அறிமுக வீரருடன் பங்களாதேஷை எதிர்கொள்ளவிருக்கும் மே.இ. தீவுகள் 

113
West Indies hand maiden ODI call-up to Ackeem Auguste for tour of Bangladesh

மணிக்கட்டு உபாதைக்கு முகம் கொண்ட, முன்வரிசை வீரர் எவின் லூயிஸிற்குப் பதிலாக பங்களாதேஷ் தொடருக்கான மேற்கிந்திய தீவுகள் ஒருநாள் அணியில் அறிமுக வீரரான அகீம் அகஸ்டே இணைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டிருக்கின்றது.

>>Mitchell Starc eyes BBL return after 11 years<<

மேற்கிந்திய தீவுகள் அணியானது இந்த மாத நடுப்பகுதியில் பங்களாதேஷ் சென்று அங்கே மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் T20I தொடர்களில் ஆடுகின்றது. இந்த தொடர்களில் முதலாவதாக ஒருநாள் தொடர் இடம்பெறவிருக்கும் நிலையில் ஒருநாள் குழாத்திற்கான மேற்கிந்திய தீவுகள் அணியிலேயே அகீமிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றது.

அதேநேரம் இந்த ஆண்டின் ஆரம்பத்தில் மேற்கிந்திய தீவுகளுக்காக டெஸ்ட் அறிமுகம் பெற்ற சுழல்பந்துவீச்சாளரான காரி பெர்ரே, குட்டாகேஷ் மோட்டியுடன் மேற்கிந்திய தீவுகள் ஒருநாள் அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.

இதேநேரம் ரொஸ்டன் சேஷ், அலிக் அதான்ஷி மற்றும் ஷமார் ஜோசேப் ஆகிய வீரர்களும் மேற்கிந்திய தீவுகள் குழாத்தில் உள்வாங்கப்பட்டிருக்கின்றனர். ஷாமர் ஜோசேப் பங்களாதேஷூடனான ஒருநாள் மற்றும் T20i தொடர் ஆகிய இரண்டு குழாம்களிலும் உள்வாங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவர்கள் ஒரு பக்கமிருக்க ரமோன் சிம்மோன்ஸ் மற்றும், ஆமீர் ஜான்கோ ஆகிய வீரர்களும் மேற்கிந்திய தீவுகள் T20i குழாமில் இணைக்கப்பட்டுள்ளனர்.

பங்களாதேஷ் – மேற்கிந்திய தீவுகள் இடையிலான ஒருநாள் தொடரானது ஒக்டோபர் 18 தொடக்கம் டாக்காவில் ஆரம்பிக்கவிருக்கும் நிலையில், T20i தொடர் ஒக்டோபர் 27 சட்டோக்ரமில் ஆரம்பமாகுகின்றது.

மேற்கிந்திய தீவுகள் ஒருநாள் குழாம்

 

ஷேய் ஹோப் (தலைவர்), அலீக் அதான்ஷி, அகீம் அகஸ்டே, ஜெடியா பிளேட்ஸ், கீசி கார்டி, ரொஸ்டன் சேஷ், ஜஸ்டின் க்ரீவ்ஸ், ஆமிர் ஜான்கோ, ஷாமர் ஜோசேப், பிரண்டன் கிங், குடாகேஷ் மோட்டி, காரி பெர்ரே, ஷெர்பேன் ரூதர்போர்ட், ஜேய்டன் சீல்ஸ், ரொமாரியோ ஷெப்பர்ட்.

 

மேற்கிந்திய தீவுகள் T20I குழாம்

 

ஷேய் ஹோப் (தலைவர்), அலீக் அதான்ஷி, அகீம் அகஸ்டே, ரொஸ்டன் சேஷ், ஜேசன் ஹோல்டர், அகீல் ஹொசைன், ஆமிர் ஜான்கோ, ஷாமர் ஜோசேப், பிரண்டன் கிங், குடாகேஷ் மோட்டி, ரோவ்மேன் பவெல், ஷெர்பேன் ரூதர்போர்ட், ஜேய்டன் சீல்ஸ், ரொமாரியோ ஷெப்பர்ட், ரமோன் சிம்மண்ஸ்

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்<<