டினோஷனின் சகலதுறை ஆட்டத்துடன் சென். ஜோன்ஸ் கல்லூரி அணி வெற்றி

1054

19 வயதுக்குட்பட்ட பாடசாலை அணிகள் பங்குபெறும் டிவிஷன்-II கிரிக்கெட் தொடரின் போட்டி ஒன்றில் யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி அணி, வத்தளை லைசியம் சர்வதேச பாடசாலையினை 35 ஓட்டங்களால் வீழ்த்தியிருக்கின்றது. 

தற்போது அணிக்கு 50 ஓவர்கள் கொண்டதாக நடைபெறுகின்ற டிவிஷன்-II கிரிக்கெட் தொடரில், குழு 2 இற்கான போட்டிகளில் யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி அணியினர் மற்றும் வத்தளை லைசியம் சர்வதேச பாடசாலை என்பன இன்று (23) மோதியிருந்தன. 

சென். ஜோன்ஸை இன்னிங்ஸால் வென்றது புனித தோமையர் கல்லூரி

லைசியம் கல்லூரியின் சொந்த அரங்கில் ஆரம்பமான இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற யாழ்ப்பாணம் சென்.ஜோன்ஸ் கல்லூரி அணியின் தலைவர் தெய்வேந்திரம் டினோஷன் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை தனது தரப்பிற்காக பெற்றுக் கொண்டார். 

பின்னர், போட்டியின் நாணய சுழற்சிக்கு அமைவாக துடுப்பாடிய சென். ஜோன்ஸ் கல்லூரி அணியினர் 50 ஓவர்கள் நிறைவுக்கு 09 விக்கெட்டுக்களைப் பறிகொடுத்து 187 ஓட்டங்களைப் பெற்றனர். 

சென். ஜோன்ஸ் கல்லூரி அணியின் துடுப்பாட்டம் சார்பில் அதன் தலைவர் டினோஷன் அதிரடி அரைச்சதம் விளாசி 64 பந்துகளுக்கு 74 ஓட்டங்களை எடுத்திருந்தார். மறுமுனையில், அன்தோனிப்பிள்ளை சுகேதன் 34 ஓட்டங்களை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. 

அதேநேரம், லைசியம் கல்லூரி அணியின் பந்துவீச்சு சார்பில் ஜனித் தருஷன் மற்றும் ஹன்ஷஜா பண்டார ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்திருந்தனர். 

பின்னர், போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 188 ஓட்டங்களை அடைவதற்கு பதிலுக்கு துடுப்பாடிய லைசியம் கல்லூரி அணியினர் 44.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 152 ஓட்டங்களை மாத்திரம் எடுத்து போட்டியில் தோல்வியினைத் தழுவினர். 

லைசியம் கல்லூரி அணியின் துடுப்பாட்டம் சார்பில் ஹன்சஜா பண்டார 39 ஓட்டங்களைப் பெற்றிருக்க, கமித் பவான் 36 ஓட்டங்களை எடுத்தார். 

தாயகம் திரும்பிய இலங்கை லெஜன்ட்ஸ் கிரிக்கெட் அணி

சென். ஜோன்ஸ் கல்லூரி அணியின் துடுப்பாட்டம் சார்பில் அணியின் வெற்றிக்கு உதவியாக இருந்த அதன் தலைவர் டினோஷன் பந்துவீச்சில் 3 விக்கெட்டுக்களை கைப்பற்றி சகலதுறைகளிலும் அசத்தல் ஆட்டத்துடன் தனது தரப்பின் வெற்றியினை உறுதி செய்ய, கஜேந்திரன் தமிழ்க்கதிர் 3 விக்கெட்டுக்களுடன் தனது பங்களிப்பினை வழங்கியிருந்தார். 

இவர்களோடு வினோஜன் 2 விக்கெட்டுக்களையும், சைனமன் சுழல்வீரரான அஸ்நாத் மற்றும் அன்டன் சரண் ஆகியோர் தலா ஒரு விக்கெட்வீதம் சாய்த்தும் தமது தரப்பின் வெற்றிக்கு முடிந்த பங்களிப்பினை செய்தனர்.

போட்டியின் சுருக்கம்

யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி – 187ஃ9 (50) தெய்வேந்திரம் டினோஷன் 74, அன்தோனிப்பிள்ளை சுகேதன் 34, ஹன்சஜா பண்டார 22/3, ஜனித் தருஷன் 31/3

வத்தளை லைசியம் கல்லூரி – 152 (44.3) ஹன்சஜா பண்டார 39, கமித் பவான் 36, தெய்வேந்திரம் டினோஷன் 21/3, கஜேந்திரன் திமிழ்க்கதிர் 27/3

முடிவு – யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி அணி 35 ஓட்டங்களால் வெற்றி 

மேலும் கிரிக்கெட் செய்திகளுக்கு…