SAFF சம்பியன் கிண்ணம் வெல்வதே இலங்கை அணியின் இலக்கு

SAFF Championship

385

அடுத்த மாதம் இடம்பெறவுள்ள தற்காசிய கால்பந்து சம்மேளன (SAFF) சம்பியன்ஷிப் தொடரில் கிண்ணம் வெல்வதே இலங்கை கால்பந்து அணிக்கு வழங்கப்பட்டுள்ள இலக்கு என்று இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் ஜஸ்வர் உமர் தெரிவித்துள்ளார்.

இலங்கை அணி அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் 16ஆம் திகதி வரை மாலைதீவுகளில் இடம்பெறவுள்ள SAFF சம்பியன்ஷிப் தொடருக்கான தயார்படுத்தல்களுக்காக கடந்த சனிக்கிழமை சவுதி அரேபியாவின் ரியாத் நகரிற்கு புறப்பட்டுச் சென்றுள்ளது. இந்நிலையில் அவர்கள் நேற்று (19) அங்கு தமது பயிற்சிகளை ஆரம்பித்தனர்.

இலங்கை தேசிய கால்பந்து குழாத்திற்கு புதிய வீரர்கள் இணைப்பு

குறித்த விஜயம் குறித்து ThePapare.com இடம் கருத்து தெரிவித்த கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் ஜஸ்வர் உமர், பயிற்சிகளுக்கு மேலதிகமாக ரியாத்தில் பயிற்சிப் போட்டிகளிலும் இலங்கை அணி பங்கெடுக்க உள்ளதாக தெரிவித்தார்.

நாம் இந்த பயணத்தின்போது அந்நாட்டின் கழகங்களுடன் இரண்டு பயிற்சிப் போட்டிகளில் விளையாட உள்ளோம். போட்டிகளுக்கான தினத்தை பயிற்றுவிப்பாளர் தீர்மானிப்பார்.”

இலங்கை அணி முன்னர் தமது விஷேட பயிற்சிகளுக்கான கட்டார் நாட்டிற்கே பயணம் மேற்கொள்ள இருந்தது. எனினும், கொவிட்-19 டெல்டா வைரஸ் தொற்றினால் அதிகம் பாதிக்கப்பட்ட அபாயகரமான நாடுகளின் (Red Zone) பட்டியலில் இலங்கை இருப்பதனால், கட்டாருக்குள் பிரவேசிப்பதற்கான அனுமதி கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டமையே கட்டாருக்கான இலங்கை கால்பந்து அணியின் பயணம் தடைப்படுவதற்கு காரணமாக இருந்தது என்று அவர் குறிப்பிட்டார்.

SAFF சம்பியன்ஷிப்பின் எதிர்பார்ப்பு குறித்து கருத்து தெரிவித்த அவர், ”சுமார் 25,26 வருடங்களின் பின்னர் எமது நாட்டிற்கு SAFF சம்பியன்ஷிப் வெற்றிக் கிண்ணத்தை கொண்டுவர வேண்டும் என்பது தான் எமது ஒரே எதிர்பார்ப்பு. அதற்காகவே அனைவரும் தம்மை தயார்படுத்தி செயற்பட்டு வருகின்றனர்”  என்றார்.

இதேவேளை, இலங்கை தேசிய கால்பந்து அணியின் பயிற்றுவிப்பாளர்கள் குழாத்தில் இம்முறை புதிதாக உள்நாட்டு பயிற்றுவிப்பாளர்களான மொஹமட் ஹசன் ரூமி மற்றும் தேவசகாயம் ராஜமனி ஆகிய இருவரும் உள்வாங்கப்பட்டுள்ளனர். இவர்களது இணைப்பின் நோக்கம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் தந்த ஜஸ்வர் உமர்,

தேசிய அணிக்கு தமது ஆதரவை வழங்கும் நோக்குடனேயே இவர்கள் அணிக்கு தற்காலிகமாக இணைக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, தற்போது உள்ள கொவிட் சூழ்நிலையில் தலைமைப் பயிற்றுவிப்பாளர் அல்லது பயிற்றுவிப்புக் குழாத்தில் ஒருவருக்கு தொற்று ஏற்பட்டால் எமக்கு மாற்று வழியொன்று இல்லை. இதன் காரணமாகவே அவர்களையும் உள்வாங்கினோம்.

குறிப்பாக இந்த இருவர் குறித்தும், அவர்களது திறமை மற்றும் அனுபவம் தொடர்பில் அனைவருக்கும் தெரியும். அவர்கள் வீரர்கள் குறித்து நன்றாக தெரிந்து வைத்துள்ளனர். எனவே, இருவரதும் இணைப்பு அணிக்கு பெரிய அளவில் பங்களிப்பை வழங்கும்.. எனவே, இந்த பயிற்றுவிப்பாளர்கள் இருவரையும் தேசிய அணிக்கு தற்காலிகமாக பணியாற்ற அனுமதி வழங்கிய அவர்களது கழகங்களுக்கு நான் நன்றி தெரிவித்துக்கொள்கின்றேன்” என்றார்.

தேசிய அணியுடன் இணைந்த ரூமி, தேவசகாயம்

SAFF சம்பியன்ஷிப் போட்டி அட்டவணை அறிவிப்பு

Video – இரட்டை கோலுடன் புதிய பயணத்தை ஆரம்பித்த Ronaldo

இலங்கை குழாத்தில் உள்வாங்கப்பட்டுள்ள, இங்கிலாந்தில் கழக மட்டத்தில் விளையாடும் வீரர்களான டிலன் டி சில்வா மற்றும் மார்வின் ஹமில்டன் ஆகிய இருவரும் 23ஆம் அல்லது 24ஆம் திகதி ரியாத் நகரில் இலங்கை அணியுடன் இணைந்து தொடர்து பயிற்சிகளை மேற்கொள்ளவுள்ளனர்.

இலங்கை அணியினர் இம்மாதம் 27ஆம் திகதி சவுதி அரேபியாவில் இருந்து இலங்கை விமான நிலையத்திற்கு வந்து அங்கிருந்து 3 மணிநேரத்தின் பின்னர் மாலைதீவுகளுக்கான விமானத்தை பெறுவார்கள் என்றும் 28ஆம் திகதி காலை மாலைத்தீவுகளை அடையும் திட்டமே உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது இருக்கும் பயிற்சிக் குழாத்தில் இருந்து இறுதி 23 வீரர்கள் தெரிவு செய்யப்பட்டு, அவர்கள் மாலைதீவுகளுக்கு செல்லவுள்ள நிலையில், எஞ்சிய வீரர்கள் 27ஆம் திகதி நாட்டிற்கு வருவார்கள் என்று குறிப்பிடப்படுகின்றது.

இந்த சுற்றுப் பயணத்திற்கான உதவிகளையும், அனுமதிகளையும் வழங்கிய இலங்கை விளையாட்டுத் துறை அமைச்சுக்கும் சவுதி அரேபியாவில் சகலவித உதவிகளையும் வழங்கும் அந்நாட்டு கால்பந்து சம்மேளனத்திற்கும் நாம் நன்றிகளைத் தெரிவிக்கின்றோம்” என்றும் ஜஸ்வர் உமர் குறிப்பிட்டார்.

SAFF சம்பியன்ஷிப் போட்டிகள் அனைத்தும் இம்முறை மாலைதீவுகளின் தேசிய கால்பந்து அரங்கில் இடம்பெறும். தொடருக்கான போட்டி அட்டவணையில் பல தடவை மாற்றம் மேற்கொள்ளப்பட்டது. இதன்படி, இறுதியாக வெளியான போட்டி அட்டவணை கீழே.

தொடர் அட்டவணை (இலங்கை நேரப்படி

ஒக்டோபர் 01, 2021  

  1. இலங்கை எதிர் பங்களாதேஷ்இரவு30 மணி
  2. நேபாளம் எதிர் மாலைதீவுமாலை30 மணி

ஒக்டோபர் 04, 2021

  1. பங்களாதேஷ் எதிர் இந்தியாமாலை30 மணி
  2. இலங்கை எதிர் நேபாளம்இரவு30 மணி

ஒக்டோபர் 07, 2021

  1. இந்தியா எதிர் இலங்கைமாலை30 மணி
  2. மாலைதீவு எதிர் பங்களாதேஷ்இரவு30 மணி

ஒக்டோபர் 10, 2021 

  1. மாலைதீவு எதிர் இலங்கைமாலை30 மணி
  2. நேபாளம் எதிர் இந்தியாஇரவு30 மணி

ஒக்டோபர் 13, 2021

  1. பங்களாதேஷ் எதிர் நேபாளம்மாலை30 மணி
  2. இந்தியா எதிர் மாலைதீவுஇரவு30 மணி

ஒக்டோபர் 16, 2021

இறுதிப் போட்டிஇரவு 8.30 மணி 

>>மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க…<<