உரிமையினையும் இரு அணிகளும் தாம் வெற்றியாளர்களாக இருக்கும் சந்தர்ப்பத்தில் சம அளவில் வைத்துக்கொள்ள முடியும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது. 

Video – T20 World Cup: இலங்கையில் நடைபெறுவது நனவாகுமா? கனவாகுமா?

அதேநேரம், ICC உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரில் மூன்றாம் இடத்தினைப் பெறும் அணிக்கு இலங்கை நாணயப்படி 8.9 கோடி (450,000 அமெரிக்க டொலர்களும்) ரூபாய்களும், நான்காம் இடத்தினைப் பெறும் அணிக்கு 3.9 கோடி (200,000 அமெரிக்க டொலர்களும்) ரூபாய்களும் தொடரில் பங்குபற்றிய ஏனைய நான்கு அணிகளுக்கும் 1.9 கோடி ரூபாய்களும் (100,000 அமெரிக்க டொலர்களும்) வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. இதன்படி, இலங்கை கிரிக்கெட் அணிக்கு ICC உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரில் பங்குபற்றியதற்கு பரிசுத்தொகையாக இலங்கை நாணயப்படி 1.9 கோடி ரூபாய்கள் கிடைக்கவுள்ளது. 

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…