ICC டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான இந்திய குழாம் அறிவிப்பு

ICC World Test Championship - 2021

133
BCCI

நியூசிலாந்துக்கு எதிராக எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஆரம்பமாகவுள்ள அங்குரார்ப்பண உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான 15 வீரர்கள் கொண்ட இந்திய குழாத்தை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது.

இந்தியா, நியூசிலாந்து அணிகள் பங்கேற்கும் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி எதிர்வரும் (ஜூன்) 18 முதல் 22ஆம் திகதிவரை இங்கிலாந்தின் சௌதாம்ப்டன் மைதானத்தில் நடைபெறவுள்ளது

முதல்முறையாக இத்தொடர் நடைபெறவுள்ளதால், இறுதிப் போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்பதைக் காண ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.

ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான நியூசிலாந்து குழாம் அறிவிப்பு

இந்த நிலையில் இறுதிப் போட்டிக்கான நியூசிலாந்து அணி வீரர்கள் பட்டியல் இன்று காலை வெளியாகியிருந்த நிலையில், தற்போது விராத் கோஹ்லி தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய குழாம் விபரம் வெளியாகியுள்ளது.

இந்திய அணியில் ஐந்து வேகப் பந்துவீச்சாளர்கள், இரண்டு விக்கெட் காப்பளர்கள், 2 சுழல் பந்துவீச்சாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இதன்படி, இறுதி போட்டிக்கான இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக சுப்மன் கில் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மயன்க் அகர்வால் அணியில் சேர்க்கப்படவில்லை

இதேபோல புஜாரா, விராட் கோஹ்லி, அஜிங்கியா ரஹானே, ஹனுமா விஹாரி ஆகியோரின் பெயர் வழக்கம்போல அணியில் இடம்பெற்றுள்ளது.

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் வெற்றி பெறும் அணிக்கான பரிசு என்ன?

விக்கெட் காப்பளர்களாக ரிஷாப் பாண்ட் மற்றும் விருதிமான் சஹாவின் பெயர் இடம்பெற்றுள்ளது

அதேபோல் ரவிச்சந்திரன் அஷ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகிய இருவரின் பெயரும் 15 வீரர்கள் கொண்ட இந்திய அணியில் இடம்பெற்றுள்ளது.

இதனிடையே, வேகப் பந்துவீச்சாளர்கள் வரிசையில் ஜஸ்பிரிட் பும்ரா, ஷாந்த் சர்மா, மொஹமட் ஷமி, உமேஷ் யாதவ் மற்றும் மொஹமட் சிராஜ் ஆகியோரின் பெயர் இடம்பெற்றுள்ளது.

டெஸ்ட் சம்பியன்ஷிபப் இறுதிப் போட்டிக்கான 15 வீரர்கள் கொண்ட இந்திய குழாம்

விராத் கோஹ்லி (தலைவர்), அஜிங்கியா ரஹானே (உப தலைவர்), ரோஹித் சர்மா, சுப்மன் கில், விராட் கோஹ்லி, செட்டீஸ்வர் புஜாரா, ஹனுமா விஹாரி, ரிஷாப் பாண்ட், விருதிமான் சஹா, ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, ஜஸ்பிரித் பும்ரா, ஷாந்த் சர்மா, மொஹமட் ஷமி, உமேஷ் யாதவ் மற்றும் மொஹமட் சிராஜ்.

 மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…