வெறும் 27 ஓட்டங்களை மாத்திரம் பெற்று மேற்கிந்திய தீவுகள் சுருண்டதனை அடுத்து, அவுஸ்திரேலியா – மேற்கிந்திய தீவுகள் இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலியா 176 ஓட்டங்களால் அபார வெற்றியினைப் பதிவு செய்திருக்கின்றது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு புதிய பந்துவீச்சுப் பயிற்சியாளர்
இன்னும் இந்த வெற்றியுடன் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரினையும் அவுஸ்திரேலியா 3-0 எனக் கைப்பற்றியிருக்கின்றது. ஜமெய்க்காவில் ஒழுங்கு செய்யப்பட்ட மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலியா (225 & 121) மேற்கிந்திய தீவுகள் (143) ஆகிய அணிகளது முந்தைய இன்னிங்ஸ்களை அடுத்து போட்டியின் வெற்றி இலக்காக 204 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டது.
இந்த வெற்றி இலக்கினை அடைய இரண்டாம் இன்னிங்ஸை ஆரம்பித்த மேற்கிந்திய தீவுகள் அணியானது முதல் ஓவரில் இருந்தே தடுமாறத் தொடங்கியது.
அவுஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் மிச்சல் ஸ்டார்க்கின் பந்துவீச்சிற்கு முகம் கொடுப்பதில் சிக்கலை எதிர் கொண்ட மேற்கிந்திய தீவுகள் அணியில் 7 வீரர்கள் ஓட்டமின்றி ஆட்டமிழந்தனர். இதனால் 14.3 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்த மேற்கிந்திய தீவுகள் அணியானது வெறும் 27 ஓட்டங்கள் மாத்திரம் எடுத்துக் கொண்டது.
மேற்கிந்திய தீவுகள் அணியில் இரட்டை இலக்க ஓட்டங்களை ஜஸ்டின் கீரிவஸ் (11) மாத்திரம் பதிவு செய்தார். மறுமுனையில் மிச்சல் ஸ்டார்க் வெறும் 9 பந்துகளில் 6 விக்கெட்டுக்களைச் சாய்க்க, அவர் வெறும் 15 பந்துகள் இடைவெளியில் 5 விக்கெட்டுக்கள் பிரதியினை இப்போட்டியில் பதிவு செய்தமையும் குறிப்பிடத்தக்கது. அத்துடன் இப்போட்டியில் ஹட்ரிக் சாதனையை நிலைநாட்டிய ஸ்கொட் போலான்ட் 3 விக்கெட்டுக்களைச் சுருட்டினார்.
T20I தொடரினை சமநிலை செய்த பங்களாதேஷ் கிரிக்கெட் அணி
இப்போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி பெற்ற ஓட்டங்கள் அவர்கள் டெஸ்ட் இன்னிங்ஸ் ஒன்றில் பெற்ற அதிகுறைந்த ஓட்டங்களாக மாறியதோடு, டெஸ்ட் போட்டிகள் வரலாற்றில் அணியொன்று பெற்ற இரண்டாவது குறைந்த ஓட்டங்களாகவும் மாறியமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<




















