மேற்கிந்திய தீவுகள், அவுஸ்திரேலியா, தென் ஆபிரிக்கா ஆகிய 3 அணிகள் பங்குகொள்ளும் மேற்கிந்திய முத்தரப்பு ஒருநாள் போட்டித் தொடரின் 6ஆவது போட்டி நேற்று பெசட்டார் மைதானத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் போட்டியை நடாத்தும் மேற்கிந்திய தீவுகள் தென் ஆபிரிக்கா அணியை எதிர்த்து விளையாடியது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைவர் ஜேசன் ஹோல்டர் முதலில் தென் ஆபிரிக்கா அணியைத் துடுப்பாட அழைப்புவிடுத்தார்.
போட்டியின் சுருக்கம்
தென் ஆபிரிக்கா 343/4 (50)
ஹசீம் அம்லா 110
பெப் டுப்லசிஸ் 73*
குயிண்டன் டி கொக் 71
கிரோன் பொலார்ட் 64/2
மேற்கிந்திய தீவுகள் 204/10 (38)
ஜொன்சன் சார்ல்ஸ் 49
மார்லன் சாமுவேல்ஸ் 24
என்டர் ப்ளேசர் 21
இம்ரான் தாஹிர் 45/7
இந்தப் போட்டியில் தென் ஆபிரிக்கா அணி 139 ஓட்டங்களால் இலகுவான வெற்றியைப் பதிவுசெய்தது. போட்டியின் ஆட்ட நாயகனாக மேற்கிந்திய துடுப்பாட்ட வீரர்களைத் திணறடித்து 7 விக்கட்டுகளை சாய்த்த இம்ரான் தாஹிர் தெரிவுசெய்யப்பட்டார்.
இந்த முத்தரப்பு ஒருநாள் போட்டித் தொடரின் 7ஆவது போட்டி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. இதில் அவுஸ்திரேலியா மற்றும் தென் ஆபிரிக்கா அணிகள் மோதுகின்றன.
மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்