சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையிலான ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டியில் இலங்கை 5 விக்கெட்டுக்களால் வெற்றியைப் பதிவு செய்திருப்பதோடு, மூன்று போட்டிகள் கொண்ட தொடரினையும் 2-0 என இன்னும் ஒரு போட்டி மீதமிருக்க கைப்பற்றியுள்ளது.
>>இளம் வீரர்களுடன் இலங்கையை எதிர்கொள்ளும் நியூசிலாந்<<
முன்னதாக கண்டி பல்லேகல சர்வதேச மைதானத்தில் ஆரம்பமான இந்தப் போட்டி மழையின் தாக்கம் காரணமாக அணிக்கு 44 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. தாமதமான போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணியின் தலைவரான சரித் அசலன்க முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை மேற்கிந்திய தீவுகள் வீரர்களுக்கு வழங்கினார்.
இப்போட்டிக்கான இலங்கை அணி தொடரில் 1-0 என முன்னிலை பெற்றிருந்த நிலையில் ஒரு மாற்றத்துடன் களம் கண்டது. சுழல்வீரரான ஜெப்ரி வன்டர்செய் மகீஷ் தீக்ஸன மூலம் பிரதியிடப்பட்டிருந்தார்.
இலங்கை XI
நிஷான் மதுஷ்க, அவிஷ்க பெர்னாண்டோ, குசல் மெண்டிஸ், கமிந்து மெண்டிஸ், சரித் அசலன்க (தலைவர்), சதீர சமரவிக்ரம, ஜனித் லியனகே, வனிந்து ஹஸரங்க, துனித் வெல்லாலகே, மகீஷ் தீக்ஸன, அசித பெர்னாண்டோ
தொடர்ந்து நாணய சுழற்சிக்கு அமைய துடுப்பாடிய மேற்கிந்திய தீவுகள் அணியானது சுழல்பந்துவீச்சிற்கு தடுமாற்றம் காண்பித்தது. அணியின் முன்வரிசை வீரர்களான பிரண்டன் கிங் (16), அலிக் அதான்ஷே (01) மற்றும் ஷாய் ஹோப் (05) என அனைவரும் ஏமாற்றினர். எனினும் மத்திய வரிசையில் வந்த துடுப்பாட்டவீரர்களான ஷெர்பானே ரத்தர்போர்ட் மற்றும் பின்வரிசையின் குட்டாகேஷ் மோட்டி ஆகிய இருவரும் சற்று ஆறுதல் தந்தனர்.
இதனால் மேற்கிந்திய தீவுகள் அணியானது 36 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 189 ஓட்டங்கள் எடுத்தது. அவ்வணியின் துடுப்பாட்டம் சார்பாக ஷெர்பானே ரத்தர்போர்ட் 4 சிக்ஸர்கள் மற்றும் 7 பௌண்டரிகள் அடங்கலாக 80 ஓட்டங்கள் எடுத்தார். மறுமுனையில் குட்டாகேஷ் மோட்டி 50 ஓட்டங்களைப் பெற்றார்.
>>வளர்ந்து வரும் அணிகளுக்கிடையிலான ஆசியக்கிண்ணத்தின் அரையிறுதியில் இலங்கை!<<
இலங்கை பந்துவீச்சில் வனிந்து ஹஸரங்க 40 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களைச் சாய்க்க அசித பெர்னாண்டோ மற்றும் மகீஷ் தீக்ஸன ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்தனர்.
பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 190 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை அணியானது 38.2 ஓவர்களில் போட்டியின் வெற்றி இலக்கினை 5 விக்கெட்டுக்களை இழந்து அடைந்து கொண்டது.
இலங்கை அணியின் வெற்றியினை உறுதி செய்த வீரர்களில் அணித்தலைவர் சரித் அசலன்க 61 பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் 7 பெளண்டரிகள் அடங்கலாக 62 ஓட்டங்கள் எடுத்தார். அத்துடன் இது அவர் இந்த ஒருநாள் தொடரில் பெற்ற இரண்டாவது அரைச்சதமானது. அதேவேளை நிஷான் மதுஷ்க மற்றும் சதீர சமரவிக்ரம ஆகிய இருவரும் தலா 38 ஓட்டங்கள் வீதம் பெற்றனர்.
மேற்கிந்திய தீவுகள் பந்துவீச்சில் அல்சாரி ஜொசேப் 2 விக்கெட்டுக்களைச் சாய்த்தும் அது பிரயோஜனமாக அமைந்திருக்கவில்லை. போட்டியின் ஆட்டநாயகனாக இலங்கை அணியின் சுழல்வீரரான மகீஷ் தீக்ஸன தெரிவு செய்யப்பட்டார்.
அடுத்ததாக இலங்கை – மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி சனிக்கிழமை (26) நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
போட்டியின் சுருக்கம்
Result
Batsmen
R
B
4s
6s
SR
Brandon King
c & b Asitha Fernando
16
18
3
0
88.89
Alick Athanaze
b Maheesh Theekshana
1
3
0
0
33.33
Keacy Carty
b Maheesh Theekshana
6
14
1
0
42.86
Shai Hope
b Asitha Fernando
5
6
0
0
83.33
Sherfane Rutherford
c Dunith Wellalage b Asitha Fernando
80
82
7
4
97.56
Roston Chase
b Wanindu Hasaranga
8
14
0
0
57.14
Romario Shepherd
c Maheesh Theekshana b Wanindu Hasaranga
4
2
1
0
200.00
Hayden Walsh
b Wanindu Hasaranga
1
7
0
0
14.29
Alzarri Joseph
b Wanindu Hasaranga
1
4
0
0
25.00
Gudakesh Motie
not out
50
61
6
0
81.97
Jayden Seales
c & b Wanindu Hasaranga
5
6
1
0
83.33
Extras
12 (b 2 , lb 6 , nb 1, w 3, pen 0)
Total
189/10 (36 Overs, RR: 5.25)
Bowling
O
M
R
W
Econ
Maheesh Theekshana
9
1
25
3
2.78
Asitha Fernando
7
0
35
3
5.00
Dunith Wellalage
6
0
36
0
6.00
Wanindu Hasaranga
8
0
40
4
5.00
Charith Asalanka
4
0
26
0
6.50
Kamindu Mendis
2
0
19
0
9.50
Batsmen
R
B
4s
6s
SR
Nishan Madushka
b Alzarri Joseph
38
44
6
0
86.36
Avishka Fernando
c Brandon King b Alzarri Joseph
9
12
1
0
75.00
Kusal Mendis
b Gudakesh Motie
3
13
0
0
23.08
Sadeera Samarawickrama
c Shai Hope b Roston Chase
38
50
6
0
76.00
Charith Asalanka
not out
62
61
7
1
101.64
Janith Liyanage
run out (Brandon King)
24
34
2
1
70.59
Kamindu Mendis
not out
11
16
0
0
68.75
Extras
5 (b 0 , lb 3 , nb 0, w 2, pen 0)
Total
190/5 (38.2 Overs, RR: 4.96)
Bowling
O
M
R
W
Econ
Gudakesh Motie
9
2
18
1
2.00
Alzarri Joseph
6
0
30
2
5.00
Jayden Seales
3
0
20
0
6.67
Hayden Walsh
5
0
41
0
8.20
Romario Shepherd
4
0
23
0
5.75
Roston Chase
8.2
0
43
1
5.24
Alick Athanaze
3
0
12
0
4.00
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<



















