புதிய தலைவருடன் இந்தியாவை எதிர்கொள்ளும் ஆஸி.!

Australia tour of India 2023

680

இந்திய அணிக்கு எதிராக நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட T20i தொடருக்கான அவுஸ்திரேலியா குழாம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி 6வது தடவையாக ஒருநாள் உலகக்கிண்ணத்தை அவுஸ்திரேலிய அணி வெற்றிக்கொண்டது.

மன்னார் மண்ணுக்கு பெருமை சேர்த்திருக்கும் கிரிக்கெட் வீராங்கனை

இந்தநிலையில் அவுஸ்திரேலிய அணியில் விளையாடிய பல முன்னணி வீரர்களுக்கு இந்தியாவுக்கு எதிரான தொடரில் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.

இதில் அனுபவ வீரர் டேவிட் வோர்னர் உட்பட அணித்தலைவர் பெட் கம்மின்ஸ், மிச்சல் ஸ்டார்க், ஜோஷ் ஹேஷல்வூட், கெமரூன் கிரீன் மற்றும் மிச்சல் மார்ஷ் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.

முன்னணி வீரர்கள் நீக்கப்பட்டுள்ள நிலையில் விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரர் மெதிவ் வேடின் தலைமையில் அவுஸ்திரேலிய குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் சகலதுறை வீரர் ஆரோன் ஹர்டீ அணியில் இணைக்கப்பட்டுள்ளதுடன், கேன் ரிச்சட்சன் மீண்டும் அணியில் இணைந்துள்ளார்.

இதேவேளை கிளேன் மெக்ஸ்வெல், டிராவிஷ் ஹெட், ஸ்டீவ் ஸ்மித், சீன் எபோட், அடம் ஷாம்பா மற்றும் மார்கஸ் ஸ்டொய்னிஸ் ஆகியோர் உலகக்கிண்ணத்தில் விளையாடியதுடன், இந்திய அணிக்கு எதிரான தொடரிலும் தக்கவைக்கப்பட்டுள்ளனர்.

இந்தியா மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான T20i தொடர் எதிர்வரும் வியாழக்கிழமை (23) ஆரம்பமாகவுள்ளதுடன், டிசம்பர் 3ம் திகதிவரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அவுஸ்திரேலியா குழாம்

மெதிவ் வேட் (தலைவர்), ஆரோன் ஹர்டீ, ஜேசன் பெஹ்ரெண்ரொப், சீன் எபோட், டிம் டேவிட், நேதன் எல்லிஸ், டிராவிஷ் ஹெட், ஜொஸ் இங்லிஷ், கிளேன் மெக்ஸ்வெல், டன்வீர் சங்கா, மெட் ஷோர்ட், ஸ்டீவ் ஸ்மித், மார்கஸ் ஸ்டொய்னிஸ், கேன் ரிச்சட்சன், அடம் ஷாம்பா

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<